‘விவசாயம்’ இசை வெளியீட்டு விழா; ஆரி-அபி சரவணன் கலந்து கொண்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம். ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் நாடு முழுவதும் நலிந்து வருகின்றனர்.

விவசாயிகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மையமாகக் கொண்ட இசைத்தொகுப்பை முனைவர் ச. பரிவு சக்திவேல் (SO WHAT STUDIOS) தயாரிப்பில் இயக்குநர் எம்.சி.ரிக்கோ இசையமைத்து பாடலை உருவாக்கியிக்கிறார்.

“விவசாயம் என்ன ஆனது ?” எனத் தொடங்கும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும், விவசாயிகள் படும் துன்பத்தையும் அதற்கு இளைஞர்கள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டியவை குறித்தும் உணர்த்தி இயக்கியிருந்தார். அதற்கு ஏற்றார் போல காணொளி தொகுப்பும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இசைத்தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் முனைவர் பரிவு ச.சக்திவேல் சிறப்புரையாற்றினார்.

அதில் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் இல்லாததால் மனமுடைந்த 38 வயதே ஆன விவசாயி தற்கொலை செய்துகொண்டதை அவர் பகிர்ந்துகொண்டபோது அவ்விடத்தில் சில நொடிகள் மயான அமைதி நிலவியது.

பின்னர் இறந்த விவசாயிகளுக்கு 30 நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எம்.நந்தகுமார், கௌதமன், நடிகர்கள் ஆரி, போஸ்வெங்கட், ஈஸ்டர், அபி சரவணன், சமூக ஆர்வலர்கள் அப்துல் கனி, ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹானா மற்றும் ராப் பாடகர் எம்.சி.ஜாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கணேசன், மில்கி ராஜ், செல்வராஜ், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“விவசாயம் அழிந்தால், அரிசியை டவுன்லோடு செய்யமுடியாது” என்று கெளதமன் பேசினார்.

“உழவுத்தொழில் தான் உலகத்தின் அச்சாணி . உழவன் வீழ்ந்தால் உலகமே வீழ்ந்து போகும்” என்று இயக்குநர் ஏ.எம்.நந்தகுமார் குறிப்பிட்டார்.

“விவசாயம் பற்றி ஏதுமறியாத நகர இளைஞர்கள் கூடும் இதுபோன்ற வணிகவளாகத்தில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்துவது சிறப்பான ஒன்று ” என்றார் நடிகர் ஈஸ்டர்.

“விவசாயி தற்கொலை செய்துகொள்வது அல்லது அழிவது என்பது உணவுச்சங்கிலி அறுபடுவது போன்றது, இது தேசத்திற்கே பெரிய அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார் அப்துல்கனி.

“விவசாயம் காக்க இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டனர் ஆரியும் அபி சரவணனும்.

“சாதி, மத, அந்தஸ்து வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார் ஆரி.

டெல்லி போராட்டக் களத்தில் விவசாயிகளுடன் கலந்து கொண்ட நடிகர் அபி சரவணன், அவர்களின் துன்பங்களை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

விவசாயம் பாடலை விவசாயிகள் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பாடல் திரையிடப்பட்டது. இறுதியாக உறுதி மொழியுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

விவசாயம் என்றால் என்னவென்கிற புரிதல் இல்லாதவர்கள், முனைவர் பரிவு ச. சக்திவேல் தயாரித்திருக்கும் விவசாயம் பாடல் தொகுப்பை இணையதளத்தில் பார்த்து, விவசாயம் பற்றி ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.

Aari Abi Saravanan participated in Vivasayam audio launch

‘தொண்டன் பதவியே போதும் தலைவா…’ ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தன் மனதில் என்ன வைத்து அரசியல் போர் பற்றி பேசினாரோ? அவரது ரசிகர்கள் அதை தாரக மந்திரமாக எடுத்து போருக்கு தயாராகி வருகின்றனர்.

இனி அவரே தடுத்தி நிறுத்த முற்பட்டாலும் முடியாது போலிருக்கிறது.

அவர் பற்ற வைத்த பேச்சு இப்போது தீயாக ரசிகர்களிடையே பரவியுள்ளது.

அவரது பேச்சுக்கு ஒரு புறம் எதிர்ப்பு குரல் ஒலித்தாலும், எதிர்ப்பே அரசியலின் மூலதனம் என தங்கள் பணியை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு பெரிய வால் போஸ்டரில்… ‘எங்களுக்கு பணமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், எம்.எல்.ஏ பதவியும் வேண்டாம், எம்பி பதவியும் வேண்டாம், ஏன் கவுன்சிலர் பதவி கூட வேண்டாம்.

அதுக்கும் மேல, தொண்டன் என்ற பதவியே போதும் தலைவா, ஏழைகளின் முதல்வரே, மாற்றம் உங்களால் மலரட்டும்’ என்று டிசைன் செய்து போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

Rajini fans welcomes their Super Star to enter into Politics

தனுஷ் பட நஷ்டத்தால் அஜித் படத்திற்கு வந்த சோதனை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு பிரச்சினை எழுந்துள்ளதாம்.

இதே நிறுவனம் தனுஷ் நடித்த தொடரி படத்தை தயாரித்து இருந்தது.

ஆனால் இப்படம் வெற்றி பெறவில்லை என்பதால் விநியோகஸ்தர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் தொடரியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினால் மட்டுமே விவேகத்தை படத்தை வெளியிட அனுமதிப்போம் என ஒரு தரப்பு தெரிவித்துள்ளதாம்.

இதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நாடி போகலாமா? என தயாரிப்பு தரப்பு ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Vivegam movie release in trouble due to Thodari movie loss issue

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் பற்றி விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டீக்கடை பெஞ்ச் முதல் ஐடி கம்பெனி வரை உள்ள மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக ரஜினியின் அரசியல் பேச்சு மாறிவிட்டது.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட சென்றுள்ளார்.

அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியதாவது…

“இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்.

ஆனால், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே நாட்டை ஆள முடியும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாறிப்போய் உள்ளது.

அதிமுகவில் உள்ள இரு அணிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.

யார் ஆட்சி செய்வது? இந்த நான்கு ஆண்டுகளை எப்படி கடத்துவது என்பதே அவர்களது சிந்தனையாக இருக்கிறது” என்றார்.

Vijayakanth talks about Rajinikanths political entry

 

ஸ்கெட்ச் போட்டு ஆட்டைய போடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர்.

இப்படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீபிரியங்கா இணைந்து நடித்து வருகின்றனர்.

தமன் இசையமைக்க, கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் ஏற்றுள்ள கேரக்டர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

இதில் பக்கா ஸ்கெட்ச் போட்டு திருடும் திருடனாக நடித்து வருகிறாராம்.

இப்படத்தை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Vikram character in Sketch movie revealed

பர்ஸ்ட் லுக் வரல; டைட்டில் தெரியல; ஆனாலும் விஜய் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி (டப்பிங்) சாட்டிலைட் ரைட்ஸ் தற்போதே ரூ. 11 கோடிக்கு விற்பனையாகிவிட்டதாம்.

இது விஜய் படங்களில் அதிகமான தொகை என சொல்லப்படுகிறது.

Vijay 61‘s Hindi dubbing rights for satellite news updates

More Articles
Follows