பினராயி விஜயன்-கெஜ்ரிவாலை அடுத்து மம்தாவை சந்தித்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்த கமல், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

அண்மையில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தி, விரைவில் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்தார்.

இதனிடையில் இந்தியாவில் பல முக்கிய மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சந்தித்து அரசியல் கற்க வந்தேன் என கூறியிருந்தார்.

அதன்பின்னர் டெல்லி முதல்வர் கமல் வீட்டுக்கே வந்து அவரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க கமல்ஹாசன் விமானம் மூலம் இன்று காலை கொல்கத்தா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விரைவில் இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவரை கமல் சந்திப்பது தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விளம்பரத்தில் நடித்து கல்விக்காக 50 லட்சம் உதவிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்தமில்லாமல் உதவிகள் செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த சில நாட்களாக விஜய்சேதுபதி தோன்றும் ஒரு விளம்பரம் டிவிக்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

அது அணில் சேமியா நிறுவனத்தின் ஒரு விளம்பரம் ஆகும்.

தற்போது அதில் பெற்ற சம்பளத்தின் ஒரு பகுதியை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்ச ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த நிதியுதவியை தமிழக அரசிடம் வழங்கி, அவர்கள் மூலமாக உதவிசெய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

மேலும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த அனிதாவின் நினைவாக இந்த நிதியுதவியை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vijay sethupathi donates rs 50 lakhs to TN Govt schools

மூன்று முகம் படத்தை மெர்சலாக காப்பியடித்து விட்டார்; அட்லி மீது புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது.

இப்படம் ரஜினியின் மூன்று முகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என பலரும் கூறி வந்தனர்.

மெர்சல் படக்குழுவினரை கமல் சந்திக்கும்போது கமலின் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டரை பின்னணியில் வைத்து இருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இது ‘மூன்று முகம்’ படத்தின் காப்பி என்று மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.

எனவே ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே ரீமேக் கிங் அட்லி என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளதும், சிறந்த காப்பி அண்ட் பேஸ்ட் டைரக்டர் அட்லி என பிரபல நடிகர் ஒருவர் குறிப்பிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Five star films complaint against Atlee on Moondru Mugam remake issue

மச்சான்ஸ்… நமீதாவுக்கு கல்யாணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா.

இதனைத் தொடர்ந்து சத்யராஜ் மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஆஸ்தான நாயகியாகி அவர்களுடன் நடித்தார்.

‘ஏய்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘சாணக்யா’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ரசிகர்களை இவர் மச்சான்ஸ் என அன்புடன் அழைப்பது வழக்கம்.

பரத்துடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பொட்டு’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அண்மையில் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த வீடியோவில் “நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நமீதா பேசியிருப்பதாவது…

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளோம். உங்களது அனைவருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ்.

என நமீதாவும் பேசியுள்ளார்.

Namitha set to get married to Veerendra aka Veer on 24th Nov 2017

டான்சர் யூனியனுக்கு விஜய் வழங்கிய ரூ.15 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல நடிகர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், ஒரு தனித்திறமைக்கு நாம் ஒரு நடிகரை குறிப்பிடுவோம்.

நடிப்புக்கு கமல், ஸ்டைலுக்கு ரஜினி, ஆக்சனுக்கு அர்ஜுன் என சொல்லுவோம்.

அப்படி டான்ஸ்க்கு என்று நாம் குறிப்பிடும் நடிகர் என்றால் அது நிச்சயம் விஜய்யாக மட்டுமே இருக்க முடியும்.

இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ. 15 லட்சத்தை நன்கொடையாக கொடுத்திருக்கிறாராம் தளபதி.

சூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா. இளைய மகன் கார்த்தி.

இவர்கள் இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை.

கதை அமையும் போது இணைவோம் என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இருவரும் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்திற்காக இணையவுள்ளனர்.

இதில் கார்த்தி, சாயிஷா ஜோடியாக நடிக்க சூர்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட சூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

இந்த பூஜையில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், செளந்தரராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

More Articles
Follows