ரஜினி படத்துக்கு பரதேசி டைட்டில் வெச்சிருக்கலாம்ல; பாரதிராஜாவுக்கு ஆனந்த்ராஜ் கேள்வி

Actor Anandraj met Superstar Rajinikanth at his Poes Garden residenceபோயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை இன்று ஆனந்தராஜ் சந்தித்தார். பின்னர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

ரஜினி அவர்களிடம் நிறைய விஷயங்கள் பற்றி பேசினேன்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசியல்வாதிகள் போலத்தான் சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள் மீது ரஜினிகாந்த் மிகுந்த அக்கறை வைத்துள்ளார். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு மக்களுக்காக குரல் கொடுக்கிறார்.

காவிரி ஐபிஎல் பிரச்சினை போராட்டங்களின் போது தாக்கப்பட்ட காவல் துறைக்கு ஆதரவாக ரஜினி சொன்ன கருத்தை ஆதரிக்கிறேன்.

அவர் சினிமாவில் போலீஸை தாக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். சினிமா வேறு, நிஜவாழ்க்கை வேறு.

சினிமா பிரச்சினையில் ரஜினி தலையிட முடியாது. அதற்குதான் பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனால் ரஜினி ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

அவரை பாரதிராஜா விமர்சனம் சரியல்ல.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தார். உனக்கு அந்த தலைப்பு செட்டாகாது.

ஏன் அவர் பரதேசி என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

அதாவது பிற தேசத்தில் இருந்து வந்தவர் என்ற அர்த்தத்தில் வைத்திருக்கலாம்.

பாரதிராஜா உள்ளிட்டோர் ரஜினியை ஏனோ குறிவைத்து தாக்குகிறார்கள்.“

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.

Actor Anandraj met Superstar Rajinikanth at his Poes Garden residence

Overall Rating : Not available

Latest Post