பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanja karuppuநகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர்.

அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.

திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யவேண்டும் என நினைத்த நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார். இனி மிச்சமாகும் அந்த வாடகைப்பணம் இன்னும் பலரின் பசியாற்ற உதவும் அல்லவா..?

கஞ்சா கருப்புவின் இந்த நல்ல மனசுக்கு ஏற்றபடி அவரது சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ஆம்.. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.

இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டகோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.

மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மொபைல் ஆப் வெளியிட ரஜினி திட்டம்..?

ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மொபைல் ஆப் வெளியிட ரஜினி திட்டம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்று தன் ரசிகர்களை சந்திப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் இன்று சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விரைவில் அவர் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். அப்போது கடந்த முறை போல ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

அச்சமயம் தன்னையும் பொதுமக்களையும் நேரடியாக இணைக்கும் ஒரு செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளாராம்.

அந்த மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் நேரிடை தொடர்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்பப் பணி என தகவல்கள் வந்துள்ளன.

பாதியில் நின்ற சூட்டிங்கை ரஜினி பிறந்தநாளில் தொடங்கினார் தனுஷ்

பாதியில் நின்ற சூட்டிங்கை ரஜினி பிறந்தநாளில் தொடங்கினார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Gautham Menonசிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கினார் கௌதம்மேனன்.

இப்படம் முடிவதற்குள் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இப்படம் முடிவதற்குள் சில பிரச்சினைகள் எழ, விக்ரம் நடிக்க துருவ நட்சத்திரம் என்ற படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.

அதற்குள் தனுஷ், வடசென்னை படத்திற்காக தாடி வளர்க்க சென்றுவிட்டார்.

இதனால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக மீசையில்லாத தனுஷ் வேண்டும் என காத்திருந்தார் கௌதம்.

இப்போது தனுஷ் பக்கா ஷேவிங் செய்துவிட்டு சக்க போடு போடு ராஜா பட இசை விழாவில் சிம்பு உடன் கலந்துக் கொண்டார்.

இனி இந்த சான்ஸை மிஸ் செய்யக்கூடாது என மீண்டும் விக்ரமை டீலில் விட்டுவிட்டு தனுஷை இயக்க வந்துவிட்டார் கௌதம்மேனன்.

இந்நிலையில் இன்று (ரஜினி பிறந்தநாள் 12.12.2017) சென்னை ஓஎம்ஆரில் இன்று இந்த சூட்டிங் தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth stillsஇந்தியா முழுவதும் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் ரஜினியை பார்க்க நாள் முழுவதும் காத்திருப்பது வழக்கம்.

அதுவும் ரஜினியின் பிறந்தநாள் வந்தால், அன்று தலைவரின் தரிசனம் கிடைப்பது தாங்கள் செய்த பாக்கியம் என்பர்.

இன்று ரஜினி தன் 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே, அவரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்க வேண்டும் என திரண்டுள்ளனர்.

இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் ரசிகர்களின் சந்திப்பை தவிர்க்க இன்று ரஜினிகாந்த் பெங்களுர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ரஜினியை சந்திக்கவும் வாழ்த்தவும் முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ரஜினியை அவமதிக்கும் கஜினிகாந்த்; ஆர்யா-ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம்

ரஜினியை அவமதிக்கும் கஜினிகாந்த்; ஆர்யா-ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DQ0eg7KUMAc9RYfஇந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற

தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

முதலில் இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சினிமாவின் பெருமை, இந்திய சினிமாவின் உச்சம், உலகளவில் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் ரஜினிகாந்துக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத்

தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரம் இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான அந்த மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி

ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஜினிகாந்த் என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு. அடையாளம். இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவையும் அதன் வர்த்தகத்தையும் உலகளாவிய

நிலைக்குக் கொண்டு சென்ற உச்ச நட்சத்திரம் அவர்.

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய சினிமா தாண்டி, உலக அளவில் கலைஞர்களும் தலைவர்களும் வாழ்த்தியும் கொண்டாடியும் மகிழும் இந்தத் தருணத்தை அசிங்கப்படுத்தும்

நோக்கில், அவர் பெயரின் முதல் எழுத்தைத் திரித்து ‘கஜினிகாந்த்’ என தான் தயாரிக்கும் ஆபாசப் படத்துக்கு

தலைப்பிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் திரு ரஜினிகாந்த். அவரை அவமதிக்கும் இந்தத் தலைப்பை நடிகர் சங்கம் எப்படி மௌனமான அனுமதிக்கிறது? ரஜினி ரசிகன் என்று தன்னைச் சொல்லிக்

கொள்ளும் ஆர்யா இந்தப் படத்தில் நடிப்பது எத்தனை கபடமான செயல்!

சமூக அக்கறையும் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துவதில் ஆர்வமும் காட்டும் மூத்த கலைஞர் சிவகுமார் போன்றவர்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இந்த நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை

உறுப்பினரான உலகநாயகன் கமல் ஹாஸன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்?

மேலும் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்கணும், பஜனைக்கு வாங்க போன்ற கேவலமான தலைப்புகளை வைத்து மூன்றாம்தர செக்ஸ் படங்களைத் தயாரித்து வரும்

ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காமல் அனுமதிப்பது வேதனை அளிக்கிறது.

இனி இதுபோன்ற தலைப்புகளை தமிழ் சினிமாவில் யாருக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழ் திரையுலகினர் அனைவரின் கொந்தளிப்பையும் ஆர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு GPS-Radar-Satellite phone வழங்க ஜிவி.பிரகாஷ் வலியுறுத்தல்

மீனவர்களுக்கு GPS-Radar-Satellite phone வழங்க ஜிவி.பிரகாஷ் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor GV Prakashஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பலரும் இதுவரை கரை திரும்பவில்லை.

ஒரு சில மீனர்வர்கள் சில தீவுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிலர் கடலில் அடித்து செல்லப்பட்டு சடங்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இன்னும் பல மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதிக்கு நேரடியாக சென்றார் ஜிவி. பிரகாஷ் என்பதை பார்த்தோம்.

தற்போது அவர் ட்விட்டரில் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது..

நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு வழங்க வேண்டும். இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows