ரஜினி-சிவகார்த்திகேயன் படங்கள் பாணியில் உருவாகும் *நகல்*

A Science Fiction Nagal movie shooting starts with Poojaஅண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்சன்ஸ் படங்கள் உருவாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படம், மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் இந்த வரிசையில் உருவாகிறது.

தற்போது இதே பாணியில் நகல் என்ற படம் உருவாகவுள்ளது. இதன் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்”.

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.

அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன. அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.

S2S பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும் மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

நாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

F.S.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட், மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன் துவங்கியது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்படத்தின் 75% படப்பிடிப்பு சென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.

மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

A Science Fiction Nagal movie shooting starts with Pooja

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More
மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக்…
...Read More

Latest Post