அஜித்தை வாழ்த்தி அசிங்கப்பட்ட சுசீந்திரன்.?; ரகசியத்தை உடைத்த இலக்கியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 1ஆம் தேதி நடிகர் அஜித் தன் 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரை திரையுலக சேர்ந்த பல பிரபலங்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இதில் வழக்கம் போல ஒரு கடிதம் எழுதி தன் வாழ்த்துக்களை தெரிவித்தி இருந்தார் டைரக்டர் சுசீந்திரன். அதில்…

“நான் உதவி இயக்குனரா இருந்தபோது ரோஜா ரமணன் என்றொரு உதவி இயக்குனர் இருந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு வந்தது.

அவரின் சிகிச்சைக்காக ரூ. 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நான் அஜீத் சாரை சந்தித்து கேட்டேன். அவர் பெருமளவு பண உதவி செய்தார்” என்று கூறிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை இலக்கியன் என்ற உதவி இயக்குனர் மறுத்துள்ளார்.

“சுசீந்திரன் சொல்வது அநியாயப் பொய். ரோஜா ரமணன் ஆவி கூட இதை மன்னிக்காது. அவருக்காக அஜீத்திடம் பேசியது நான்தான்.

அவர் எந்த பண உதவியும் செய்யவில்லை. அஜீத்திடம் கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதற்காக சுசீந்திரன் பொய் சொல்கிறார்” என்று அவர் தன் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ajith Birthday wish and Director Suseenthiran issue

திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு நான் இருப்பேன்…: சத்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:-

“சாஸ்திரம், சடங்குகள், கலாசாரம் ஆகியவைதான் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும்.

திரையுலகில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் உரிமைக்காக போராட முடியும். திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.” இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

நடிகைகள் ரோகிணி, சச்சு, டைரக்டர்கள் பா.ரஞ்சித், புஸ்கர் காயத்ரி, பாலாஜி சக்திவேல், பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Cultural tradition of caste and religion made women slaves says Sathyaraj

வருங்கால கணவருடன் உல்லாச உலகம் சுற்றும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரிகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

விரைவில் தன் வருங்கால கணவர் விக்னேஷ் சிவனை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Nayanthara and Vignesh Shivan Recent photos goes viral

5 நாட்களில் ரூ. 5000 கோடி வசூல்; அசர வைக்கும் அவெஞ்சர்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த ஏப்ரல் 27 அன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது.

ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்.

இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது.

5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

Avengers Infinity War box office collection report

ராஜேஷ்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தை தொடங்கினார் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள்.

தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.

ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.

இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது,

“ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை.

மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும்.
எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன்.

மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர்.

எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Sivakarthikeyan 13 Directed By Rajesh Launched with a ritual Pooja

ரஜினிக்காக 10 பவர்புல் ரமணா; பக்கா ப்ளானில் ஏஆர். முருகதாஸ்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தன் அதிரடி அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டாலும், இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை.

போர் வரும்போது சந்திப்போம் என தேர்தலை குறித்து சொல்லியுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தமிழகம் திரும்பி மே 9ல் நடைபெறும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இதனையடுத்து ஜீன் மாதம் முதல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் சூட்டிங் ஜீலை இறுதிக்குள் முடிந்துவிடும். 2019ல் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன் அரசியல் களத்திற்கு பலமான அடித்தளம் அமைக்கும் வகையில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாட்ஷா’ மாதிரியான ஒரு மாஸ் ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுத்துவிட்டு அரசியலுக்குள் இறங்கினால் அது தன் இமேஜை இன்னும் பல மடங்கு தூக்கி நிறுத்தும் என நினைக்கிறாராம் ரஜினி.

எனவே அப்படத்தை கமர்ஷியல் மற்றும் தரமான ஹிட்டுகளை கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் அவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

2002-ம் ஆண்டு விஜயகாந்துக்கு இவர் கொடுத்த ‘ரமணா’ இன்று வரை பேசப்படுகிற படம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் ஊழலுக்கு எதிராக வந்தாலும் மிகவும் யதார்த்தம் கலந்த அதிரடியான படம் ரமணா தான்.

அப்படியொரு ஹிட் படத்தை விஜயகாந்தே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மேலும் துப்பாக்கி, கத்தி என சமூகம் சார்ந்த கதைகளையும் முருகதாஸ் கொடுத்துள்ளார்.

ரமணா படத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, துப்பாக்கி படத்தில் ஐ யம் வெய்ட்டிங், தீனா படத்தில் தல ஆகிய பவர்புல்லான பன்ச்கள் ஏ.ஆர்.முருகதாஸின் பெயரை இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கிறது.

எனவே ரஜினிக்கும் சரியான பன்ச் டயலாக்குகளை முருகதாஸ் நிச்சயம் கொடுப்பார்.

மற்ற ஹீரோக்கள் பேசிய அதே வசனங்களை ரஜினி பேசுகையில் அதன் வீரியம் எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இதையெல்லாம் யோசித்துதான் அரசியல் என்ட்ரி அரங்கேறும் நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்து ஒரு படம் செய்ய தயார் ஆகியிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

அமெரிக்கா செல்லும் முன்னே, ஒரு தனிமையான ஒரு இடத்தில் ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் சந்தித்து பேசிவிட்டார்கள் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுப்படுகிறது.

தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்ய ரஜினி கூறியதாகவும், 10 ரமணா சேர்ந்தது போல பவர்ஃபுல்லான கதையுடன் விரைவில் வருகிறேன்’ என முருகதாஸ் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

‘விஜய் 62’ படத்தை முடித்துவிட்டு முருகதாஸ்ம் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு ரஜினியும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட அவர் நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கவில்லை. அவரது ஒரே குறிக்கோள் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல்தான்.

எனவே தேர்தல் வரும்முன் தன் படங்களை முடித்துவிட்டு அரசியல் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம்.

Rajinikanth may teams up with AR Murugadoss before his political entry

More Articles
Follows