ஹீரோவும் நான்தான்.. வில்லனும் நான்தான்..; அஜித்தின் சக்ஸஸ் பார்முலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் நடிகர் அஜித்குமார் இயக்குனர் வினோத் ஆகியோர் இணையவுள்ளனர். (வலிமை படம் இன்னும் ரிலீசாகவில்லை)

இது அஜித் நடிப்பில் உருவாகவுள்ள 61வது படமாகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வேடத்தில் ஹீரோவாகவும் மற்றொரு வேடத்தில் வில்லனாகவும் அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

இதற்கு முன்பு எஸ்ஜே. சூர்யா இயக்கிய வாலி படத்தில் அப்படியான ஹீரோ – வில்லன் வேடத்தை செய்திருந்தார் அஜித்.

அதுபோல வரலாறு படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் நெகட்டிவ் பாசிட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

மேலும் மங்காத்தா படத்தில் நெகட்டிவ்வான ஹீரோ கேரக்டரில் அசத்தியிருந்தார் அஜித்.

இந்த படங்கள் அனைத்தும் அஜித்துக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.

Actor Ajith plays dual role in AK 61

எல்லாருக்கும் என் பெற்றோர் போல கிடைக்கனும்.. – டாக்டர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என தன் அப்பா டி. ராஜேந்தரை போல பன்முகத்திறமை கொண்டவர் சிலம்பரசன்.

(ஒரே ஒரு வித்தியாசம்.. எந்தவொரு நடிகைகளையும் தொட்டு நடிக்க மாட்டார் டி.ராஜேந்தர். அப்பாவுக்கு நேர் எதிர் சுபாவம் கொண்டவர் சிம்பு.)

9 மாத குழந்தையாக இருக்கும்போது படங்களில் நடிக்க தொடங்கியவர் சிம்பு. தற்போது 39 வயதாகிறது. இதுவரை படங்களில் நடித்து வருகிறார்.

மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்கள் இவரது திரைப்பயணத்தில் முக்கியமானவை ஆகும்.

சினிமா தவிர சமூக சார்ந்த ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற பிரச்சினைகளில் தைரியமாக கருத்து கூறியவர். நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் விஷாலை சரமாரியாக கேள்விகளால் துழைத்தவர் இவர்.

2021ல் நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில் இன்று ஜனவரி 11ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் – உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிம்பு பேசியதாவது…

இது எனக்கான வெற்றி இல்லை. என்னை 9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்தவர்கள் என் தாய் தகப்பன்தான்.

எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா? எனத் தெரியாது.

குழந்தைகளுக்கு பிடிச்சதை செய்து கொடுக்க எல்லா குழந்தைகளுக்கும் இதுபோல பெற்றோர் கிடைக்க வேண்டும்.
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என நெகிழ்ச்சியாக பேசினார் டாக்டர் சிம்பு.

ஏழை பணக்காரன்.. உலகத்தை அழிச்சிடலாம்..; விரக்தியில் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் வைரசாக கோவிட் 19 உருவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதன் வீரியம் குறையாமல் பல வைரஸ் ரூபங்களில் வந்து மக்களை மரண படுக்கையில் வைத்திருக்கிறது.

தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 3வது அலை உருவாகியுள்ளது.

ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் இந்த தொற்றுக்கு விதிவிலக்கல்ல

அரசியல் பிரபலங்களும் நடிகர், நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதை நாம் தினம் தினம் செய்தியாக பார்க்கிறோம்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தன் சமூகவலைதள பக்கத்தில் ‛‛‛‛கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

விரக்தியின் உச்சத்தில் விஜய் ஆண்டனி பதிவிட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

Vijay Antonys recent tweet about Corona made controversy

ஷங்கர் விஜய் படங்களை தொடர்ந்து அஜித் படத்திற்கும் தமன் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க உள்ளார்.

ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்திற்கும் தமன் தான் இசையமைக்கவுள்ளார்.

தற்போது விஜய் மற்றும் ஷங்கர் படங்களை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படத்திற்கும் தமன் இசையமைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அஜித்தின் 61வது படத்தை வலிமை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

அஜித் படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளது இதுதான் முதன்முறையாகும்.

கூடுதல் தகவல்…

‘பாய்ஸ்’ படத்தில் 5 பாய்ஸ்களில் ஒருவராக தமன்-ஐ நடிகராக அறிமுகப்படுத்தினார் ஷங்கர். மேலும் இவர் தயாரித்து அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ படத்தில்தான் தமன் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Thaman will compose music for Ajith 61 movie

கரூரை கதிகலங்க வைத்த உண்மைச் சம்பவம் ‘கம்பெனி’-யானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கம்பெனி’

இதில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவத்தால் சர்ச்சை வெடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இப்படத்தை செ.தங்கராஜன் இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் டிரிஷ் குமார், பிரித்வி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் கதை.

அந்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் பின்னணி என்ன? என்பது தான் நடந்த உண்மை சம்பவமாகும். மேலும், அந்த பிரச்சனையை திரைக்கதையாக்கி இயக்குநர் காட்சிகளை வடிவமைத்திருப்பது, விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி, சமூக பிரச்சனையை பேசும் ஒரு தரமான திரைப்படமாகவும் ‘கம்பெனி’ படத்தை உயர்த்தியுள்ளது.

மேலும், கதைக்களம் பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலை என்பதால், நிஜமாகவே அப்படி ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்று முடிவு செய்த இயக்குநர் செ.தங்கராஜன், அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சாலைகளை அணுகியுள்ளார். ஆனால், தங்களது தொழில் ரகசியம் மற்றும் புதுவகை பேருந்துகளின் வடிவமைப்பு போன்றவை வெளியே தெரிந்துவிடும் என்பதால் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கவில்லை.

கதைக்களத்தோடு மக்கள் பயணிக்க வேண்டும் என்றால், உண்மையான களத்தில் வைத்து தான் கதையை சொல்ல வேண்டும், என்பதில் உறுதியாக இருந்த இயக்குநர் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல தொழிற்சாலைகளை அணுகிக்கொண்டிருக்க, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய பேருந்து தொழிற்சாலையின் உரிமையாளர், இயக்குநரின் விடா முயற்சியால் ஈர்க்கப்பட்டதோடு, படம் பேசும் சமூக பிரச்சனைப் பற்றி அறிந்துக்கொண்டு, இந்த படம் நிச்சயம் இயக்குநர் நினைத்தது போல வர வேண்டும், என்று கூறி தனது தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்துள்ளார்.

அதன்படி, சுமார் 10 நாட்கள் அந்த பேருந்து தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் செ.தங்கராஜன், இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் காட்டாத ஒரு களத்தை தனது ‘கம்பெனி’ திரைப்படத்தில் காட்டியுள்ளார். பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை என்ற களத்தை இதுவரை பார்த்திராத மக்களுக்கு, இது மிக புதிதாக இருப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

பேருந்து தொழிற்சாலையில் நடந்த உண்மை சம்பவம் என்பதால், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல பேருந்து தொழிற்சாலைகள் மற்றும் அதன் ஊழியர்களின் பார்வை ‘கம்பெனி’ திரைப்படம் மீது விழுந்திருப்பதோடு, சினிமா ரசிகர்களிடமும் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாக உருவாகி வரும்
‘கம்பெனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்கங்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் செ.தங்கராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார். மிராக்கல் மைக்கேல் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் உண்மை சம்பவம் சர்ச்சை வெடிக்கிறதோ, இல்லையோ, ‘ஜெய் பீம்’ போன்ற பெரும் அதிர்வலையை ‘கம்பெனி’ படம் ஏற்படுத்துவது உறுதி

Company movie updates True incident from Karur

ரியல் ஹீரோ : விஷ உணவை தடுக்க மக்களுக்காக களமிறங்கும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் உணவினால் நமக்கு அபாயம் என்பதை உணர்ந்து நடிகர் கார்த்தியின் புதிய முயற்சி. எனவே மக்கள் நலனைக் காக்க கையெழுத்து வேட்டை நடத்தவிருக்கிறார் நடிகர் கார்த்தி.

தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம்.

நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறார்.

தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தில் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கார்த்தி பகிர்ந்துள்ள செய்தி:

“உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதனால் அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட உணவுகள் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, வளர்ச்சி தடைப்படுதல், உடலுறுப்பு சேதம், இனப்பெருக்க பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர் சாகுபடியை ஏற்பதில்லை. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருந்தபோதிலும் இப்படியான உணவுப் பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இந்தியாவிலும் அவற்றைப் பயிரிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட வலுவான ஆதாரங்களின் காரணமாக Bt பிரிஞ்சால், GM கடுகு போன்றவை இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது விதிமுறைகளைத் தளர்த்துவதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நம் நாட்டுக்குள் அனுமதிப்பது ஏன் என்று புரியவில்லை.

இப்படியான உணவுகள் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை அறிய எந்த மாதிரியான சோதனைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. யார், எப்படி இதுகுறித்து முடிவெடுப்பார்கள் என்பது குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.
எனவே மக்கள் நலனைக் காக்க, இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாதவர்களுக்காக, நாம் ஒன்றிணைவோம். இந்த மனுவில் கையெழுத்திடுவோம்”.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் இந்தப் பகிர்வுக்கு இணையத்தில் அனேக பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு வருகிறார்கள். தொடர்ந்து கையெழுத்திடுகிறார்கள். நீங்களும் பங்கு கொள்ளலாம்..

Actor Karthis new initiative against Poisonous food

More Articles
Follows