ஆதிக்பாபு நடிப்பில் கிரைம் த்ரில்லராக உருவாகும் ‘குற்றம் புரிந்தால்’

ஆதிக்பாபு நடிப்பில் கிரைம் த்ரில்லராக உருவாகும் ‘குற்றம் புரிந்தால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aadhik Babu staring Kuttram Purindhal is Crime thrillerஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரித்திருக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’.

அறிமுக இயக்குநர் டிஸ்னி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆதிக்பாபு ஹீரோவாக அறிமுகமாகிறார். அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், அருள் டி.சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளனர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.பி.அஹமது படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஹீரோ ஆதிக்பாபு, படம் மற்றும் தனது நடிப்பு பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டது இதோ,

‘குற்றம் புரிந்தால்’ கிரைம் த்ரில்லர் ஜானர் படமாகும். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது.

ஹீரோவின் மாமா பெண் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட, அதற்காக ஹீரோ அவர்களை பழிவாங்குவது தான் கதையாக இருந்தாலும், ஹீரோ வில்லன்களை பழிவாங்கும் முறை இதுவரை தமிழ் சினிமாவில் கையாளப்படாத புதிய வகை டெக்னிக்காக இருப்பதோடு, திரைக்கதை ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு சஸ்பென்ஸாக நகரும்.

கமர்ஷியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாக இருந்தாலும், படத்தின் இறுதியில் பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதும், அதில் இருந்து அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், என்பதையும் மெசஜாக சொல்லியிருக்கிறோம்.

எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள்?

எனது சொந்த ஊர் கோயமுத்தூர். சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான நான், அது தொடர்பான வேலையில் இருந்தாலும், சிறு வயது முதலே நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன்.

இந்த நடிகர், அந்த நடிகர் என்றெல்லாம் இல்லாமல், வாரம் வாரம் வெளியாகும் புதுப்படங்களை உடனே பார்த்துவிடுவேன். இப்படி படம் பார்த்து பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை வளர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக முயற்சி செய்ய தொடங்கினேன்.

சாதாரணமாக தொடங்கினாலும், சுமார் 8 வருடங்களாக வாய்ப்புக்காக பல நிறுவனங்களையும், பல சினிமா பிரபலங்களையும் சந்தித்திருக்கிறேன். பல நிறுவங்களுக்கு என் புகைப்படங்களையும் அனுப்புவேன். அப்படி என் புகைப்படங்களைப் பார்த்த அமராவதி பிலிம் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட வேடத்திற்காக என்னை தேர்வு செய்தார்கள்.

ஆனால், என்னை நேரில் பார்த்த இயக்குநர் டிஸ்னி, என்னை நடித்துக் காட்ட சொன்னார். நானும் அவர் சொன்னதை செய்தேன். உடனே அவர் என் கதையின் ஹீரோ இவர் தான். இவரைப் போல தான் இருக்க வேண்டும், என்று கூறி என்னையே ஹீரோவாக்கி விட்டார்.

அப்படியானால் நீங்கள் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடவில்லையா?

ஹீரோ, வில்லன் அப்படி எல்லாம் கிடையாது. நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் அது தான் என் விருப்பம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், என்னையும் ரசிகர்களிடம் நடிகராக அந்த கதாபாத்திரம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்படி ஒரு கதாபாத்திரமாக இருந்தால் ஒரு காட்சியில் கூட நடிக்க தயார்.

சினிமாவுக்காக உங்களை எப்படி தயார்ப்படுத்தி கொண்டீர்கள்?

வேறு ஒரு தொழிலில் இருந்தாலும், எப்போதும் சினிமா மீது எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே என்னை சினிமாவுக்கு தயார்ப்படுத்தி விட்டது.

அத்துடன், கடந்த 8 வருடங்களாக நான் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது, நான் சந்தித்தவர்கள், அவர்கள் என்னிடம் நடிகனாக எதிர்ப்பார்த்த விஷயங்களை நான் வெளிப்படுத்தியது, போன்றவைகளே என்னை சினிமாவுக்கான ஒருவனாக தயார்ப்படுத்திவிட்டது.

எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

முதலிலேயே சொன்னது போல தான், இப்படி தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. நல்ல வேடம் எப்படி இருந்தாலும் நடிப்பேன். ஆனால், எனக்கு நெகட்டிவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

அதிலும், எம்.ஆர்.ராதா போல வித்தியாசமான, குறிப்பாக அவரது ‘இரத்த கண்ணீர்’ போன்ற படங்களில் நடிக்க வேண்டும், என்று விரும்புகிறேன்.

இப்போது விஜய் ஆண்டனி, பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் ஜானர் படங்களும் எனக்கு சூட்டாகும் என்று நினைக்கிறேன். அதனால், அதுபோன்ற கதைகள் அமைந்தால் சந்தோஷப்படுவேன். அதேபோல், பெண்களுக்கு பிடித்தமான கதைகளிலும், நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

‘குற்றம் புரிந்தால்’ படத்தில் உங்களது நடிப்பு குறித்த விமர்சனங்கள்?

படப்பிடிப்பு தொடங்கிய போது முதல் இரண்டு நாட்கள் சற்று தயக்கமாக இருந்தது. பிறகு இயக்குநர் டிஸ்னி சொல்லிக் கொடுத்ததை போல செய்தேன். அதன் பிறகு சகஜமாகிவிட்டேன்.

பிறகு எனது நடிப்புக்கு சுற்றியிருப்பவர்கள் கைதட்டும் அளவுக்கு நடிக்க தொடங்கிவிட்டேன். படம் முடிந்துவிட்டது. படத்தை பார்த்த அனைவரும் எனது நடிப்பை பாராட்டினார்கள்.

குறிப்பாக ”முதல் படம் நடிகர் போல அல்லாமல், ரொம்பவே பல படங்களில் நடித்த அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினார்கள். சண்டைக்காட்சிகளும் இயல்பாக வந்திருப்பதாக பாராட்டினார்கள்.

எதிர்கால திட்டங்கள்?

நிச்சயம் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் எதிர்கால திட்டம். ‘குற்றம் புரிந்தால்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியான பிறகே அடுத்தப் படம் குறித்து அறிவிப்பேன். தற்போது இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருக்கிறேன்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல வேடமாக இருந்தால் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க ரெடி. கோவையில் இருந்து ரகுவரன் சார், சத்யராஜ் சார், பாக்யராஜ் சார் என பல நடிகர்கள் வந்து பிரபலமாகியிருக்கிறார்கள். அவர்கள் வழியில் நானும் தமிழக மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடிக்க வேண்டும் என்பதும் என் எதிர்கால திட்டம்.” என்று நம்பிக்கையோடு ஆதிக்பாபு பேசினார்.

Aadhik Babu staring Kuttram Purindhal is Crime thriller

ஹிப் ஹாப் ஆதியின் ‘நான் சிரித்தால்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி

ஹிப் ஹாப் ஆதியின் ‘நான் சிரித்தால்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hip Hop Aadhis Nan Sirithal first look released by Rajiniமீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘நான் சிரித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த இரு படங்களை போல இந்த படத்தையும் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

புதுமுக இயக்குநர் ராணா இயக்க ஐஸ்வர்யா மேனன், படவா கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த பட இயக்குனர் ராணா, தீவிரமான ரஜினி ரசிகர் என்பதால் அவரின் ஆசைப்படி ‘நான் சிரித்தால்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

Hip Hop Aadhis Nan Sirithal first look released by Rajini

கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்து விளக்கேற்றிய ரஜினி

கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்து விளக்கேற்றிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Gifts House for Kalaignanam who introduced Rajini as heroஅபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகப்படுத்தினார் கே. பாலசந்தர். இதனையடுத்து இன்னும் ஒரு சில படங்களில் வில்லனாகவே தொடர்ந்தார்.

ஆனால் அவரை பைரவி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் கலைஞானம்.

கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டில் 75 ஆண்டு கால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாளையொட்டி பாரதி ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்துக் கொண்டனர். அப்போது கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில் வசிப்பதால், தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக கூறியிருந்தார் ரஜினி.

அதன்படி சென்னை விருகம்பாக்கத்தில், ரூ.45 லட்சம் மதிப்பில், 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட வீட்டை வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த வீட்டின் பூஜையறையில் இன்று ரஜினிகாந்த் குத்து விளக்கு ஏற்றியுள்ளார். பின்பு வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு தெய்வீமாக உள்ளது இல்லம் என தன் மகிழ்ச்சியை தெரிவித்து சென்றார்.

இதையடுத்து, கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றியுள்ளார் என கலைஞானம் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Rajini Gifts House for Kalaignanam who introduced Rajini as hero

பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன்

பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூர்யா – தனுஷ் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Dhanush and Sivakarthikeyan clash in Box office செப்டம்பர் 20ல் சூர்யா நடித்த காப்பான், செப்டம்பர் 27ல் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை மற்றும் அக்டோபர் 4ல் தனுஷ் நடித்த அசுரன் ஆகிய 3 படங்கள் சரியாக 1 வார இடைவெளியில் ரிலீசாகியுள்ளது.

இந்த 3 படங்களுக்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை குடும்பத்துடன் பார்த்து செல்கின்றனர்.

நேற்று வெளியான அசுரன் படத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர்.

இதனால் பாக்ஸ் ஆபிசில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Suriya Dhanush and Sivakarthikeyan clash in Box office

தனுஷுடன் நடிகராக மோதி இசையமைப்பாளராக ஜெயித்த ஜிவி. பிரகாஷ்

தனுஷுடன் நடிகராக மோதி இசையமைப்பாளராக ஜெயித்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Dhanush and GV Prakash movies clash and Who wonதான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஜிவி. பிரகாஷ் தான் பெரும்பாலும் இசையமைத்து வருகிறார்.

இவையில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் அசுரன் ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்துள்ளார்.

இதில் ‘அசுரன்’ படம் நேற்று முன்தினம் (அக். 4) வெளியானது. இதில் ஜிவி பிரகாஷின் இசைக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

அதே சமயம் ஜிவி. நாயகனாக நடித்து இசையமைத்த ‘100 % காதல்’ படமும் நேற்றுதான் வெளியானது.

இதில் ஜிவி பிரகாஷின் நடிப்புக்கும் படத்துக்கும் நெகட்டிவ் கமெண்டுக்களே வருகின்றன.

ஒரு இசையமைப்பாளராக ஜெயிக்கும் ஒரு நடிகராக ஜெயிக்கவில்லையே என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்படுகிறது.

Actors Dhanush and GV Prakash movies clash and Who won

இளைய சமுதாயம் ரஜினியிடம் கற்றுக் கொள்ளனும்.. – ஸ்ரீமன் நெகிழ்ச்சி

இளைய சமுதாயம் ரஜினியிடம் கற்றுக் கொள்ளனும்.. – ஸ்ரீமன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sriman shares his experience with Rajini in Darbarசினிமா துறையில் பல வருடங்கள் பயணித்தாலும் தற்போது தான் முதன்முறையாக ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்து நடித்துள்ளார் நடிகர் ஸ்ரீமன்.

ரஜினியுடன் நடித்தது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

ரஜினி நடித்ததும் சந்தோஷம். எத்தனை உயரத்தில் இருந்தாலும், ரஜினியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பணிவு; அன்பு.

அப்படியொரு குணம் ஒரு சிலருக்குத் தான் இருக்கும். இளைய சமுதாயம், ரஜினியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என கூறியுள்ளார்.

Sriman shares his experience with Rajini in Darbar

More Articles
Follows