தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘வாத்தி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தை வெங்கட் அல்லுரி எழுதி இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஃபார்சுன் ஃபோர் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Dhanush in bilingual film is titled Vaathi

மீனாட்சி அர்ப்பணிப்பு.. பிரிகிடா சூப்பர்.; மாணவிகள் மத்தியில் தன் வேலையை காட்டிய ‘வேலன்’ முகேன்ராவ்

மீனாட்சி அர்ப்பணிப்பு.. பிரிகிடா சூப்பர்.; மாணவிகள் மத்தியில் தன் வேலையை காட்டிய ‘வேலன்’ முகேன்ராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார்.

டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று தனியார் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துக் கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரிப் பேராசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில்…

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசியதாவது…

இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது…

உங்களை போல் தான் நானும், இணையத்தில் இருந்துவிட்டு, இவர்களோடு மேடையில் அமர்ந்திருப்பது பெருமை, சூரி அண்ணனை படப்பிடிப்பில் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது அவ்வளவு காமெடி செய்வார். பிரபு சார் கூட இருப்பவரை அத்தனை நல்ல முறையில் பார்த்து கொள்வார்.

ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கவினுக்கு நன்றி. முகேனும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் கேரவனில் இருக்க மாட்டார், எப்போதும் தொழிலாளர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். முகேன் என்னை ரியல் லைஃபில் ப்ராங்க் பண்ணிருக்கார். பிரிகிடா சுட்டிப்பெண்ணாக நடித்திருக்கிறார்.

இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்த வேலன் படத்தை நீங்கள் ஹிட்டாக்க வேண்டும் நன்றி.

நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன் பேசியதாவது…

இந்த காலேஜில் மூணு வருஷம் முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது பிரபலமாக வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், உங்களுக்கும் பிடிக்கும். முகேனை நான் பார்க்க வேண்டும், படத்தின் கதை கேளு, என என் அம்மா சொன்னார்கள்.

முகேனிடம் பழகிய பிறகு தான் இவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பது தெரிந்தது, மிக நல்ல மனிதர். அவருடைய ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி

நாயகி பிரிகிடா பேசியதாவது…

இங்கு உங்கள் வரவேற்பை பார்க்கும் போது என் கல்லூரி நாட்களை நான் மிஸ் செய்கிறேன். இந்தப் படத்தை பொறுத்தவரை அனைவருமே மிகுந்த ஆதரவு தந்தார்கள் இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம், கோவிடுக்கு பிறகு எனக்கு திருப்பம் தந்த படம் இது. இந்தப்படம் உங்க அனைவருக்கும் பிடிக்கும், நான் தொடர்ந்து சினிமாவில் இருப்பேன். இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…

அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்த கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார்.

சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது.

மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது.

மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

நடிகர் பிரபு பேசியதாவது…

இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்.

பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் பேசியதாவது…

இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார்.

முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார்.

இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர்,
சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது.

வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். நன்றி.

இயக்குநர் கவின் பேசியதாவது…

ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார்.

நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி.

சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும் நன்றி.

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிகிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Bigg Boss Mugen speech at Velan audio launch

சூர்யாவுக்கு நன்றி.; ஷங்கர் மகளுடன் நடித்த நாட்கள் ஜாலி.. – கார்த்தி கலகல

சூர்யாவுக்கு நன்றி.; ஷங்கர் மகளுடன் நடித்த நாட்கள் ஜாலி.. – கார்த்தி கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரிக்கும் – கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கும் #விருமன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது.

நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைகிறேன் என்றார் கார்த்தி.

மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 21ம் தேதி முடைவடைந்தது.

இதை பற்றி கார்த்தி சொல்லும் போது…

“மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும் , ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும்.

என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜாலியானவை.

மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம்.

2D நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் நன்றி! “
இவ்வாறு கூறினார், கார்த்தி.

அறிமுகமாகும் அதிதி ஷங்கர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளார் என்கின்றனர் படபிடிப்பு குழுவினர்.

பொதுவாக இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க.. வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதே போல், தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அதிதி ஷங்கர்.

இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்தில் மேலும், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகியுவுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.

S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.

கலை: ஜாக்கி,
எடிட்டிங் : வெங்கட்ராஜ்,
நடனம் : ஷோபி, பாபா பாஸ்கர், ராதிகா, ஜானி.
PRO:ஜான்சன்

#விருமன் #Viruman ஒரு 2022 சம்மர் வெளியீடு.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்து பட நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Karthi shares his Viruman movie experience

வெற்றிப்பட வரிசையில் ‘ரைட்டர்’.; ரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்திய வெற்றிமாறன்

வெற்றிப்பட வரிசையில் ‘ரைட்டர்’.; ரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்திய வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது.

இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும்.

தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார் வெற்றிமாறன்.

Vetrimaaran praises Pa Ranjith’s Writer film

‘மாநாடு’ பட டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா படங்கள் தான் ; வெங்கட் பிரபு பேச்சு

‘மாநாடு’ பட டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா படங்கள் தான் ; வெங்கட் பிரபு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,..

“சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையை பிடித்துக்கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப்படம் நிரூபித்துவிட்டது. செத்துக்கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து டைரக்டராக மாறி, ஜெயித்து, தோற்று, காணாமல் போய், மீண்டும் திரும்பி வந்து, தற்போது வெற்றி முன்பின் வந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் மாநாடு மூலம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி எனக்கு கிடைத்திருக்கிறது.

ஜப்பானில் இந்தப் படத்தைப் பார்த்த பெண்மணி என் நடிப்பு பிடித்திருக்கிறது என பாராட்டுவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் இந்தப்படத்தில் நான் பேசிய வசனங்களை என்னைப் போல பேசுகின்ற வீடியோக்களையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது,

“இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.. காரணம் இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.. தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அந்தப்படத்தால் பயன்பெற்று, அவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றியை வெளிப்படுத்தும்.

அந்த வகையில் இந்த அனைவரையும் அழைத்து கவுரவப்படுத்திய தயாரிப்பாளருக்கு நன்றி.. அதுமட்டுமல்ல இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ஒரு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் பண்ணிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிஜமாகவே பாராட்டுக்குரியவர்” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது,…

“இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது..

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நலிவடைந்து கிடந்த விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கியதால் மீண்டும் உயிர் பெற்று இதன்மூலம் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அதுதான் மாநாடு படத்தின் உண்மையான வெற்றி.. தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அடுத்து சரியான திட்டமிடலுடன் கண்டிப்புடனும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத்தான் நான் சொல்வேன்..

அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது….

“சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தை பார்த்துவிட்டு பலரும், இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்..

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. இசைஞானி இளையராஜாவே போன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது” என்று கூறினார்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை முதல் முறை மொத்தமாக ரசித்து பார்த்தேன் என்றால் இரண்டாவது முறை பார்க்கும்போது பின்னணி இசை என்னை மிரட்டி விட்டது. அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவை ‘இசைஞானி இளையராஜாவின் 2K வெர்ஷன்’ என்றுதான் நான் சொல்வேன்..

சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.. இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும்.. வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது” என்று பேசினார்

இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது,…

“இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம். இடையில் கோவிட் காரணமாக இந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.. சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார்.. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம் என உறுதியாக நின்றார்

இந்த படம் 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான். சிக்கலான இந்த கதையை எல்லோருமே எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீணுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தி முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் அந்த பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது என கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி.

இன்னைக்கு அவரோட கம்பெனிஇல நான் படம் இயக்கியிருக்கிறேன்.. அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்..

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்

Director Venkat Prabhu speech at Maanaadu success meet

பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

பட்டைய கிளப்பும் செந்தில் குமரன்.; Go.. Go.. Govindha… Goes Viral

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது Minnal Music YouTube சேனலில் வெளியிட்டு வருகிறார்.

செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ…கோ…கோவிந்தா…” என்ற பாடலை வைஷாலி என்னும் பாடகியோடு பாடி தயாரித்து வெளியுட்டுள்ளார்.

மின்னல் மியூசில் YouTube சேனலில் வெளியாகியுள்ள “கோ…கோ…கோவிந்தா…” பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்பாடலை படமாக்கிய விதமும் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.

மக்களை உற்சாகப்படுத்தும் மற்றும் மகிழ்விக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல், மிகப்பெரிய பழமையான பாய்மர கப்பலில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நடன கலைஞர்கள் என்று பெரிய Team ஐயே வைத்து செந்தில் குமரன், அப்பாடலை ஒரு பிரமாண்ட திரைப்படத்தின் பாடல் காட்சியைப்போல் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

பிரம்மாண்டமான காட்சியமைப்பு, ஆட்டம் போட வைக்கும் மெட்டு! – செந்தில் குமரனின் தயாரிப்புகளுக்கு தனி முத்திரை உண்டு!

Song Link: https://youtu.be/LVbHU8GQqOY

Senthil Kumaran’s Go Govindha goes viral

More Articles
Follows