கொரோனா லாக் டவுன் காரணமாக நாள் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கிட்டதட்ட 3 மாதங்கள் இதே நிலை நீடித்து வருவதால் வீட்டில் பயன்படுத்தப்படும் மின் கட்டணம் வெகு அளவில் உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் கருத்து தெரிவித்தது.
தற்போது இதே பிரச்சினை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகளும் மின்கட்டணம் அதிகம் குறித்து குற்றஞ்சாட்டி இருந்தனர்.
அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அர்ஷாத் வர்ஷியும் இணைந்துள்ளார்.
அவர் மின்கட்டணம் குறித்து கூறியுள்ளதாவது…
என் மாத மின்கட்டணம் ரூ. 1.03 லட்சம் என வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு ட்விட்டர் பதிவில்… என்னுடைய ஓவியத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகத்தை விற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அவரே நொந்து இப்படி பதிவிட்டு இருந்தார்.
அதனை பார்த்த ரசிகர்கள்… உங்கள் ஓவியத்தை நாங்கள் வாங்க வேண்டுமென்றால் எங்களுடைய சிறுநீரகத்தை நாங்கள் விற்க வேண்டும் என கலாய்த்துள்ளனர்.