‘வன்முகம்’ படத்தில் அரசியல்வாதிகளுக்கு சௌவுக்கடி கொடுக்கும் கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதார்த்த நாயகன் *கதிரவன்* துணிச்சலோடு நடிக்க, *ஆறடி* திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக பல சர்வதேச விருதுகளை குவித்த நாயகி *தீபிகா ரங்கராஜு* ம் இணைந்து நடிக்கும் படம் *வன்முகம்*.

இதை *ரஞ்சித் பால்* இயக்குகிறார்.இப்படத்தில் *தல அஜித்* (நேர்கொண்ட பார்வை), மக்கள் செல்வன் *விஜயசேதுபதி*(கவன்), *தனுஷு* டன் (வேலை இல்லா பட்டதாரி) போன்ற படங்களில் நடித்த நடிகை *பிரியதர்ஷினி ராஜ்குமார்* முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் வெற்றி பெற்ற *ஜீ.வி.பிரகாஷ்* மற்றும் *சித்தார்த்* நடித்த *சிவப்பு மஞ்சள் பச்சை* படத்தின் வில்லன் நடிகர் *பிரதீப்* இதில் மிரட்டி இருக்கிறார்.

இன்னும் பல நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்து நடித்து அசத்தி இருக்கின்றனர்.

இதன் முழு படப்பிடிப்பும் *புதுச்சேரி* மாநிலத்தை சுற்றியே நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் *உன்னால் ஏனோ* என்கிற பாடல் இணையதளத்தில் வைரலாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு நல்ல வரவேற்பையம் பெற்றுள்ளது.

இந்த *வன்முகம்* வருகிற *டிசம்பர்* மாதம் இறுதியில் மக்களிடம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

A Debut hero Kathiravan plays dual role in Vanmugam

காதலை வித்தியாசமாக சொல்லும் ‘மழையில் நனைகிறேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்துள்ள படம் “மழையில் நனைகிறேன்”.

இப்பட தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது

அறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார் படம் குறித்து கூறியதாவது…

இது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள்.

வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம்.

காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது.

ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள்.

உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள்

B. ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோர் Rajsree ventures சார்பில் “மழையில் நனைகிறேன்” படத்தை தயாரிக்கிறார்கள்.

முன்னணி பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிக்க முக்கிய பாத்திரங்களில் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


தொழில் நுட்ப கலைஞர்கள்…

வசனம் – விஜி, கெவின் பாண்டியன்
இசை – விஷ்ணு பிரசாத்
ஒளிப்பதிவு – J. கல்யாண்
எடிட்டிங் – G.B. வெங்கடேஷ்
கலை – N. மகேந்திரன்
பாடல்கள் – லலிதானந்த், முத்தமிழ்
உடை வடிவமைப்பு – ஶ்ரீவித்யா ராஜேஷ்
சண்டைப்பயிற்சி – T. ரமேஷ்
ஸ்டில்ஸ் – P.M. கார்த்திக்

Mazaiyil Nanaigiren movie will be treat for Lovers

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட இந்தியாவின் முதல் படம் ‘அக்னி சிறகுகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்துள்ள படம் “அக்னி சிறகுகள்”.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.

இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும் படமாக்கப்பட்டு வருகிறது.

உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும் பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது.

கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும், அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை வியப்பிலாழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது. தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா படம் உருவாகி வந்திருக்கும் விதத்தால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இயக்குநர் நவீனின் அட்டகாச கதைசொல்லல் முறையும், அவரது குழு படத்தை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியுள்ளதையும் பெருமளவு பாராட்டியுள்ளார்.

மேலும் இப்படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என்றார்.

அக்னி சிறகுகள் படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே எஸ் கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்க, K A பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Agni Siragugal is the first Indian movie shot at Kazakhstan

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ‘டத்தோ’முஹம்மது யூசுப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அந்த மாநிலத்தைத் தவிர இதர மாநிலங்களும் வெளியாகும், இன்னும் சொல்ல வேண்டுமென்கிறால் உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும்.

இதற்கென்று பிரத்யேக விநியோகஸ்தர்கள் இருப்பார்கள்.

டி.எம்.ஒய். (DMY) கிரியேஷன் மலேசியா மற்றும் எஃப்.எம்.எஸ். -ல் ‘காலா’, ‘2.0’ உள்ளிட்ட 167 படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய அளவில் வெளியீட்டு இருந்தனர்.

இன்னமும் பல பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவற்றை வெளியிடவுள்ளார்கள்.

இது குறித்தும், ரஜினியின் ‘காலா’ மற்றும் ‘2.O’ ஆகிய படங்களை வெளியிட்டது குறித்தும், டி.எம்.ஒய். (DMY) கிரியேஷன்-னின் தலைவர் ‘டத்தோ’ மொஹமது யூசோப் அவர்கள், மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார்.

Malaysian Distributor DMY creations Mohmed Yosuf met Rajini

கபடதாரி படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார்.

இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் :-

கதையை எம். ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதை & வசனத்தை ஜான் மகேந்திரன் & டாக்டர்.ஜி. தனஞ்சயன் கவனிக்கிறார்கள். ஒளிப்பதிவை ராசமதியும், கலை இயக்குநராக விதேஷும் பணியாற்றுகிறர்கள்.
சைமன் கே கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு,
பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். வணிகத் தலைமையை எஸ். சரவணன் ஏற்க,
நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் ஏற்கிறார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க, தயாரிப்பு உருவாக்கம் டாக்டர்.ஜி. தனஞ்சயனும், தயாரிப்பை லலிதா தனஞ்சயனும் செய்கிறார்கள்.

நவம்பர் 1-ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பமான ‘கபடதாரி’ 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் வெளியாகும்.

நவம்பர் 29 – ல் வெளியாகும் மெரினா புரட்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் – தொல் திருமாவளவன்!

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் அரசியல் தலைவர்கள் திரு தொல் திருமாவளவன் MP, திரு தனியரசு MLA, திரு வேல்முருகன் EX MLA, திரு திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டினர்.

தொல் திருமாவளவன் அவர்கள் பேசும்போது “மத்தியில் ஆளக்கூடியவர்கள் பீட்டா என்ற விலங்கு நல அமைப்போடு இணைந்து நம்முடைய பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டை தடுக்க எவ்வாறு சதித்திட்டம் தீட்டினார்கள்.. தமிழக அரசியல் களம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தில் பாத்திரம் வகித்தது..தமிழக அதிகார வர்க்கம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தை சிதறடிக்க முயற்சி செய்தது..என்பதை ஆதாரங்களோடு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் வாக்குமூலங்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் ” என்று பாராட்டினார்.

திரு தனியரசு MLA பேசும்போது ” மெரினா புரட்சி தமிழ் மக்களின் போராட்ட வடிவத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்.. நம்மை வலிமைப்படுத்துகிற ஒரு படம்..வருங் காலத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிற காலகட்டத்தில் ஒரு போராட்டத்தை எப்படி அறவழியில் போராட வேண்டும் என்ற உந்துதலையும் நம்பிக்கையையும் தருகிற படம் ” என்று பேசினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வேல்முருகன் பேசும்போது “வரலாறு சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான ஆரம்ப விதை மெரினாவில் அன்று விதைக்கப்பட்டது..எப்படி அது லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது என்பதை நாளைய நம்முடைய தமிழ் சமூகம் தெரிந்து கொள்கிற வகையில் மிகச்சிறப்பாக எடுத்து தந்திருக்கிறார்கள்.”என்று பேசினார்.

திரு திருமுருகன் காந்தி பேசும்போது ” ஜல்லிக்கட்டு போராட்டம் இந்திய அரசு தமிழர்களின் பண்பாட்டை நசுக்குவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த போராட்டம்.. அரசியல் தலைவர்கள் ஏமாற்றுவதற்கு எதிரான போராட்டம்.. இந்த போராட்டத்தில் பொதுவெளியில் மறைக்கப்பட்ட தகவல்களை சிறப்பாக புலனாய்வு செய்து திரைப்படமாக தந்துள்ளனர்..இந்த திரைப்படத்தை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.. எல்லா இடங்களுக்கும் தமிழர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்று கேட்டு கொண்டார்.

More Articles
Follows