ரஜினியை சந்தித்த அப்துல்கலாம் உதவியாளர்; என்னமோ திட்டம் இருக்கு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் பொன்ராஜ்.

இவர் அண்மையில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். எனவே இது தொடர்பாக பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துள்ளார்.

அப்போது காலம் கனிந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் நடிக்கவுள்ள ரஞ்சித்தின் படம் அரசியல் சார்ந்த கதைதான்.

எனவேதான் ரஜினி ஓகே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

ஹ்ம்… என்னமோ திட்டமிருக்கு….

தளபதி டயலாக்கை தலைப்பாக்கி ஹீரோ ஆகிறார் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் பிரபல சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்தவர் கவின்.

இவரும் வழக்கம்போல சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித் திரைக்கு வருகிறார்.

தளபதி படத்தில் ரஜினி பேசும் வசனமான நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்க, தரண் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

BUY RAVA – பிரித்து மேய்ந்த அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் படம் வந்தாலே அல்லது விஜய்யின் படம் வந்தாலோ சம்பந்தப்பட்ட ரசிகர்களை விட அவர்களது எதிர் தரப்பின் ரசிகர்களுக்குத்தான் கொண்டாட்டம் போல.

நேற்று பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதை விஜய் ரசிகர்கள் இணையங்களில் டிரென்டிங்கில் விட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை கண்டு பொறுக்காத அஜித் ரசிகர்கள், பைரவா படத்தை பை-ரவா என பிரித்து அதாவது உப்புமா செய்யும் ரவாவை வாங்கி வா (BUY RAVA) என வார்தைகளாக பிரித்து மேய்ந்து விட்டனர்.

மேலும் பல மீம்ஸ்களையும், ஜோக்குகளையும் கிரியேட் செய்து, அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி தீர்த்தனர்.

விஜய்-ஜெயம் ரவி கூட்டணியில் சாயீஷா சாய்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் படம் தொடர்பான ஏதாவது ஒன்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இதில் நாயகியாக அறிமுகமாகிறார் சாயீஷா சாய்கல்.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் ஐந்தாம் படைப்பாக இப்படம் உருவாகிறது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு), இயக்குனர் மோகன் ராஜா, படத்தின் கதாநாயகி சாயீஷா சாய்கல் (அறிமுகம்), எடிட்டர் மோகன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் ஏ எல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், தம்பி ராமையா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மாநில விருது பெற்ற புரொடக்ஷன் டிசைனர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தல-தளபதிக்கு விட்டுக் கொடுத்து தன் தலைப்பை மாற்றிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இணையத்தில் வெளியானால் என்ன? எப்படி வந்தால் என்ன? தங்களுக்கு மகிழ்ச்சிதான், என பைரவா படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தலைப்பை தன் படத்திற்கு ராகவா லாரன்ஸ் ரிஜிஸ்ட்டர் செய்து வைத்திருந்தாராம்.

ஆனால் விஜய் படக்குழுவினர் கேட்கவும் மறுப்பு சொல்லாமல் தலைப்பை தற்போது விட்டுக் கொடுத்துள்ளார்.

மேலும் தன் படத்தலைப்பை கால பைரவா என மாற்றம் செய்யப் போகிறாராம்.

தற்போது நடித்துவரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தையடுத்து கால பைரவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதற்கு முன்பு, அஜித்தின் வேதாளம் படத்தின் தலைப்பையும் ராகவா லாரன்ஸ் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

பைரவா பர்ஸ்ட் லுக்கை தியேட்டரில் ஃப்ரீயா பார்க்கனுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எவரும் எதிர்பாராத வகையில் சற்றுமுன் விஜய் 60வது படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக்கானது.

பைரவா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் இந்த பர்ஸ்ட் லுக்குடன் விஜய்யின் வீடியோ பதிவு ஒன்றையும் திரையிட உள்ளனர்.

இன்று இரவு 9 மணிக்கு இதை இலவசமாக தியேட்டரில் கண்டுகளிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு இரவு 12 மணிக்கு இதை திரையிடவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows