தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நேற்று ஜனவரி 8ஆம் தேதி கோவையில் நேரு சினிமாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ‘ஹரா’ படக்குழுவினர்.
இதில் நடிகர் மோகன் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி, மேனேஜர்கள் நமஸ்காரம் சாகுல்ஹமீது, ஒளிப்பதிவாளர் பிரஹத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
“பொங்கலுக்கு துணிவு வாரிசு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிறது. எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் ? என்று மோகனிடம் கேள்வி கேட்டனர்.
இரண்டு படங்களையும் பார்ப்பேன் என்றார். எதை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்டனர்.
எதற்கு முதலுல் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன் என்றார்.
அதனை தொடர்ந்து ரஜினி இடத்திற்கு விஜய் வந்து விட்டாரா? யார் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று கேள்வி கேட்டனர்.
இதற்கு அவர்களிடமே சூப்பர் ஸ்டார் என்றால் யார் என்ற கேள்வி கேட்டார் மோகன். ரஜினி என்றனர் பத்திரிகையாளர்கள்.
அப்படி என்றால்.. அன்றும் இன்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.. விஜய் அஜித் இருவரும் பெரிய நட்சத்திரங்கள் தான். என்று நெத்தியடி பதிலை கொடுத்தார். மோகன்.
Actor Mohan about super star in tamil nadu