ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி; கோழி முட்டையில் மஞ்சள் கருவுக்கு பதிலாக பச்சை கரு

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confusedகேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷிகாபூதின்.

இவரின் கோழி பண்ணையில் 6 கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகள் இட்டு வருகின்றன.

வழக்கமாக கோழி முட்டை என்றாலே மஞ்ச கருக்களே இருக்கும்.

எனவே இந்த சந்தேகத்தை போக்க கோழிகள் இட்ட முட்டைகளை அடைகாக்க வைத்து குஞ்சு பொரிக்க செய்தனர். அந்த கோழிகளும் பச்சை கரு முட்டையை இட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அதிசயத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

இதனையறிந்த பேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கோழிகள் ஏதேனும் வித்தியாசமான தீவனங்களை சாப்பிட்டதால் இதுபோன்ற பச்சை மஞ்சள் கரு முட்டையிடுவதற்கு வாய்ப்பிருக்கு என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தான் எந்த ஒரு வித்தியாசமான தீவனமும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்த பச்சை முட்டைக்கு பின்னணி உள்ள ரகசியத்தை கண்டறிய மூன்று வாரங்கள் தேவைப்படும் என இந்த துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கோழிகளை பல்கலைக்கழகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கோழிகள் மூன்று வாரத்திற்கு பிறகு மஞ்சள் கரு முட்டை போட்டால் பண்ணையில் வித்தியாசமான தீவனங்கள் வழங்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படும்.

அப்படி இல்லை என்றால் மூன்று வாரங்களுக்குப் பிறகும் பச்சை கருமுட்டை போட்டால் அதற்கான சரியான காரணங்களை கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

A green yolk Hen egg goes viral in Kerala scientists Confused

Overall Rating : Not available

Latest Post