செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை சிவக்குமார் பாணியில் பிடுங்கிய அஜித்.; அப்புறம் என்னாச்சு?

இன்று ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

திருவான்மியூரில் நடிகர் அஜித் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அஜித் வாக்களிக்க வந்தபோது அவருடன் செல்ஃபி எடுக்கக் ரசிகர்கள் கூடினார்கள்.

சிலரை அஜித் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் திரும்பி சென்றனர்.

இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்த போது கோவமாக அவருடைய போனை பறித்துவிட்டார் அஜித்.

இதனால் பொதுமக்கள் & ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வந்து ரசிகர்களை வெளியேற்றினார்கள்.

பின்னர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை எடுத்து அந்த ரசிகரை அழைத்துக் கொடுத்துவிட்டார் அஜித்.

இதுபோன்ற இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அஜித் அட்வைஸ் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒரு ரசிகர் வந்தார். அப்போது கோவப்பட்ட சிவக்குமார் அதனை தட்டிவிட்டார்.

இதனால் செல்போன் உடைந்துவிட்டது. இந்த செய்தி பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் சிவகுமார் என்பது வேறுக்கதை.

Actor Ajith and Fans Selfie issue at Election 2021

Overall Rating : Not available

Latest Post