முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அப்புறம் கம்ப்ளைன்ட் பண்ண கூடாது; வரலட்சுமிக்கு ராதிகா ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர் வரலட்சுமி.

இவர் பெண்கள் மீதான பல அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் வைத்திருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

சினிமா சான்ஸ் வேண்டும் என்றால். தயாரிப்பாளர்களுடன் மற்றும் இயக்குநர்களிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள சொன்னதாகவும், தான் அப்படி செய்ய மாட்டேன் அதற்காக சினிமா சான்ஸ் போனாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலர் பேசிய ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்காப்புக்காக பெண்கள் தங்களையே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், வரலட்சுமிக்கு ஆதரவாக ராதிகா சரத்குமார், ”சரியாக சொல்லியிருக்கிறாய் வரு… உனக்கு பலமாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ராஜூ முருகனின் ஜிப்ஸி-யை பார்த்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ஜிப்ஸி.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் வரும் மார்ச் 6’ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

சென்சார் கமிட்டியால் நீக்கப்பட்ட காட்சியொன்றினையும் படக்குழு வெளியிட்டது.

Gypsy – Moviebuff Sneak Peek (Censor Cut – 01)

இந்த நிலையில் இப்பட சிறப்புக் காட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்துள்ளார்.

இவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் பார்த்துள்ளனர்.

BREAKING இந்தியன் 2 விபத்து; போலீஸ் விசாரணையில் கமல் என்ன சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் கமல், ஷங்கர், லைகா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

இந்த நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன்.

அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்.

இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன்.

இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க நடந்த கலந்துரையாடலாகவே இதை நான் பார்க்கிறேன்.

இனி இது போன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் விரைவில் சந்தித்து பேசவுள்ளோம். அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கிறோம்” எனத் கமல் பேசினார்

நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.. – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Master movie stills

இப்பட சூட்டிங் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது-

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

“தொடர்ந்து 129 நாட்கள் இடைவெளியின்றி நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த பயணம் என் மனதுக்கு நெருக்கமானது.

என் மீதும், எனது குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி. என்னுடைய இயக்குனர்கள் குழு இன்றி இத்தகைய கடினமான பணியை செய்திருக்க முடியாது. அவர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் ரியல் லைஃப் ஸ்டைலில் ஹீரோவாகிறார் கால்டாக்ஸி கெவின்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேருந்து கண்டக்டராக இருந்து சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்த ரஜினிகாந்த், நம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால்
போதும், யார் வேண்டுமானாலும் சினிமாத்துறையில் ஜெயிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டினார். அவர் வழியில் பலர்
சினிமா துறையில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், கெவின் என்பவரும் ரஜினி பாணியில் சினிமாவில்
ஹீரோவாகியிருக்கிறார்.

‘கடத்தல் காரன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் கெவின், கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றிக்
கொண்டிருந்தாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தினாலும், நடிப்பின் மீது உள்ள காதலாலும், சினிமாவில் ஹீரோவாக
வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக
அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் மூன்று படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கும் எஸ்.குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும்
இப்படம், ஆக்‌ஷன் கலந்த காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கிறது.

திருடுவதை குலத்தொழிலாக வைத்திருக்கும் ஒரு கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் கட்டுப்பாட்டுக்கு ஊர்
மக்கள் அடிபணிந்து வாழ்கிறார்கள். எந்த பொருளை யார் திருடினாலும், அதை சரிசமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும்
மற்றும் வெளியாட்கள் கிராமத்திற்குள் நுழைந்தால், அவர்களால் அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாது உள்ளிட்ட
பல கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட கிராமத்தை சேர்ந்த சில திருடர்கள், திருமண வீட்டில்
திருடும் போது, ஹீரோயினான மணமகளை தூக்கிச் சென்றுவிடுவதோடு, மணமகளின் நகைகளை பங்கிட்டுக் கொண்டவர்கள்,
மணமகளை எப்படி பங்கிட்டு கொள்வது என்று யோசிக்க, மணமகனின் காதலரான ஹீரோ மணமகளை, அந்த திருட்டு
கிராமத்தில் இருந்து காப்பாற்ற முடிவு செய்து அந்த கிராமத்தில் பெண் வேடத்தில் நுழைகிறார்.

ஹீரோயினை காப்பாற்ற தான் ஹீரோ திருட்டு கிராமத்திற்குள் நுழைந்தாலும், அவர் அந்த கிராமத்திற்குள் நுழைந்ததற்கு
வேறு ஒரு காரணமும் இருக்கிறது, அது என்ன காரணம் என்பது தான் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட். இப்படி படம்
முழுவதும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க முடியாத ட்விஸ்ட்டுகள் வருவதோடு, யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை
அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.குமார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் கெவின், தனது முதல் படத்திலேயே பெண் வேடம் போட்டு அசத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன்
காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சேசிங் காட்சிகளில், அவரே ஜீப் ஓட்டுவதோடு, சில சாகசங்களை
ரொம்ப சாதாரணமாக செய்திருக்கிறார். எப்படி சார் இப்படி, என்று கேட்டால், எல்லாம் சினிமா மீது இருக்கும் ஆர்வம் தான்
சார்.

9ம் வகுப்பு படித்துவிட்டு கால்டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை தொடங்கினேன். இருந்தாலும் எதாவது சாதிக்க
வேண்டும், சமூகத்தில் நானும் ஒரு பிரபலாக இருக்க வேண்டும், என்று நினைத்தேன். அதற்காக சினிமாவில் நடிப்பு துறையை
தேர்வு செய்து, நடிகராக வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சி செய்தேன்.

அந்த முயற்சிக்கு இயக்குநர் எஸ்.குமார்
மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், என்று
இப்படத்தில் பல ரிஸ்க்குகளை எடுத்திருக்கிறேன். அதனால், எனக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என்ற
நம்பிக்கையும் இருக்கிறது, என்று பதில் அளித்தார்.

கெவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரேணு செளந்தருக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் படம் என்றாலும்,
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ருக்மணி பாபு என்ற நடிகர் முக்கியமான கதாப்பாத்திரத்தில்
நடித்திருக்கிறார்.

இவர் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’, ‘பத்து என்றதுக்குள்ள’, ‘டகால்டி’ உள்ளிட்ட சுமார் 80
படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவரடைய வேடம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாபு ரபீக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

எப் 3 பிலிம்ஸ் (F3 Films) சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் (Fraya, Fane, Felix) ஆகியோர் இணைந்து
தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எல்.வி.கணேஷ் மற்றும் ஜுபின் இசையமைக்க,
ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். மணிபாரதி கலையை நிர்மாணிக்க, ரன் ரவி ஆக்‌ஷன் காட்சிகளை
வடிவமைத்திருக்கிறார்.

முத்துவிஜயன், கெளசல்யன் ஆகியோர் பாடல்கள் எழுத, கூல் ஜெயந்த் மற்றும் இம்தியாஷ் நடனம்
அமைத்திருக்கிறார்கள்.

கூடல்நகர், கம்பம், தேனி, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் ‘கடத்தல் காரன்’ படப்பிடிப்பு முடிவடைந்து
பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இசை வெளியீட்டை நடத்தி அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ்
தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

More Articles
Follows