ஆதியுடன் பார்ட்னராக இணையும் ஹன்சிகா-பாலக் லல்வாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RFC கிரியேஷன்ஸ் சார்பாக S.P.கோலி தயாரிக்கும் புதியபடமான “பார்ட்னர்” என்ற படத்தில் ஆதி மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கின்றனர்.

ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். இவர் குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் படத்தின் பெரும் பில்லர்களாக பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், vtv கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, ‘டைகர்’தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.

டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது,

“இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும்.

அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது. படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கரியரில் முக்கியமான படமாக இருக்கும்.

மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார்.

இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

மேலும் படத்தில் பணிபுரியும் டெக்னிஷியன்ஸ் விபரம்.

ஒளிப்பதி: சபீர் அஹமது

மியூசிக்: சந்தோஷ் தயாநிதி

எடிட்டர்: கோபி

கலை: சசி

மக்கள் தொடர்பு: யுவராஜ்

சமூகத்தை பாதிக்கும் உலகமயமாக்கலை சொல்லும் ‘குச்சி ஐஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற படம் உருவாகிறது.

பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார்.

இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.

‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

பழநீஸ். Ks. ஒளிப்பதிவு செய்கிறார். தோஷ் நந்தா இசையமைக்கிறார்.

உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்கிறது படம்.

‘குச்சி ஐஸ்’ படத்தின் தொடக்க விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாத வாக்கில் படம் வெளியாகவுள்ளது.

Bigg Boss Barani and Rithika to romance in Kuchi Ice

வந்தியத்தேவன் வேடத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக கார்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் எது? என்ற கேள்வி கோலிவுட்டில் வெகுநாட்களாக உள்ளது.

தற்போது அவர் தனது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதில் விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கலாம் என கூறப்பட்டது.

தற்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து இப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த கதையில் வந்தியத்தேவன் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அனுகினார்களாம்.

ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறாராம்.

Karthi plays as Vanthiyathevan in Maniratnams Ponniyin Selvan

மணிரத்னம் படத்தில் சரத்-ராதிகா-விக்ரம் பிரபு & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் புதிய படம் ‘வானம் கொட்டட்டும்’.

இப்படத்தை மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்குகிறார்.

இதில் விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இவர்களுடன் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகாவும் நடிக்கின்றனர்.

அவர்கள் திரையிலும் கணவன்-மனைவியாகவே நடிக்கின்றனர்.

வருகிற ஜூன் மாதம் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார்களாம்.

Radhika Sarathkumar Vikram Prabhu and Aishwarya Rajesh in Vaanam Kottatum

நம்ம தல-க்கு இதே வேலையா போச்சு.; பயத்தில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவை தொழிலாக நினைக்காமல் ஒரு கலையாக நினைத்து அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

சண்டைக் காட்சிகளில் கூட டூப் எதுவும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர். அதில் அஜித்தும் முக்கியமானவர்.

இவர் தற்போது வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிக்க யுவன் இசையமைக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லையாம். ஒரு அதிரடியான மழை சண்டை காட்சியை அண்மையில் படமாக்கினார்களாம்.

அதில் டூப் நடிகரை பயன்படுத்தாமல் அஜித்தே ரிஸ்க் எடுத்து நடித்தாராம்.

ஏற்கெனவே இதுபோன்ற ரிஸ்க் காட்சிகளில் நடித்து அடிப்பட்டு உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர் அஜித்.

இவரின் ரிஸ்க் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Thala fans in fear because of Ajiths risk in Stunts

தளபதி தரிசனத்திற்காக வடசென்னையை வலம் வரும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்கார் படத்தை முடித்து விட்டு அட்லி இயக்கத்தில் நடிதுது வருகிறிர் விஜய்.

இது விஜய்யின் 63வது படமாக உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோ நடித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னிமில்லில் நடைபெற்றது. அங்கு ரசிகர்கள் அதிகம் கூடவே அவர்களை அடிக்கடி சந்தித்தார்.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வட சென்னை, காசிமேடு கடற்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நள்ளிரவு நேரம் என்றாலும் அங்கும் ரசிகர்கள் வருகிறார்களாம்.

அந்த நேரத்திலும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவர்களை தளபதி சந்தித்து வருகிறார்.

Vijay and Atlees Thalapathy 63 shooting updates

More Articles
Follows