‘ஆண்கள் ஜாக்கிரதை’ சூட்டிங்கில் நுழைந்த அமானுஷ்யம்

‘ஆண்கள் ஜாக்கிரதை’ சூட்டிங்கில் நுழைந்த அமானுஷ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aangal Jaakirathai Movie shooting spot updatesஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ஆண்கள் ஜாக்கிரதை“

இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது…

இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம்.

இந்த படத்திற்காக புதுக்கோட்டையில் ஒரு பழைய பங்களாவில் இரவு நேரத்தில் திகிலான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கும் போது அந்த பங்களாவில் உண்மையான சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்த கதாநாயகிகள் எங்களுக்கு பயமாக இருக்கிறது நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.

அதன் பிறகு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி புரியவைத்து நடிக்க வைத்தோம். முதலில் அப்படி சொன்ன இயக்குனர் படப்பிடிப்பு முடிந்தவுடன் நானும் அதை உணர்ந்தேன் என்று ஒரு வித பயத்துடன் கூறினார். ஷூட்டிங் நடப்பதை பார்க்க அந்த ஊர்மக்களே வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம்.

கதவு, ஜன்னல்கள் இல்லா பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைக்கப்பட்டிருந்தன.

முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ஆண்கள் ஜாக்கிரதை இருக்கும் என்றார் இயக்குனர் K.S.முத்துமனோகரன்.

சுஜி ஜீசஸ் பிலிம்ஸ் செந்தில்குமார் படத்தை பிரமாண்டாமான முறையில் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார்
இசை – பாலகணேஷ்
எடிட்டிங் – G.V.சோழன்
விளம்பர வடிவமைப்பு – அயனன்
இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.
தயாரிப்பு – ஜெமினி ராகவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

Aangal Jaakirathai Movie shooting spot updates

Aangal Jaakirathai Movie shooting spot updates

விளையாட்டுத் துறையில் ஜாதி அரசியலை சொல்கிறதா ‘யார்க்கர்’.?

விளையாட்டுத் துறையில் ஜாதி அரசியலை சொல்கிறதா ‘யார்க்கர்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Antony fame Nishanth starring Yorker directed by Naveedhஆண்டனி, பன்றிக்கு நன்றி சொல்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நாயகன் நிஷாந்த்.

இவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு யார்க்கர் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

நவீத் எஸ் பரீத் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ‘துப்பறிவாளன்’ புகழ் அரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் நாயகன் நிஷாந்த் பிராமணர் போல பூநூல் அணிந்துள்ளார். மேலும் கையில் கிரிக்கெட் பந்தை வைத்துள்ளார்.

ஆகவே இது ஜாதியை சொல்லும் விளையாட்டு பற்றிய படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் ஜாதி அரசியல் தலையீட்டு குறித்த படங்கள் ரிலீசாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Antony fame Nishanth starring Yorker directed by Naveedh

நிவின் பாலியுடன் இணைந்து ‛பட வேட்டு’ வைக்கும் அருவி நாயகி

நிவின் பாலியுடன் இணைந்து ‛பட வேட்டு’ வைக்கும் அருவி நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aruvi fame Aditi Balan pairs with Nivin Pauly in Padavettuஇயக்குனர், நாயகன், நாயகி என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் ஒரு சில படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடி வருகின்றன.

அண்மையில் அது போல ஒரு புது கூட்டணியில் உருவாகி அனைவரையும் அதிர வைத்த படம் ‛அருவி’.

இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி பலரின் பாராட்டையும் பெற்றவர் அதிதி பாலன்.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்த நிலையில் வேறு படங்களில் கமிட்டாகமல் இருந்தார்.

தற்போது ‛படவேட்டு’ என்கிற படத்தின் மூலம் நிவின் பாலியுடன் இணைந்து மலையாள சினிமாவில் நுழைகிறார்.

லிஜி கிருஷ்ணா என்பவர் இப்படத்தை இயக்க நடிகர் சன்னி வெய்ன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.

கேரளாவின் முக்கிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Aruvi fame Aditi Balan pairs with Nivin Pauly in Padavettu

ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு

ஆஸ்கர் விருது பெற்ற பட ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aamir Khan Vijay Sethupathi and Yogi babu to team up for Bollywood remakeஆங்கிலத்தில் வெளியாகி ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படம் மக்கள் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் ஆஸ்கர் அவார்ட்டையும் வென்றது.

இதன் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் தமிழராக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் யோகிபாபுவிடம் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

ஏற்கெனவே ஆண்டவன் கட்டளை, ஜீங்கா உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதியுடன் யோகிபாபு இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Aamir Khan Vijay Sethupathi and Yogi babu to team up for Bollywood remake

பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா… ‘மாஃபியா’ டீமுக்கு ரஜினி பாராட்டு

பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா… ‘மாஃபியா’ டீமுக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth appreciates Mafia movie teaser and Team`துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார்.

அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து நாடகமேடை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதுவும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றப் பின்னணியில் ‘மாஃபியா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்பட டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் கார்த்திக் நரேன்.

டீசரை பார்த்துவிட்டு பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

இதனை கார்த்திக் நரேன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Rajinikanth appreciates Mafia movie teaser and Team

ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (10)சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,

அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய
ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.
சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.

More Articles
Follows