தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என்பார்கள்.
அவர்கள் நடிகர்களுக்காக எதையும் செய்வார்கள் என்ற பேச்சு பல காலமாகவே இருந்து வருகிறது.
நடிகருக்கு பேனர் வைப்பது, கட்அவுட் பாலாபிஷேகம் செய்வது, ஏன் நடிகரின் பெயரில் அன்னதானம் செய்வது, அவருக்காக தேர் இழுப்பது என்று பல செய்திகளை கேட்டிருப்போம்.
சிலர் தெய்வமாக மதித்து அவருக்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக நடிகை குஷ்பூக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளனர்.
தற்போது கோலிவுட்டைப் போல் பாலிவுட்டில் இப்படியொரு ரசிகை இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹரிச்சந்திரா திரிபாதி என்ற பெண் ரசிகை ஒருவர் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
தனது நோய்க்காக கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் மரணம் அடைந்தார்.
அந்த பெண்ணின் வங்கி கணக்கு, லாக்கர் ஆகியவற்றை வங்கி அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது, ‘தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் இருக்கும் தனது பொருட்கள் அனைத்தையும் நடிகர் சஞ்சய்தத்துக்கே கொடுக்க வேண்டும்’ என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
ரசிகையின் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி சஞ்சய்தத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய்தத் அதை ஏற்க மறுத்த அனைத்தையும் அவருடைய குடும்பத்தாருக்கே கொடுக்க ஏற்பாடு செய்து விட்டாராம்.