த்ரில்லர் படத்திற்காக பரத் நிவாஸை இயக்கும் நடிகர் ஷரண்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காத ஷரண் குமார் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

உதவி இயக்குனராக இல்லா விட்டாலும், அதற்கு மாறாக பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் இவர்.

தற்போது பரத் நிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

“நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள்.

மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன்.

அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்” என்றார் நடிகர் ஷரண்.

ஷரண் ஓரிரண்டு குறும்படங்கள் இயக்கியதும், அதில் ‘டீ ஆர் காஃபி’ குறும்படம் நல்ல வரவேற்பை, பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டார்க் திரில்லர் தான் இயக்கும் முதல் படம் என்று கூறும் ஷரண் மேலும் கூறும்போது, “பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை.

இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் இசையமைக்க, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சன்னி (எடிட்டர்), கார்க்கி (பாடல்கள்), சாய்ராம் கிருஷ்ணன் (நிர்வாக தயாரிப்பு) கருந்தேள் ராஜேஷ் (திரைக்கதை ஆலோசகர் – சூது கவ்வும், இன்று நேற்று நாளை புகழ்) ஆகியோரும் படத்தில் பணி புரிகிறார்கள்.

படத்தின் கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால் கொடைக்கானலில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கிறார்.

Actor Bharath upcoming project Direction by Actor Sharran

Breaking: அஞ்சலி பிறந்தநாளில் அவரது புதிய பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகும் திறமையும் கொண்ட நடிகை அஞ்சலி இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சரியாக நன்பகல் ஒரு மணிக்கு அவரின் புதிய பட டைட்டில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அப்படத்தின் ஒ என ஒரே எழுத்தை தலைப்பாக வைத்துள்ளனர்.

பிரவின் பிக்காட் என்பவர் இயக்கும் இப்படம் த்ரில்லர் ஹாரர் படமாக உருவாகவுள்ளது.

அரோல் கரோலி இசையமைக்க, எஜே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விரைவில் மற்ற விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

O movie first look released on Anjali Birthday

என்னருகில் ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு நானே துணை… – த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகை த்ரிஷா.

இவர் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்று வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் மன அழுத்தம் குறித்து நடிகை த்ரிஷா பேசியதாவது…

“நம் எதிரில் வரும் பலர் கையை தூக்கி ‘ஹாய்’ சொல்லி விட்டு செல்கிறார்கள்.

அவர்களில் சிலருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில் கொஞ்சம் பேர் நண்பர்களாக மாறி விடுவார்கள்.

அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து விட முடியாது.

எனவே தினமும் நமக்கு நாமே ‘ஹலோ’ சொல்லிக் கொள்ள வேண்டும்.

எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையை விரும்புவேன்.

என்ன பிரச்சினை வந்தாலும் என்னை பரிசோதனை செய்து கொள்வேன்.

நல்ல குடும்பம், நண்பர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு நானேதான் துணை.” என்று தெரிவித்தார்.

Actress Trisha clarifies how to reducer Stress

தனுஷின் மாரி2 படத்தில் இணைந்தார் சைவம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்து வரும் படம் `மாரி-2′.

பாலாஜி மோகன் இயக்கத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள்.

மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு கதாநாயகியாக வித்யா இணைந்திருக்கிறார்.

இவர் சைவம், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பசங்க 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Saivam fame Vidya Pradeep in Dhanushs Maari 2

ஜூன் 22-ல் 30 தியேட்டர்களில் விஜய் படங்கள்; தெறிக்கவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு உள்ள மார்கெட் நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இவரது படங்கள் வந்தாலே ரசிகர்கள் மிகப்பெரிய விழா போல கொண்டாடுவார்கள்.

அதுவும் அவரது பிறந்தநாள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தையே மிஞ்சிவிடும் அளவுக்கு கேரளாவில் உள்ள ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

கேரளா முழுவதும் உள்ள திரையரங்குகளில் விஜய் படத்தை திரையிட அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி பல மாவட்டங்களில் விஜய் படங்களை திரையிடுகின்றனர்.

Kerala Theatres plans to screen different Vijay movies on his Birthday

அந்த லிஸ்ட் இதோ….

1.Mundakkayam – Ghilli
2.Kottayam – Thirumalai
3.Kasargod – Pokkiri
4.Alappuzha – Shajahan
5.Kattakada – Thuppakki
6.Chengannur – Theri
7.Ettumanoor – Ghilli
8.Thrissur – Pokkiri
9.Adoor – Theri
10.Cherthala – Sachien
11.Cherthala – Ghillli
12.Idukki – Theri
13.Peyad – Theri
14.Palakkad – Theri
15.Vaikom – Kaththi
16.Pathanamthitta – Thirupachi
17.Pothencode- Thupakki
18.Malappuram – Theri
19.Ernakulam – Kaththi
20.Mukkam – Pokkiri
21.Kollam – Sivakasi
22.Chenganashery – velayudham
23.Mavelikkara – Pokkiri
24.Cherthala – velayudham
25.Idukki – kaththi
26.Trivandrum – Mersal
27.Trivandrum – Ghilli
28.Irinjalakuda – Theri
29. Kanhanghad – Theri
30.Trivandrum – Kaththi

த்ரிஷாவுக்கு வருமானத் துறை அபராதம்; ரத்து செய்தது ஐகோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார்.

அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.

இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

த்ரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Articles
Follows