பாபா கா தாபா மோசடி..; நல்லது செய்யவே மறுக்கும் மக்கள்… – மாதவன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் பாபா கா தாபா என்று பெயரிடப்பட்ட ஒரு உணவகத்தை வயதான தம்பதியினர் நடத்தி வந்தனர்.

காந்தா பிரசாத் தம்பதியினர் அந்த பகுதியில் பிரபலம்.

அவர்களை குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் யூடியுப் சேனல் நடத்தும் கவுரவ் வாசன்.

அந்த வீடியோவில்… கொரோனா பிரச்சினை காரணமாக காந்தா பிரசாத் நடத்தி வரும் ஓட்டலுக்கு யாரும் யாரும் சாப்பிட வருவதில்லை. அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர் என வீடியோ பதிவிட்டார்.

இதனால் சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கூடியது.

மேலும் நல்ல உள்ளங்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளிக்க தொடங்கினர்.

ஆனால் இந்த நிதியுதவியை கவுரவ் வாசன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் வங்கி கணக்கில் ஏற்றிக் கொண்டார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தெரிந்துக் கொண்ட காந்தா பிரசாத் டெல்லி தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து நிதியுதவி அளித்தவர்கள் கவுரவ் வாசனை கடுமையான திட்டத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்த தகவல்கள் அறிந்துக் கொண்ட நடிகர் மாதவன் தன் ட்விட்டரில்…

பாபா கா தாபா உணவக உரிமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அவர்களை ஏமாற்றிய அந்த மோசடிக்கார ஜோடி (கவுரவ் மற்றும் அவரது மனைவி) கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது”.

இவ்வாறு மாதவன் பதிவிட்டுள்ளார்.

Actor Madhavan reacts to Baba Ka Dhaba cheating allegation

மனித இனத்துக்கு கடவுளின் பரிசு சோனு சூட்..; விஷால் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமே ஹீரோக்களாக வாழும் வேளையில் நிஜத்திலும் ஹீரோவாக மாறியவர் நடிகர் சோனு சூட்.

ஹிந்தி நடிகரான இவர் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

செல்வந்தர்கள் தங்கள் குடும்பத்தோடு ஊரடங்கை கழிக்க ஏழை மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

அப்போது பல்வேறு உதவிகளை செய்து வந்தார் நடிகர் சோனு சூட்.

இதனால் தற்போது வரை பலரும் உதவி கோர சளைக்காமல் உதவி செய்து வருகிறார் இந்த ரியல் ஹீரோ.

தற்போது தன் சினிமா சூட்டிங்கில் பிசியகிவிட்டார்.

இந்த நிலையில் ஹைதராபாத் வந்திருந்த சோனு சூட்டைச் சந்தித்துப் பேசி அவருடன் போட்டோ எடுத்து அதை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷால்.

அதில்… “அற்புதமான ஆன்மா அன்பு சகோதரர் சோனு சூட்டைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்துக்குக் கடவுள் தந்த பரிசு. நீங்கள் செய்து கொண்டிருக்கும், சமூகப் பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள்.

அறிமுகமே இல்லாதவர்களின் குடும்பங்களுக்காகப் பலரும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த பணிகளை கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்”.

இவ்வாறு விஷால் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Actor Vishal lauds Sonu Sood in twitter

குமரியில் ஆரம்பம்.. அதிரடி திட்டம்.. தமிழகத்தை சுற்ற ரெடியாகும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வருடம் மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தன் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன்.

சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளர் என அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் கட்சி சின்னத்தை தன் சட்டையில் டிசைன் செய்து அதையும் பிரபலப்படுத்தி வருகிறார்.

தற்போது கடந்த சில தினங்களாக தன் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் கமல்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கமலின் மூன்று திட்டங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

அதில்…

2021 ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல தயாராகி வருகிறார் கமல்.

கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார்.

முதற்கட்டமாக நெல்லை, திருச்சி, சென்னை என 3 இடங்களில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு.

Kamal Haasan starts his party’s campaign in Kanya Kumari

பேரிடர் காலத்திலும் மக்கள் பணி.; அமைச்சரை கௌரவித்த ஜீ தமிழ் டிவி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீதமிழ்.

ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.

பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியாற்றியதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது.

Zee Tamil award to TN minister Jeyakumar

வெங்கட் பிரபு-ரஞ்சித்-ராஜேஷ்-சிம்பு தேவன் இணையும் ‘விக்டிம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓடிடி ரிலீஸ், வெப் சீரிஸ், சார்ட் பிலிம்ஸ் போல தற்போது ஆந்தாலஜி சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

அதாவது.. சில டைரக்டர்கள் இணைந்து சில படங்களை இயக்குவார்கள். அவற்றை எல்லாம் தொகுத்து உருவாகும் படங்களே ஆந்தாலஜி படங்கள் ஆகும்.

அண்மையில் ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புத்தம் புதுக் காலை என்ற அந்தாலஜி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

அதுபோல வேல்ஸ் நிறுவனம் குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது என்பதையும் நாம் பார்த்தோம்.

இந்நிலையில், வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி புதிய ஆந்தாலஜி படம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த படங்களை வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

விக்டிம் என்ற பெயரில் இந்த படம் உருவாகியுள்ளது. விரைவில் இது வெளியாகவுள்ளது.

New tamil anthology ‘VICTIM’ directed by Venkat Prabhu, Ranjith, Rajesh and Chimbu devan

ரஜினிகாந்த் தயங்கி நிற்க விஜயகாந்த் பாணியில் களமிறங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர். ரஜினிகாந்த் இன்னும் அரசியல் இறங்காமல் தயங்கியே நிற்கிறார்.

விஜயகாந்த கட்சி தொடங்குவதற்கு முன்பும் சரி கட்சி தொடங்கிய பின்பும் சரி தன் படங்களில் தன் தேமுதிக கட்சி சின்னம் கொடி ஆகியவற்றை சில காட்சிகளில் வைத்திருப்பார்.

அரசியலில் நுழையும் சமயத்தில் கட்சி தொடர்பான வசனங்களையும் வைத்திருந்தார்.

என்னதான் ரஜினியுடன் 25 ஆண்டு காலம் அரசியலை தொடர்புபடுத்தி பேசப்பட்டு வந்தாலும் அவர் கட்சி தொடர்பான சின்னங்களையே காட்சிகளையோ வைக்கவில்லை.

பாபா படத்தில் மட்டும் பாபா முத்திரையை பயன்படுத்தினார். (அதுதான் அவரது கட்சி சின்னமா?)

இந்த நிலையில் விஜயகாந்த் பாணியில் அரசியல் கட்சி பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார் கமல்.

தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் கட்சி சின்னத்தை மறைமுகமாக வைத்து பப்ளிசிட்டியை தொடங்கியுள்ளார் கமல்.

நேற்று நவம்பர் 1ல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கோட் அணிந்திருந்தார். அந்த கோட்டின் கை பகுதியில் அவருடைய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சின்னம் தைக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது.

ஒரு கட்சி சார்பற்ற நிகழ்ச்சியில் கமல் இப்படி செய்வது நியாயமா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால் கமல் அது குறித்து கவலைப்பட மாட்டார் என்றே தெரிகிறது.

இதை விஜய் டிவி நிர்வாகத்தினர் எப்படி அனுமதித்தார்கள்-? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Kamal Haasan hosts Bigg Boss with MNM symbol

More Articles
Follows