தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் பட உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜீவிதா.
இவர் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது நடிகர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜீவிதாவும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஸ்ரீரெட்டி மீதான பாலியல் புகார் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய சமூக ஆர்வலர் சந்தியா, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு ஜீவிதா அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இது பட உலகில் பரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளித்து ஜீவிதா கூறியதாவது…
“என்மீது சந்தியா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. திரையுலகினரை இழிவாக நினைக்கும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.
யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து செல்ல நடிகைகள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் இல்லை. எல்லா பெண்களுமே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.
தெலுங்கு திரையுலகினரை நடிகை ஸ்ரீரெட்டி களங்கப்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக ஏமாறி வருவதாக கூறி வருகிறார்.
அவர் என்ன குழந்தையா..? ஒரு வீடியோவில் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம-
நடிகர் ராணாவின் தம்பியை முத்தமிட்டு போட்டோ எடுத்துள்ளார். அவர்கள் விரும்பியே முத்தமிட்டுள்ளனர்.
மூத்த நடிகைகள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
அதிக முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்க வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நினைக்கிறாரோ அவரைத்தான் ஹீரோயினாக நடிக்க வைப்பார்கள். இவருக்கு எப்படி சான்ஸ் தரமுடியும்.”
இவ்வாறு ஜீவிதா தெரிவித்துள்ளார்.
Activist Sandhya accuses Jeevitha Rajasekhar of sending girls to her husband