பிக்பாஸை விட்டு வந்ததும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரெண்ட்டு ஃபீல் ஆயிட்டாப்ல… இந்த டயலாக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

அதை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பேசி பேசி பிரபலப்படுத்தியவர் டேனியல்.

இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

சில தினங்களில் மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று நடிகர் டேனியலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த உடனே அவர் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த ரகசிய திருமணம் என தெரிய வந்துள்ளது.

Actor Danny and his lover Denisha got married

இதயத்தை வருடும் படமாக *காற்றின் மொழி* இருக்கும்: வித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனித்துவமிக்க கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக நடிகர் விதார்த் இருந்து வருகிறார்.

இதற்கு, அவர் நடித்த குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குற்றமே தண்டனை போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

தற்போது அவர் நடித்து வரும் படம் காற்றின் மொழி. இந்த படத்தில் அவர் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார்.
நடிகர் வித்தார்த் சமீபத்தில் லயோலா கல்லூரியின் LECET-இல் நடந்த கலச்சார விழா ஒன்றில், BOFA மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பாளர் ஜி தனஞ்சேயனுடன் இணைந்து பங்கேற்றார்.

இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வித்தார்த் பேசுகையில்…

உங்களுக்கு எதையும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் காலேஜ் ஸ்டுடண்ட்டான உங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரீஸ்களில் முன்னணியில் உள்ள பலர் லயோலாவில் பட்டம் பெற்றவர்கள் தான்.

நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றாலும், 1996ல் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த காலேஜில் இருந்து வெளியே வந்தவர் தான். அதனால் நான் இங்கு ஹாஸ்டலில் தங்கி இருப்பேன்.

இந்த ஹாஸ்டலில் கிடைக்கும் புரோட்டவை என்னால் மறக்கவே முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், நான் வித்தியாசமான கேரக்டர்களின் நடித்து வந்தாலும், யார் நல்ல கதையுடன் வருகிறார்களோ, அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க கதை தேர்வு செய்து வருகிறேன்.

எனது சமீபத்திய திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்த லயோலா கல்லூரியின் மாணவர்கள், எனது நடிப்புக்காக என்னை பாராட்டினார்கள்.

பாராட்டுகளே ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகபெரிய கவுரவமாகும் என்று இதுவே என்னை காற்றின் மொழி போன்ற படங்களில் நடிக்க செய்தது.

இந்த படத்தின் ஒரிஜினல் வெர்சன் படமான ‘Tumhari Sulu’ படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள்.
திடீரென ஒரு நாள் தயாரிப்பாளர் தனஞ்சேயன் சார், என்னை கூப்பிட்டு, இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த படத்தை பார்த்த பின்னர், என்னை அவர் அழைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் என்றார்.

காற்றி மொழி படம் குறித்து அவர் பேசுகையில், இந்த படம், சிம்பிளாக இருக்கும் என்பதோடு இதயத்தை தொடும் கதை அம்சத்துடன், அனைவரும் பொருந்து வகையிலும் இருக்கும், ஜோதிகா மேடத்துடன் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது.

டப்பிங் பணிகளின் போது ஒரு சில படங்களை முழு திருப்தி அளிக்கும் படமாக அமையும், ஆனால் காற்றின் மொழி படம் எனக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.

தயாரிப்பாளர் தனஞ்சேயன் பேசுகையில்…

நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றபோதும், இங்கு படிக்கும் மாணவரின் பெற்றோராக இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது.

எனது மகள் ரேவதி இங்கு படித்து 2015ம் ஆண்டில் பட்டம் பெற்றவர். உங்கள் படிப்பை சரியாக முடித்த பின்னர் உங்களுக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்ய வேண்டும், அந்த துறையில் சிறப்பாக பணியாற்றி முன்னேற வேண்டும் என்றார்.

Kaatrin mozhi movie will be close to your heart says Vidaarth

பெருதுளசி பழனிவேலின் 2018 ஜனவரி-ஜூன் வரை சினிமா செய்திகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

இவர் தமிழ் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த 2016ம் ஆண்டு காலமானார்.

அவருடைய மறைவுக்குப் பிறகு, தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான, பெருதுளசி பழனிவேல் தொடர்கிறார்.

கடந்த வருடம் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து கடந்த ஆண்டு ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சினிமாவிற்கான இந்த தகவல் களஞ்சியத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் “துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.

PRO Peruthulasi Palanivel launched book about 2018 Tamil Cinema news

செப்டம்பர் 6ல் விஜய் தேவரகொண்டாவின் *நோட்டா* டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் படம் ‘நோட்டா’.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்தை
ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

நாயகியாக மெஹ்ரீன் பிர்சாடா நடிக்க, சத்யராஜ், நாசர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிட உள்ளனர்.

இதன் டிரைலரை செப்டம்பர் 6ம் தேதி வெளியிடவுள்ளனர். வருகிற அக்டோபர் 4-ல் இப்படம் ரிலீசாகவுள்ளது.

Vijay Deverakondas NOTA movie trailer release date updates

திறமையான மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு *புரட்சியாளர்கள் விருது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், அடையாளம் காணப்படாத திறமையான மாணவர்களையும், அங்கே பணிபுரியும் திறமை வாய்ந்த ஆசிரியர்களையும் கண்டறிந்து அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக ‘You Are Loved’ என்கிற தன்னார்வ தொண்டு அமைப்பு வருடந்தோறும் “புரட்சியாளர்கள் விருது” வழங்கி வருகிறது.

இந்த விருது வழங்கும் விழா ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகரும் சமூக ஆர்வலருமான அபிசரவணன் மேலும் பலர் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.

முதன்முறையாக மாணவர்களை மேடையேற்றி புரட்சியாளர்கள் விருது வழங்கப்படுவது புதுமையான விஷய என்றும் படிக்கிற காலத்திலேயே மாணவர்களுக்கு இப்படி ஒரு உத்வேகம் கிடைப்பது அபூர்வமான ஒன்று என்றும். இதுபோன்று மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் ” என்றும் கேட்டுக்கொண்டனர்.

More Details Please Contact: 9840934257 – Daniel

Puratchiyalar Virudhugal 2018 for Talented Students and Teachers

*ஓவியா* பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜே சதீஸ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் ‘ஓவியா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் அவர்கள் வெளியிட்டார்.

புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார்.

நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் – சூர்யா நாராயணன்.

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார்.

சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.

இந்த ‘ஓவியா’ திரைப்படம் அனைத்து வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளை தமிழகத்தை சேர்ந்த TS MEDIA WORKS நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Producer J Sathishkumar launched First look poster of Oviya movie

More Articles
Follows