நம்பிக்கை துரோகம் முதல் வருட நாள்.; வெட்டப்பட்ட கோழியாய் ரஜினி ரசிகர்கள் துடித்த தினம்

நம்பிக்கை துரோகம் முதல் வருட நாள்.; வெட்டப்பட்ட கோழியாய் ரஜினி ரசிகர்கள் துடித்த தினம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 45 வருடங்களாக ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்.

இன்றைய தலைமுறை நடிகர்களால் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்ற நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். ரசிகர்கள் இவரை திரையை தாண்டி உயிருக்கு உயிராக நேசித்து வருகின்றனர்.

1990களில் அண்ணாமலை, பாட்ஷா பட ரீலீஸ் சமயம் முதலே ரஜினியை அரசியலுக்கு அழைக்க தொடங்கினர். அவரும் வரவேண்டிய நேரத்துல சரியா வருவேன் என சினிமாக்களில் பன்ச் டயலாக் பேசினார்.

எனவே தமிழகமே ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர். இது 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் கேள்வியாக இருந்தது. இதற்கு விடை சொல்லாமல் மௌனமாகவே இருந்து வந்தார் ரஜினி.

கடந்த 2011ஆம் ஆண்டில் உடல்நல குறைவால் ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற சென்ற போது ரசிகர்கள் பலர் நிம்மதியை இழந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மொட்டை போட்டனர், மண் சோறு சாப்பிட்டு ரஜினி நலம் பெற வேண்டினர்.

அப்போது ஆடியோவில் ரஜினி பேசியபோது.. நான் நடிகன். காசு வாங்குறேன்.. நடிக்கிறேன்.. என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க… நான் உங்களுக்கு என்ன செய்ய போகிறேன்.

நான் சிகிச்சை முடிந்து திரும்பி பின்னர் என் ரசிகர்கள் தலை நிமிர செய்வேன் என உருக்கமாக பேசியிருந்தார்.

அதன் பின்னர் சரியாக 2017 டிசம்பர் 31ல் தன் அரசியல் பிரவேசத்தை முறையாக அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021 பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவேன் என பேசினார்.

தமிழக அரசியல் சிஸ்டமே சரியில்லை. எவருமே பார்க்காத ஆன்மிக அரசியலை தமிழகம் பார்க்கும் என பல மேடைகளில் பேட்டிகளில் சொல்ல ஆரம்பித்தார்.

2021ல் தமிழக விரும்பும் அற்புதம் அதிசயம் நடக்கும் என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தார்.

மேலும் ரஜினி ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இதனால் பல அரசியல் கட்சிகள் கலங்கி நின்றன. ரஜினியுடன் கூட்டணி போட பல பிரபலங்கள் காத்திருந்தனர்.

ஆனாலும் ரஜினி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். காலா, 2.0, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

2020 தொடக்க முதலே கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. எனவே ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமானது. ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா? என ரசிகர்களே சந்தேகம் அடைந்தனர்.

ஆனாலும் ஒரு சிலர் ரஜினியை நம்பி கொண்டு இருந்தனர்.

2021 பொதுத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட இல்லையே ரஜினி தாமதம் சரியா? என நடுநிலையாளர்களே கேட்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு 2020 டிசம்பர் 29ல்… நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் துடித்தனர். கழுத்து வெட்டப்பட்ட கோழி உயிருக்கு போராடும் வலியை அவர்கள் அனுபவித்தனர் என்று கூட சொல்லலாம்.

கிட்டதட்ட 25 வருடங்களாக அரசியல் அறிவிப்பை அறிவிக்காத ரஜினி 2017 முதல் 2020 வரை அரசியல் தொடர்பான அறிவிப்புகள் தகவல்களை பேசி.. இப்படி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கதறினர்.

ஆனால் ஒரு சிலர் 2021 ஜனவரி 10ல் போராட்டம் நடத்தி ரஜினியை மீண்டும் அரசியல் அழைத்தனர். அதையும் ரஜினி கண்டித்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிக்கை விட்டார்.

ரஜினி வெளியிட்ட அறிக்கையில்…

இந்த கரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றி பேசவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினி அரசியல் அறிவிப்புகள்…

* 2017 டிசம்பர் 31-ந்தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

* 2018 ஜனவரி 1-ந்தேதி, ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க ‘ரஜினி மன்றம்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

* 2018 ஜனவரி 6-ந்தேதி, ரஜினி மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது.

* 2018 பிப்ரவரி 24-ந்தேதி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், ‘அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்று பரபரப்பாக பேசினார்.

* 2018 மார்ச் 12-ந்தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‘எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்று உறுதியாக கூறினார்.

* 2019 பிப்ரவரி 17-ந்தேதி, ‘சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

* 2019 நவம்பர் 22-ந்தேதி, ‘2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும்’ என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

* 2020 மார்ச் 13-ந்தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை; முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ என திட்டவட்டமாக அறிவித்தார்.

* 2020 நவம்பர் 31-ந்தேதி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, “அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறினார்.

* 2020 டிசம்பர் 3-ந்தேதி, “ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டார்.

* 2020 டிசம்பர் 14-ந்தேதி, ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றார்.

* 2020 டிசம்பர் 25-ந்தேதி, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

* 2020 டிசம்பர் 27-ந்தேதி, 3 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பினார்.

* 2020 டிசம்பர் 29-ந்தேதி, ‘நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை’ என்று ரஜினி அறிவித்தார்

A day which Thalaivar fans want to forget but not able to

இசைஞானியின் ‘மாயோன்’ பட பாடலில் சொற்குற்றம்..?.; இசை விமர்சகர்கள் எதிர்ப்பு

இசைஞானியின் ‘மாயோன்’ பட பாடலில் சொற்குற்றம்..?.; இசை விமர்சகர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான ‘மாயோன்’ பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

‘மாயோனே மணிவண்ணா..’ என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில்,…

”மாயோனே மணிவண்ணா..’ என தொடங்கும் பாடலில் ‘தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம்..’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வரிகளில் ‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு பதிலாக ‘தாழ் பணிந்தோம்’ என்றிருக்கிறது.

‘தாள்’ என்பதன் பொருள் வேறு. ‘தாழ்’ என்பதன் பொருள் வேறு. பக்திப் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடலில் இசைஞானி இளையராஜாவும், பாடகிகளான ரஞ்சனி & காயத்ரியும் ‘தாள் பணிந்தோம்’ என பொருள் மற்றும் உச்சரிப்பு பிசகாமல் பாடியிருக்கிறார்கள்.

ஆனால் லிரிகல் வீடியோவை உருவாக்கிய தொழில்நுட்ப குழுவினர், ‘தாழ் பணிந்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே படக்குழுவினர், ‘தாள் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? அல்லது ‘தாழ் பணிந்தோம்’ என்பது பொருத்தமானதா? என்பதைப் பற்றி உடனடியாக தெளிவுப்படுத்தவேண்டும்.” என குறிப்பிட்டனர்.

‘தாள் பணிந்தோம்’ என்பதற்கு, ‘இறைவனின் பாதம் பணிந்தோம்’ என நேரடியான பொருளை வழங்குகிறது. ‘தாழ் பணிந்தோம்’ என்பதற்கு ‘தாழ்மையுடன் பணிந்தோம்’ என்ற பொருளை தருகிறது. இந்த துல்லியமான வேறுபாட்டால், இசை ஆர்வலர்கள் பலரும் இணையத்தில் விவாத பொருளாக மாற்றி வருகிறார்கள்.

இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில்…

, “கதைச்சூழலின் படி ‘ தாள் பணிந்தோம்’,‘ தாழ் பணிந்தோம்’ என இரண்டுமே பொருத்தமானது தான் என்றும், லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ‘தாழ் பணிந்தோம்’ என்ற சொல்லும், இசை விமர்சகர்கள் உணர்த்தும் ‘தாள் பணிந்தோம்’ என்ற சொல்லும் புறநானூற்று இலக்கிய ஆதாரத்தின் படி இறைவனின் பாதம் பணிந்து வழிபடும் பொருளைத் தான் குறிப்பிடுகிறது.

இருந்தாலும் இசை விமர்சகர்கள் சுட்டி காட்டியதை ஏற்றுக்கொண்டு, ‘தாள் பணிந்தோம்’ என லிரிக்கல் வீடியோவில் மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

”என விளக்கமளித்திருக்கிறார்கள்.
இசை ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பெருமுயற்சி எடுத்து ‘தாள் பணிந்தோம்’ என்று பதிவேற்றம் செய்ததற்கு இசை ரசிகர்கள், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Music reviewers against Ilayaraaja’s Maayon song

பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன சுப்ரபாதம்

பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன சுப்ரபாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி.

பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர்.

இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது.

திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளது.

ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த டாப் தமிழ் நியூஸ் நிர்வாகம், தற்போது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் பாட, மாண்டலின் கலைஞர் ராஜேஷ் இசையில் புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா, ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மாண்டலின் ராஜேஷ், பாடகிகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கூறியதாவது…

“சங்கீத உலகத்திலேயே மிகவும் உயர்ந்த பேரும் புகழும் பெற்ற எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை அவரது தலைமுறையாக எம்.எஸ்.அம்மாவின் பேத்திகள் பாடியிருக்கிறார்கள்.

ராஜேஷ் அதற்கு இசைக்கருவிகளை இசைத்து அதை மென்மேலும் அழகுப்படுத்தி இருக்கிறார். இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்… எம்.எஸ். அம்மா பாடிய காலத்திலே அவர்களின் குரலை கேட்பதற்காகவே , உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்த தலைமுறைக்கு, அவர்களின் சந்ததியிலேயே எம்.எஸ்.அம்மாவின் பேத்திமார்கள் பாடியிருப்பதும், ராஜேஷ் அதற்கு உதவி செய்ததும், இந்தத் தலைமுறையினருக்கும், தலைமுறை தலைமுறையாக சங்கீதம் செல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பதாகதான், நான் பார்க்கிறேன்.

வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்காமல் சங்கீதத்தை கையிலேயே எடுத்துக்கொண்டு போனால், இதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அந்த பணியை செவ்வனே செய்து வரும் எம்.எஸ். அம்மாவின் பரம்பரைக்கு என்னுடைய வாழ்த்தையும், அவர்கள் மென்மேலும் உயர வேண்டும் என்ற பிரார்த்தனையையும் இறைவனிடம் வைத்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு முடித்து கொள்கிறேன். நன்றி.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசும் போது: –

“மிக சிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை தெரியாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட இந்த லெஜெண்டரி சுப்ரபாதத்தை மீண்டும் என்னுடைய நண்பரும், சகோதரருமான ராஜேஷ் ரீஅரேஞ்ச் செய்தது மிகவும் மகிழ்ச்சி.

அதில் ஐஸ்வர்யா – சௌந்தர்யா இருவரும் அழகாக பாடி உள்ளார்கள். இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னது போல் சுப்ரபாதத்தின் இந்த புதிய பரிமாணம் வருகிற தலைமுறைக்கும் செல்ல ஒருவழியாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.

இந்த அழகான நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ராஜா சார் ஆசியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அதேபோல் எங்கள் குரு மாண்டலின் சீனிவாசன் அவர்களின் ஆசியும் எங்களுடன் எப்போதும் இருக்கிறது”

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் கூறியதாவது: –

“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சந்தோஷம் என்பதை விட மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். எம்.எஸ்.அம்மா பாடிய பாடலில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதில் நானும் ஒரு பங்கு வகித்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த பாடலை வெளியிட்டது, அவரின் ஆசி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல் இசையமைப்பாளர், என் சகோதரர் தேவிஸ்ரீ பிரசாத் இங்குவந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவர் கூறியது போல மாண்டலின் சீனிவாசன் அண்ணனின் ஆசீர்வாதம் இங்கு நிறைந்துள்ளது. நன்றி வணக்கம்.

பாடகி ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா பேசும் போது…

இன்று மிகவும் விசேஷமான நாள். இன்று இசைஞானி இளையராஜா அவர்கள் நானும், என் தங்கையும் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் வெளியிட்டது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இந்த வெங்கடேச சுப்ரபாதத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் ராஜேஷ் அவர்கள்.

இந்த வெங்கடேச சுப்ரபாதம் நிறைய பேரை சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நன்றி”.

Isaignani Ilaiyarajaa launched the soul lifting Sri Venkatesa Suprabatham

JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Music composer D Imman announces divorce

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதன் சூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, டார்ஜிலிங், நேபாளம் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2022 பொங்கலுக்கு ’மகான்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டு தினத்தில் ‘மகான்’ பட டீசருடன் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vikram’s Mahaan release date announcement is here

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் வாங்கியுள்ளார்.

இவர் பிக்பாஸ் முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் கலைமகன் முபாரக்.

இன்று மாலை முதலே வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Valimai theatrical rights bagged by Mugen film producer

More Articles
Follows