மோடியின் பாராட்டைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்தின் அடுத்த படம்

மோடியின் பாராட்டைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்தின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின.

இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது.

ரவிதேஜாவின் ‘டைகர்’ படத்தை வழங்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளர்

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது.

இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

250 கோடி ரூபாய் வசூலித்து ‘வசூல் கிளப்’பில் இணைந்திருக்கும் ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர்.

தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Abhishek Agarwal Arts & I am Buddha Production To Reunite To Tell 2 More Brutally Honest Tales Of Humanity

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துஉள்ளார் தனுஷ். சூட்டிங் மெடிவடைந்து விட்டதாக இன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ.

‘வடசென்னை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′ படங்களும் தனுஷ் கைவசம் உள்ளன.

இதனிடையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் தனுஷ்

இப்படத்தை ‛ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.

இதறன் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.

1930ல் நடக்கும் கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.

இதில் வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ‛கேப்டன் மில்லர்’ என டைட்டிலை படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகும் எனவும் தகவல் வந்துள்ளன.

Dhanush’s next with Rocky director reportedly titled Captain Miller

ஷங்கர் – லிங்குசாமி வரிசையில் இணைந்த டைரக்டர் ஹரி

ஷங்கர் – லிங்குசாமி வரிசையில் இணைந்த டைரக்டர் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ஒரு படங்களில் நடித்து வருகின்றனர். இவை தமிழிலும் தயாராகி வருகிறது.

ஹீரோக்களை போல தமிழ் சினிமா டைரக்டர்களும் நேரடி தெலுங்கு படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆகியோர் தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைகிறார்.

தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஹரி இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தற்போது அருண் விஜய் & ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘யானை’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார் ஹரி.

வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

Is Tamil director Hari collaborating with Tollywood’s action hero ?

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ படம் மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் & தெலுங்கில் உருவாகும் தன் 20வது படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் நடைபெற்றது. அப்போது புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

இந்த நிலையில் லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக விநியோக உரிமையை வாங்கியது.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் 20வது படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குமே பெரிய விலை கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

SK20வது படத்தின் சூட்டிங் இன்னும் பாதி கூட முடிவடையாத நிலையில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதை கோலிவுட்டே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

ம்ம்ம…. நிஜமாவே மாஸ் காட்டுகிறார் டான் .

Sivakarthikeyan’s next 2 films TN theatrical rights sold out

ரூ. 1000 கோடியை அசால்ட்டாக அள்ளிய ‘RRR’..; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரூ. 1000 கோடியை அசால்ட்டாக அள்ளிய ‘RRR’..; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இதில் ராம்சரண், ஜீனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கான், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே ரூ 500 கோடியை வசூலித்தது என்பதை நம் FILMISTREET தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

தற்போது 2 வாரங்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் வசூல் ரூ. 1,000 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

SS Rajamoulis RRR clocks Rs 1000 crore at global box office

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்த நட்ராஜ்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்த நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘திரௌபதி’ ,’ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கியவர் மோகன்ஜி.

இந்த படங்களை தொடர்ந்து 3வது படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.

டைரக்டர் செல்வராகவனை நாயகனாக வைத்து புதிய படம் இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இதே படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர்.

நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுபிறது.

‘கர்ணன்’ படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Natty joins Mohan Gs film with Selvaraghavan

More Articles
Follows