அடங்காதவனை அசர வைக்கும் வனமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜீன் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிம்புவின் ‘AAA’ படம் மற்றும் ஜெயம் ரவியின் வனமகன் படம் ரிலீஸ் ஆனது.

நேற்று ரம்ஜான் என்பதால் நான்கு நாட்கள் இப்படத்திற்கு ஓப்பனிங் கிடைத்தது.

இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் சிம்பு படத்திற்கு இருந்த முதல் நாள் எதிர்பார்ப்ப்பு நாளடைவில் தேய்ந்து போனது.

அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் விஜய்யின் திரைக்கதை, காட்டுவாசி கதை, ஜெயம் ரவியின் நடிப்பு, சாயிஷாவின் அழகான நடனம் ஆகிய நல்ல விமர்சனங்களுக்காக இப்படம் நல்ல வசூலை பெற்றுள்து.

கடந்த 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.7.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வசூலில் நெருங்கி வந்தாலும் இனிவரும் நாட்களில் வனமகன் அடங்காதவனை அசர வைத்துவிடுவான் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

AAA and Vanamagan movies Box office collection

அத கன்பார்ம் பன்னுங்க; சினிமாவே விட்டே போறேன்… சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுவயது முதலே சிம்பு சினிமாவில் நடித்து வந்தாலும், அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டும் இருக்கும்.

அதாவது அவர் சொன்ன நேரத்திற்கு சூட்டிங்குக்கு வருவதில்லை. இரவில் முழித்துக் கொண்டு இருப்பார். பகலில் உறங்குவதால் சரியான நேரத்திற்கு வரமாட்டார் என்பது அந்த குற்றச்சாட்டு.

இந்நிலையில் சிம்பு தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

‘என்னை நம்பி பணம் போட்டு படமெடுக்கிறாங்க.

அவங்க எதிர்பார்க்குற நடிப்பை நான் கொடுக்கனும். அத கொடுக்கமுடியும் அப்படிங்கிற மனநிலைக்கு நான் வந்தபின்னர்தான் சூட்டிங் ஸ்பாட் வருவேன்.

அதுக்காக யார் திட்டினாலும் கவலையில்லை. சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்ட்டா ஒரே டேக்தான். ஓகே பண்ணிடுவேன்.

அங்க போய் 20 டேக் எடுத்து டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.

சிம்வுவால சூட்டிங் லேட் ஆச்சுன்னு யாராவது சொன்னா, நான் சினிமாவ விட்டே போறேன் என தெரிவித்துள்ளார்.

சிம்புவை வைத்து இரண்டு படங்களை இயக்கிய கௌதம் மேன்னும் ஒன் டேக் ஆர்ஸ்ட்ஸ்ட் சிம்பு என தெரிவித்திருந்தார்.

மேலும் சிம்புவை வைத்து எத்தனை படங்களை இயக்க சொன்னாலும் இயக்குவேன் என அவர் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தனுஷின் மனைவியானது குறித்து அமலாபால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்து வெற்றிப் பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி.

இதன் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

அடுத்த ஜீலை மாதம் 28ஆம் தனுஷின் பிறந்தநாளில் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் ட்ரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பான விழாவில் அமலாபால் பேசியதாவது….

‘விஐபி’ பர்ஸ்ட் பார்ட்டில் தனுஷ் என்னை கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு நன்றி.

முதல் பாகத்தில் காதலர்களாக இருந்த நாங்கள், இந்த இரண்டாம் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளோம்’ என்று பேசினார்.

Amala Paul open talks about his character in VIP2

சூர்யா-அனிருத்-விஜய்அம்மா கலந்து கொண்ட நாக் ஸ்டூடியோஸ் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய அளவில் ஆபரணத்துறையில் மிகவும் பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு நவீன ஸ்டுடியோவை வடிவமைத்திருக்கிறது. அதன் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் சிவகுமார், சூரியா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் பிரியதர்ஷன், ஐ.வி.சசி, ஞான ராஜசேகரன், விக்னேஷ் சிவன், ரவி ராகவேந்திரா, ஷோபா சந்திரசேகரன், லக்‌ஷ்மி சிவகுமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

விழாவில் ‘knack ஸ்டுடியோஸ்’ லோகோவை நடிகர் சூர்யா வெளியிட, சவுண்ட் ஸ்டுடியோவை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும், வீடியோ பிரிவை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய knacக் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆனந்த பத்மநாபன், “இங்கு திரையுலகின் முக்கியமான ஜாம்பவான்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் கடையில் வாடிக்கையாளர் முன்பு எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வகையில் நான் நடிகனாக இருந்தேன். என் மகன் நடிகர்களோடே தொடர்பில் இருந்தான்.

மயிலாப்பூர் மாதிரி படித்தவர்கள் அதிகம் வாழும் இடத்தில் கடையை திறம்பட நடத்துவது மிகவும் கடினம். அதை செய்து காட்டினோம். அதன் பிறகு நிறைய கிளைகளை ஆரம்பித்தோம். ஒரே நேரத்தில் மூன்று கடைகளை திறப்பேன் என்று என் மகனிடம் சொன்னேன்.

காஞ்சிபுரம், பெரம்பூர், வேளச்சேரி என மூன்று கடைகளை ஒரே நாளில் திறந்தோம். தன்னம்பிக்கை தான் அதை சாத்தியப்பட வைத்தது. என் மகம் ஸ்டைலோரி என்ற ஃபேஷன் ஸ்டோரை ஆரம்பித்தான். அதுவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

தொழிலில் பல நுணுக்கங்களை கையாண்டு தான் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். அதுபோலவே குறைந்த பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுப்போம்” என்றார்.

நாக் ஸ்டூடியோஸ் உரிமையாளர் ஆனந்த ராமனுஜம் பேசும்போது, “தி.நகர் கிளையை ஆரம்பிக்கும் முழுப்பொறுப்பையும் அப்பா என்னிடம் ஒப்படைத்தார். அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தினேன்.

அதை தொடர்ந்து knack ஸ்டுடியோஸ் ஆரம்பிக்கும் எண்ணத்தை சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக சம்மதித்தார். ஆபரண துறையில் என்ன தரத்தை கொடுத்தோமோ, அதை சினிமா துறையிலும் கொடுப்போம்.knack ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் வந்தன.

ஆடியோகிராஃபர் ஸ்ரீதர் சாரின் மகன் வினய் தான் இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்க முக்கிய காரணம்” என்றார்.

உதவி இயக்குனராக இருந்த நான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் ஹார்ட் டிஸ்க்கை தூக்கிக் கொண்டு அலைந்தேன். அப்போது ஒரே இடத்தில் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன்.

அதன்படி அமைந்த ஸ்டுடியோ தான் இந்த knack ஸ்டுடியோஸ். வாடிக்கையாளர் கண்ணோட்டத்தில், அவர்கள் விரும்பும் வகையில் ஸ்டுடியோவை அமைத்திருக்கிறோம் என்றார் நாக் ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஹரிஷ் ராம்.

நாக் ஸ்டுடியோஸ் சோனி மியூசிக் உடன் இணைந்து ‘தி மெட்ராஸ் கிக்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுய இசைக்குழுக்களும், சுய இசையமைப்பாளர்களும் ‘மெட்ராஸ் கிக்’ மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.

பல புதிய திறமைகளை கண்டறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மெட்ராஸ் கிக்’ அமைப்பை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மதன் கார்க்கி தொடங்கி வைத்தனர். சோனி மியூசிக் அஷோக் பர்வானி உடன் இருந்தார்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் அனிருத், “ஆனந்த் என்னுடைய கல்லூரி சீனியர். லாஸ் ஏஞ்சலஸ் போனபோது அங்கு நான் பார்த்த ஸ்டுடியோக்கள் தோட்டம், ஓய்வு எடுக்கும் அறைகள், புத்துணர்வளிக்கும் லௌஞ் ஆகியவையோடு அமைந்திருந்தன.

ஒரு கலைஞனுக்கு தேவையான அம்சங்கள் அவை. அதே அம்சங்களோடு இந்த ஸ்டுடியோவை அமைத்திருக்கிறார்..இந்த ஸ்டூடியோ நிச்சயமாக மிக மிக நல்ல இடத்தை அடையும்” என்றார்.

விழாவில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, தயாரிப்பாளர்கள் சீனிவாசன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இயக்குனர் சுந்தர்.சி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஜெகன் தொகுத்து வழங்கினார்.

Suriya Karthi Anirudh Vijay mother participated in Knack studios launch

 

 

ரஜினியா வெடிக்காத பட்டாசு..? சீமானுக்கு எஸ்வி சேகர் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆரம்பம் முதலே சீமான் எதிர்த்து வருகிறார்.

எந்த பேட்டி என்றாலும் அதில் ரஜினியை சாடி வருகிறார்.

அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்கிறாரோ தவிர அவருடன் மோதி பார்ப்போம் என்று கூறவில்லை.

அண்மையில் ‘ரஜினி மிகப்பெரிய பட்டாசாக இருந்தாலும் அது வெடிக்காமல் புஸ்ஸாகும் என்று கிண்டலாக சொல்லியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில் பக்கத்தல் கூறியுள்ளதாவது…

S.VE.SHEKHER‏ @SVESHEKHER
“ரஜினிகாந்த் வெடிக்காத தீபாவளி பட்டாசு ஆகிவிடுவார்” : சீமான். நமுத்துப்போன ஊசி பட்டாசின் அழுகை.

SVe shekar support Rajinikanth against Seeman statement

விவேகத்துடன் மோதும் தேசிய விருது இயக்குனரின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம்.

இப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி நிச்சயம் வெளியாகிவிடும் என்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், JSK பிலிம்ஸ் சார்பாக சதீஷ் தயாரித்துள்ள தரமணி படத்தையும் அன்றைய தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருதை பெற்ற ராம் இயக்கியுள்ள படம் தரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடல் ஆகிய விருதுகளை தரமணி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows