மலேசியாவில் நடைபெற்ற பிளஸ் ஆர் மைனஸ் இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது.

விழாவில் படத்தின் இயக்குனர் ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தேசம் பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.

மலேசிய சுகாதரதுறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டுதுறை துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட, மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் மக்கள் ஆட்டோ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

மனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீ சையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

AbiSaravanan starrer Plus Or Minus Teaser Launched in Malaysia

https://www.youtube.com/watch?v=hDCZ1lsxwN8

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் அறிமுகமாகிறார் விக்ரம் மகன் துருவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த படம் அர்ஜீன் ரெட்டி.

தெலுங்கில் ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

எவரும் எதிர்பாராத வகையில் கிட்டதட்ட 10 மடங்கு லாபத்தை இப்படம் பெற்றதால் இதன் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி உருவானது.

இந்நிலையில் இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் தமிழ், மலையாள மற்றும் கன்னட டப்பிங் மற்றும் ரீமேக் உரிமைகளை பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் அவர்களின் மகன் துருவ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Its Official Vikram son Dhruv debut movie Arjun Reddy Tamil remake

யார் தடுத்தாலும் சிவாஜி மணிமண்டப விழாவிற்கு வந்திருப்பேன்: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜிகணேசன் மணிமண்டபம் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் கமல் பேசியதாவது…

அமைச்சர் பெருமக்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மாநிலம், இந்தியா, ஆசியா எல்லைகளை கடந்து ஜெயித்தவர் சிவாஜி கணேசன்.

எந்த அரசு பதவிக்கு வந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

அந்த நடிகனின் குடும்பத்தில் தாமதமாக சேர்ந்த பிள்ளை நான். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியோடு இணைந்தேன்.

நான் நடிகனாக இல்லாவிட்டாலும் இந்த விழாவுக்கு ஒரு சினிமா ரசிகனாக வந்திருப்பேன்.

யார் தடுத்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன்.” என்று பேசினார் கமல்.

Kamalhassan speech at Sivaji manimandapam inauguration function

அரசியலில் ஜெயிக்க என்ன வேண்டும் என கமலுக்கு தெரியும்… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ரஜினி, கமல், பிரபு, விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….

நடிகர் திலகம் அரசியல் பாடத்தையும் நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தோற்றுப்போனார். அது அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம்.

வெறும் சினிமா புகழை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதுதான் அது.

அரசியலில் ஜெயிக்க பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு என்ன வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்.

எனக்கு சத்தியமா தெரியாது. ஆனால் கமல்ஹாசனுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

அந்த ரகசியத்தை கமல் தெரிவிக்க மாட்டார். என் திரையுலக அண்ணா நீங்க சொல்லுங்க என்று கேட்டாலும் சொல்ல மாட்டார். என்னுடன் வந்தா சொலித்தருகிறேன் என்கிறார்” என்று பேசினார் ரஜினிகாந்த்.

Kamal knew how to win in Politics says Rajini at Sivaji Manimandapam inauguration function

தான் அதிர்ஷ்டசாலி என்பதை ஓபிஎஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறார்… ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா தற்போது சென்னை, அடையாறில் நடைபெற்று வருகிறது.

இந்த மண்டபம் ரூ.2.80 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு வந்த ரஜினிக்கு ஓ.பி.எஸ் பொன்னாடை போர்த்தினார். கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பொன்னாடை போர்த்தினார்.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது….

நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜிகணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.

என்னை இந்த விழாவுக்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினருக்கு நன்றி.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதை இங்கே மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறந்து வைக்கும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

சிவாஜி ஒரு நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை.

பல சுதந்திர போராட்ட வீரர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் நடிகர் திலகம்.

பல புராணக் கதைகளில் உள்ள கேரக்டர்களை கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் என்பதால்தான் இந்த மணிமண்டபம்” என்று பேசினார்.

Deputy CM OPanneer Selvam is lucky person says Rajinikanth

 

மீண்டும் சினிமா மீது வரிவிதிப்பு; ஏற்கமுடியாது என விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது.

இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

அதன் முடிவில் வேலை நிறுத்தத்தை  தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மொழி படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி தமிழக அரசு விதித்துள்ளது.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவர தமிழ் திரையுலகினர் முயற்சித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியதாவது…

அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.

அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது . விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.

100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல. திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம்.

வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர் உட்பட அனைவரிடமும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

நாளை சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, கமல்ஹாசன் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் பங்கேற்று இருந்தால் இந்த மணிமண்டப திறப்பு விழா சிறப்பாக இருந்திருக்கும்.

அடுத்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பனி முடிவுக்கு வரும் அதில் MGR மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும்.

அதில் MGR மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும்” என்று பேசினார் விஷால்.

Vishal refuse to accept Local entertainment tax on Tamil Cinema

More Articles
Follows