தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.
ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய K.ராஜன்…
“அண்ணன் அண்ணாமலையின் மறைவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை பல சமயங்களில் அவர் பாராட்டியுள்ளார்.
உதாரணமாக, திருட்டு VCD களுக்கு எதிராக, பர்மா பஜாரில் நான் கடைகளை அடித்த போது. என்னை அவர் பாராட்டினார். மேலும், பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பலவற்றை பேசியுள்ளோம்.
அவரை போல் நிர்வாகம் செய்து, விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் பெற்றுத்தர “ரோகினி” பன்னீர் செல்வம் நினைத்தால் தான் முடியும்.
விரைவில், ஒரு குழுவாக நடிகர்களின் சம்பளம் குறித்தும். OTT பிரச்சனை குறித்தும் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”. என்றார்.