BREAKING பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் இயக்குனர் பா ரஞ்சித். ஓரிரு படங்களை இயக்கிய இவருக்கு ரஜினியின் கபாலி காலா என தொடர்ந்து இரு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். விரைவில் கமல்ஹாசன் படத்தை இயக்க உள்ளார்.

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பலரும் தற்போது இயக்குனர்களாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரின் உதவியாளர்கள் ஒருவரான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிகப்பி மீது புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A case filed against Pa Ranjith’s assistant director Viduthalai Sikappi in 5 sections

அனுஷ்கா – தனுஷ் இணையும் புது படம். வேற லெவல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அனுஷ்கா நடிக்கும் புதிய படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் ஒரு பெப்பி பாடலை பாடுவதற்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இசையமைப்பாளர் ரதன், தனுஷை அணுகியதாகவும், பாடலின் முக்கியத்துவத்தை அறிந்து ஒப்புக்கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்’ பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush joins Anushka Shetty’s next?

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட சூட்டிங் அப்டேட்.; விடாமல் நடத்த இயக்குநர் முடிவு.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது 62வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி அன்று லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது.

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளது.

அஜித் தற்போது உலக பைக் பயணத்தை முடித்த பிறகு இதில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அஜித் கடைசியாக நேபாளத்தில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ajith’s ‘Vidaamuyarchi’ first schedule shooting to go on for 70 days

‘தி கேரளா ஸ்டோரி-க்கு தமிழகத்தில் இடமில்லை.; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது.

இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், திட்டமிட்டபடி கடந்த மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.

தமிழகத்தில் சென்னையில் 12 தியேட்டர்களிலும் கோவையில் 3 தியேட்டர்களிலும் இந்தப் படம் வெளியானது.

‘தி கேரளா ஸ்டோரி’ படம் தற்போது தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை நேற்று முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இச்செய்தியை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

‘The Kerala Story’ stops screening in Tamil Nadu

+2வில் நல்ல மதிப்பெண் பெற்றும் படிக்க முடியவில்லையா.? உங்களுக்கு உதவ விஷால் காத்திருக்கிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 8 தமிழக +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை முன்னிட்டு நடிகர் விஷால் தரப்பில் அவரது ரசிகர் மன்ற சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில்

பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம்.

வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்கவைத்து வருகிறார்.

அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.

நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்.

அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

V ஹரிகிருஷ்ணன் செயலாளர், மக்கள் நல இயக்கம், ஒருங்கிணைப்பாளர், தேவி அறக்கட்டளை.

Vishal is waiting to help you for +2 students

விஜய்யை இயக்க மறுத்த பாரதிராஜா & கௌதமேனன்.; அதுவும் நல்லதுதான்.. – எஸ்ஏசி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது…

“சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன்.

ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன். நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி.

ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.

விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார்.

அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.

ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார்.

இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி” என்றார்.

Bharathiraja and Gautam Menon refused to direct Vijay says SAC

More Articles
Follows