மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arnold in terminatorஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது.

உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது.

உலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.

டிரெய்லர் வெளியிட்டு அவர் பேசியதாவது …

ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம் போனது இப்பத்தான் உதவிருக்கு. அர்னால்ட் பட டிரெய்லர் லான்ஞ் பண்ண என்ன கூப்பிட்டிருக்காங்க. ஜிம் போற எல்லாருக்கும் அர்னால்ட் பத்தி தெரிஞ்சிருக்கும். அவரோட டெர்மினேட்டர் உலகம் முழுக்க ஃபேமஸ். அவரோட டிரெயலர் நான் வெளியிடறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

ஒவ்வொரு முறை டிரெய்லர் பார்க்கும் போதும் நிறைய டீடெயில் தெரியுது. அந்தளவு பிரமாண்டமா உழைச்சிருக்காங்க. அவரோட பயங்கர ஃபேன். True lies, Conan the barbarian, terminator என எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

ஜிம் போற எல்லாருக்கும் அவர தெரியும். ஸ்டார இருக்கறதால மட்டும் அவர் ஃபேமஸ் கிடையாது இப்ப வரைக்கும் அவரோட ஃபேமஸ்ஸுக்கு அவரோட பாடி பிஸிக் தான் காரணம். அப்பவே அவர் 7 முறை உலக அழகன் பட்டம் வாங்கிடார். இன்னும் 100 வருஷம் அவரோட புகழ் இருக்கும். அவரோட பிஸிக் யாருக்கும் இல்லாதது. அவர் ஆக்‌ஷன் பண்ணும்போது அவ்வளவு அழகா இருக்கும். திரும்பவும் அவரோட ஆக்‌ஷன் பாக்கப்போறோங்கிறதே பெரிய மகிழ்ச்சி தான்.

அவர் 7 முறை ஆணழகன் பட்டம் ஜெயிச்சிருக்கார். 5 வருஷம் கழிச்சி ஒரு முறை ஜெயிச்சிருக்கார். ஜிம் போறதால எனக்கு தெரியும் கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு திரும்ப பண்றது ரொம்ப கஷ்டம். எப்படி அவரால முடிஞ்சதுனு கேட்கனும். உலகம் முழுக்க அர்னால்ட் ஜிம் ஒர்கவுட்னே நிறைய இருக்கு இத சாதிக்கறது சாதாரணம் கிடையாது. உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

நவம்பர் 1 படம் வருது இங்க அவருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு எல்லொரும் பாருங்க எஞ்சாய் பண்ணுங்க என்றார்.

இயக்குநர் பத்மாமகனின் ‘ரூம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் பத்மாமகனின் ‘ரூம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano chitraசுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’ படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.

தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.

பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் வினோத் யஜமான்யா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

’குற்றம் கடிதல்’, ’ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முக்கியமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் ‘ரூம்’ படத்தை எடிட் செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

‘வலிமை’ டைட்டிலை அஜித்துக்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

‘வலிமை’ டைட்டிலை அஜித்துக்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithஇதுநாள் வரை தல 60 என்று அழைக்கப்பட்ட அஜித் படத்திற்கு தற்போது வலிமை என்று பெயரிட்டுள்ளனர்.

வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் வலிமை என்ற தலைப்பு எப்படி கிடைத்தது? என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.

இந்த தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளரான செல்வகுமாரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவரிடம் அனுமதிகோரி செல்வகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரும் அஜித்துக்காக விட்டுக் கொடுத்துள்ளாராம்.

‘கைதி’ டைட்டில் கார்ட்டில் விருமாண்டி & டை ஹார்ட்.. லோகேஷ் கனகராஜ்

‘கைதி’ டைட்டில் கார்ட்டில் விருமாண்டி & டை ஹார்ட்.. லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaithiட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.

முக்கிய கேரக்டரில் நரேன் நடிக்க சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது…

‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தி கேரக்டர் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini gave 10 house to Gaja flood affected peoplesகடந்த ஆண்டு தமிழ்நாட்டை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

இதில் காரைக்கால், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், வேதாரண்யம் உள்ளிட்ட ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்தனர்.

இதனையடுத்து கஜா புயலால் வீடுகளை இழந்த 10 குடும்பத்திற்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என ரஜினி அறிவித்திருந்தார்.

அதன்படி அந்த வரிசையில் கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும் கட்டப்பட்டன.

இந்த நிலையில் வீடு கட்டும் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தை ரஜினிகாந்த் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து சாவிகளைக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து ட்விட்டரில் #மக்கள்_நலனில்_ரஜினி மற்றும் #RMMinGajaAffectedAreas என்ற இரு ஹேஸ்டாக் உருவாக்கி ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Rajini gave 10 house to Gaja flood affected peoples

Thalaivar has given the keys to 10 houses for families who lost their home in Gaja cyclone

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indhuja and athulya“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.

More Articles
Follows