அம்பேத்கர் சிலைக்கு A படம் குழுவினர் அம்பேத்கர் வேடத்தில் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு A படம் குழுவினர் அம்பேத்கர் வேடத்தில் மரியாதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A movie team pays respect to BR Ambedkar Statueஇன்று ஏப்ரல் 14ல் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “A படம்” படக்குழுவினர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

இப்படம் சமூக மாற்றத்திற்காக எடுக்கப்படுகிறது அதிகார வர்க்கத்தினரால் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருமென அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அம்பேத்கரராக நடிக்கும் ராஜகணபதி அவரின் உருவத்தில் வந்திருந்தார்.

இப்படத்தினை வேலு பிரபாகரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சிவா.கோ எழுதி இயக்குகிறார். MAM TEAM என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.

A movie team pays respect to BR Ambedkar Statue

a movie team

60 ஆண்டுகளுக்கு முன்பே 11 கோடி அள்ளிய நாடோடி மன்னன்; இப்பவும் ஹிட்டு!

60 ஆண்டுகளுக்கு முன்பே 11 கோடி அள்ளிய நாடோடி மன்னன்; இப்பவும் ஹிட்டு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGRs Nadodi Mannan 25th Day Celebrations Event News1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”.

அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான்.

இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள்.

இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.

இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

MGRs Nadodi Mannan 25th Day Celebrations Event News

ராதா மோகன் இயக்கத்தில் இணையும் விதார்த்-ஜோதிகா

ராதா மோகன் இயக்கத்தில் இணையும் விதார்த்-ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vidharth roped in for Radha Mohans remake with Jyotikaதமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விதார்த்.

மைனா, குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய படங்களில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

இந்நிலையில், ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம் விதார்த்.

இதன் ஒரிஜினல் ரீமேக்கில் வித்யாபாலன் நடித்திருந்தார்.

அவரது கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார்.

ஏற்கெனவே ராதா மோகன் இயக்கிய மொழி படத்தில் ஜோதிகா நடித்திருந்தார்.

இப்படத்தை போஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.

Vidharth roped in for Radha Mohans remake with Jyotika

உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து : ரஜினி

உரிமைக்காக போராடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Tamil New year wishes 2018இன்று விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது.

எனவே அதிகாலை முதலே ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினியும் தன் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழர்கள் போராடி வருவதால் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது என்ற வகையில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்…

“உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகி விட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு ரஜினி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth Tamil New year wishes 2018

அம்பேத்கரின் அரசியல் சாசன வழிநடப்போம்; கமல் புத்தாண்டு வாழ்த்து

அம்பேத்கரின் அரசியல் சாசன வழிநடப்போம்; கமல் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan tamil new year wishes 2018இன்று விளம்பி என்ற தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது.

இதனையொட்டி பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்… உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம்.

மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Kamalhassan tamil new year wishes 2018

மணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி

மணிரத்னம் ஒரு ஐடியா கடல்; தேசிய விருது பெற்றது குறித்து ஏஆர். ரஹ்மான் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது மற்றும் ஸ்ரீதேவி நடித்த மாம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) விருது ஆகிய 2 தேசிய விருதுகளை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பெற்றுள்ளார்.

இந்த விருதுகள் கிடைத்தது பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

AR Rahman talks about Manirathnam and National Award

இதோ அந்த வீடியோ…

More Articles
Follows