கேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்!

கேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan pay homage to Srilanka Peoples at his Malayalam movie shooting spotகடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்.

ஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.

மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.

நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும், அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டமாகட்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டு கொல்லப்பட்டபோது நடந்த போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடியும்.

டில்லியில் மாதக்கணக்கில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்காக இங்கிருந்து எந்த ஒரு பெரிய நடிகரும் வாய் திறக்க யோசித்த நிலையில், அந்த விவசாயிகளுடன் விவசாயியாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தவர் தான் அபி சரவணன்.

பின்னர் அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத்தந்தார்.

மே-18 என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள்.

தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் “பிரிட்டிஷ் பங்களா” என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த நம் ஈழத்து சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள்.

ஆனால் மனதால் ஒன்றுபட்டு அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்தினர் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.

Actor Abi Saravanan pay homage to Srilanka Peoples at his Malayalam movie shooting spot

abi saravanan

‘என் மகன் என் லிப்-லாக் சீனை பார்க்கக் கூடாது..’ சிபிராஜ் முடிவு

‘என் மகன் என் லிப்-லாக் சீனை பார்க்கக் கூடாது..’ சிபிராஜ் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathya sibiraj ramya nambeesanநாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ சத்யா “

இப்படத்தை “ சைத்தான்“ இயக்குநர் “ பிரதீப் கிருஷ்ணமூர்த்தி“ இயக்க, ரம்யா நம்பிசன், வரலக்ஷ்மி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பற்றி இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது..

“ சத்யா “ என்ற டைட்டில்லே மிகவும் பவர்புல்லான டைட்டில். கமல் அவர்கள் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து வெற்றி பெற்ற படம் அது.

சத்யா படத்தின் தலைப்பு “ராஜ்கமல் இன்டர்நேஷனல் “ நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருந்தது. கமல் சாரிடம் நாங்கள் இந்த தலைப்பு எங்கள் படத்துக்கு சரியாக இருக்கும் என்று கேட்டவுடன் கையெழுத்திட்டு கொடுத்தார்.

இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடைய லுக்கை மாற்றி காட்டியுள்ளோம்.

இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார். ‘

இப்படத்தை வர்தா புயல் வந்த அன்று கூட படமாக்கினோம். அன்று நாங்கள் அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தில் செட் போட்டு படமக்கிக்கொண்டிருந்தோம்.

புயல் வரப்போகிறது என்று தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய புயலாக இருக்கும் என்று தெரியாது.

படத்தின் கதை படி கிரைம் ஒன்று நடக்கும். அப்படி அது நடக்கும் போது எப்போதும் அது போலீஸின் பார்வையில் செல்வது போல்தான் கதை இருக்கும்.

ஆனால் இந்த கதை சத்யா என்ற சாதாரணமான ஒரு நபரின் பார்வையில் செல்வது போல் இருக்கும். குழந்தை ஒன்று காணாமல் போனதில் இருந்து அதை கண்டுபிடிப்பது வரை செல்லும் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும்.

படத்தில் சிபிராஜ் நடித்ததில் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். முத்த காட்சி ஒன்றில் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது , சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் நடிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டார்.

அவருடைய மகன் படம் பார்க்கும்போது அந்த லிப் லாக் காட்சியை பார்த்தால் நன்றாக இருக்காது என்பதால் மறுத்துவிட்டார்.

சைமன் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.” என்றார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி.

Actor Sibiraj refused for Lip Lock scene because of his son

sibi raj

சுதந்திர தினத்தில் ரஜினி கட்சியில் மீனா.? என்னமோ திட்டமிருக்கு; இதானா?

சுதந்திர தினத்தில் ரஜினி கட்சியில் மீனா.? என்னமோ திட்டமிருக்கு; இதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Meena may join in Rajinis Political party on Independence dayகோடை வெயிலுக்கு நிகராக ரஜினியின் அரசியல் பிரவேச விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.

இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபக்கம் ரஜினிக்கு ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் ரஜினியின் முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் தன் புதிய கட்சியை தொடங்கவும், அதற்கு ரஜினி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

வருகிற சுதந்திர தினத்தில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அன்றைய தினத்தில் நடிகை மீனா ரஜினிக்கு ஆதரவளித்து கட்சியில் இணையவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

முத்து படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோது, என்னமோ திட்டமிருக்கு என்று ரஜினியிடம் கேட்டவரே மீனாதானே.. அதற்கு இதான் விடையா..?

Actress Meena may join in Rajinis Political party on Independence day

‘இன்றைய அரசியல் சூழ்நிலை ரஜினிக்கு சாதகம்தான்…’ திருமாவளவன்

‘இன்றைய அரசியல் சூழ்நிலை ரஜினிக்கு சாதகம்தான்…’ திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini thirumavalavanரஜினிகாந்த், தன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதிலிருந்து, பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடகங்களில் நிலவி வருகிறது.

தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார். இல்லை அவர் பிஜேபியுடன் இணைவார் என பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள் மக்களிடையே உள்ளது.

இந்நிலையில் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து திருமாவளவன் கூறியதாவது:

‘தமிழக அரசு ஓராண்டு காலமாக செயல்படவே இல்லை.

இரு அணிகளாக பிரிந்து கொண்டு, மோதி கொண்டு வருகின்றது.

ஆனால் இரண்டு பிரிவுகளும் பாஜக-வின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

தமிழக அரசை அவர்களால் தன்னிச்சையாக நடத்த முடியவில்லை. என்றார்.

மேலும் அவர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பேசியதாவது…

‘இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது அவருக்கு சாதகமே.

ஆனால், பிஜேபி வட்டத்திற்குள் சிக்காமல் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

தற்போது வைகோ ஜாமீனில் வந்துவிட்டார் வைகோ. அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்” என்றார்.

Current tamilnadu politics situation is clear route of Rajini says Thirumavalavan

சூர்யாவுக்கு பிடிவாரண்ட்; களமிறங்கிய தல-தளபதி ரசிகர்கள்

சூர்யாவுக்கு பிடிவாரண்ட்; களமிறங்கிய தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaகடந்த 2009 ம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுப்படும் நடிகைகள் என ஒரு நாளிதழ் செய்தியை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

இதில் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியதாக சூர்யா, சத்யராஜ், சரத்குமார், விவேக், ஸ்ரீ பிரியா, அருண் விஜய், விஜயகுமார், சேரன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது.

இதனையடுத்து இந்த 8 பேர் மீது ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்டை பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது.

இந்த விஷயம் இணையத்தளங்களில் காட்டுத் தீயாக பரவியது.

இதனையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி, #WeSupportSuriya என ட்ரண்ட் செய்து ஆதரவளித்து வருகின்றனர்.

Non bailable arrest warrant for Tamil Actors. Ajith and Vijay fans support Suriya

அன்றைய கண்டன கூட்டத்தில் சூர்யா பேசியது இதுதான்…

suriya speech

‘பிஜேபியில் ரஜினி இணைந்தால் பலம் கூடும்…’ தமிழிசை சௌந்தர்ராஜன்

‘பிஜேபியில் ரஜினி இணைந்தால் பலம் கூடும்…’ தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and Tamilisaiரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.

ஆனால் பிஜேபி கட்சி மட்டும் ரஜினிக்கு வெளிப்படையாகவே தன் ஆதரவை தெரிவித்து வருகிறது.

மேலும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முதல் தமிழக தலைவர்கள் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது…

ரஜினிகாந்த் பிஜேபியில் இணைந்தால் கூடுதல் பலம் கிடைக்கும். தனிக் கட்சி தொடங்கினால் அவரால் பிரகாசிக்க முடியாது” என்றார்.

More Articles
Follows