‘லவ் டுடே’ பாணியில் புதிய படம்.; புருஷன் – பொண்டாட்டி மொபைல மாத்திக்கிட்டா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ரிங் ரிங்’.

திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தை சமீபத்தில் தொடங்கினர்.

இந்த ஓடிடி தளத்தின் முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படமான ‘ரிங் ரிங்’ வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளை மிகவும் நகைச்சுவையான முறையில் ‘ரிங் ரிங்’ விவரிக்கிறது.

சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், சஹானா ஷெட்டி, டேனியல் போப் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் காதலர்களிடையேயான மொபைல் போன் பரிமாற்றத்தின் விளைவுகளை கையாண்ட நிலையில், திருமணமான தம்பதியினரிடையே கைபேசி பரிமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சுவாரசியமான முறையில் ‘ரிங் ரிங்’ காட்சிப்படுத்தி உள்ளது.

வெறும் 150 ரூபாய் கட்டணத்தில் 48 மணி நேரத்திற்கு இப்படத்தை வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்து கண்டு ரசிக்கலாம். ஆண்ட்ராய்டு, இணையம், ஐஓஎஸ், ஃபையர் டிவி ஸ்டிக் மற்றும் ரோகு உள்ளிட்ட தளங்களில் இது கிடைக்கும். Moviesuperfans.com இணையதளத்தில் இத்திரைப்படத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ உள்ளடக்க பங்குதாரராக ProducerBazaar.com நிறுவனமும் சந்தைப்படுத்தல் பங்குதாரராக யூனிவர்ஸ் என்டர்டைன்மெண்ட்சும் உள்ளனர்.

A new film in the style of ‘Love Today’

‘தி லிட்டில் மெர்மெய்ட்’..: இளவரசி ஏரியலின் கடல் கன்னி உலகில் ஜான்வி கபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’.

இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி, இளவரசர் எரிக்காக ஜோனா ஹவுர்-கிங், கிங் ட்ரைட்டனாக ஜேவியர் பார்டெம், செபாஸ்டியனாக டேவிட் டிக்ஸ், ப்ளோண்டராக ஜேக்கப் ட்ரெம்ப்ளே, ஸ்கட்டிளாக அவ்குவாபினா, நோமாவாக டுமேஸ்வேனி மற்றும் ஜூட் அகுவுடிகே ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு மாயாஜால வீடியோவானது அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளவரசி ஏரியலின் மாயாஜால உலகில் ஒரு ரசிகராக ஜான்வி கபூர் காலடி எடுத்து வைத்து ஏரியலாக மாறி தன் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளப்பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Janhvi Kapoor steps into the world of The Little Mermaid

ரசிகையின் மரணத்தால் மனமுடைந்த நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது.

கடந்த மே 6-ஆம் தேதி மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது.

வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ஐஸ்வர்யா உயிரிழந்தார்.

இவர் ஐதராபாத் உள்ள சரூர் நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஆவார்.

ஐஸ்வர்யாவின் மரணம் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஐ.டி. நிறுவனத்தின் மேலாளர் ஐஸ்வர்யா நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஆவார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஐஸ்வர்யாவின் புகைப்படம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ஐஸ்வர்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பியதுடன், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Suriya’s heartfelt condolences to his diehard fan

என்டிஆர் பிறந்தநாளில் ‘DEVARA’ பர்ஸ்ட் லுக்.; ஜான்வீ கபூர் & சயிஃப் அலிகானுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘என்டிஆர்30’ என்று பெயரிடப்பட்டது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளான இன்று மே 19ம் தேதியன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகியுள்ளது.

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்திற்கு ‘தேவரா’ (Devara) என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், ‘தேவரா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘DEVARA’ first look on NTR’s birthday; Teaming up with Janhvi Kapoor & Saif Ali Khan

ரஜினி – ஸ்ரீதேவியின் ரீல் அம்மா நடிகை வசந்தா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை V.வசந்தா.

இன்று மாலை 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். 82 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் , ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

மேலும் ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.

மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

திரை உலகை சேர்ந்தவர்களும் நடிகர் சங்க நிர்வாகிகளும் இவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாளை (மே-20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.

*முகவரி*
Gugan, 6383 362 323
18A/15, V.D.Loganathan street
West k k nagar
Chennai -78

Senior Actress Vasantha passes away

மரியாதைக்குரிய கபில்தேவ் உடன் நடிப்பது கௌரவம்.; ரஜினி் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் & விக்ராந்த் கதை நயாகர்களாக நடிக்க ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவரின் தங்கையாக முன்னாள் நடிகை ஜீவிதா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவலை பார்த்தோம்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னாள் கிரிக்கெட் வீர கபில்தேவ் உடன் இணைந்து நடிப்பது குறித்து நடிகர் ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

“முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

It is my honour and privilege working with the Legendary, most respected and wonderful human being Kapildevji., who made India proud winning for the first time ever..Cricket World Cup!!!
#lalsalaam
#therealkapildev

I feel proud to work with Kapil Dev says Rajinikanth

More Articles
Follows