லிப்ரா குறும்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 53 படங்கள்

லிப்ரா குறும்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 53 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

53 Best movies selected for Libra Short films awardsநளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள்

1. Gangs of 47
2. Koorpi
3. Karmachakram
4. All ilatha Roobam
5. Mutham
6. The Ring
7. The Affair
8. Vanam
9. Thirantha Puthagam
10. Kadan
11. Naan 8
12. Savadaal
13. Nil
14. Thamizhachi
15. Theerathu
16. Yeman
17. Rays of hope
18. kannuku iniyal
19. Pitchai Pathiram
20. Madharassi
21. Jillunu oru kalavaram
22. L Board
23. Tiffen Box
24. Koorvazh
25. Ippadiku Vivasayee
26. Abaya
27. Kuva Kuva
28. Pen Paal
29. Thalai Vanankathe thamizha
30. Back Bone
31. kaliyugam
32. Salt
33. Pagal Natchathiram
34. Mayakkanadi
35. Iruthi Aram
36. Manidham Enge
37. Ninaivugal
38. In the Orb of Night
39. 93* not out
40. Solomon My Father
41. Kalavu
42. Giant Wheel
43. Loyalty
44. 18 Sticks
45. Vacha kuri Thappadhu
46. Kayal
47. Kavarimaan
48. Chilra Illa Papa
49. Adiye Azhage
50. Enga Vettu Pillai
51. Vidiyattum eni
52. Yatchi
53. Ippadiku Police

இந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்படஇயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

இந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில், “குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.

அதேசமயம் பணம், லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்.

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.

நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.

வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார்.

53 Best movies selected for Libra Short films awards

தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஒருவர் மட்டுமே நடிக்கும் கார்கில்

தமிழ்சினிமாவில் முதன்முறையாக ஒருவர் மட்டுமே நடிக்கும் கார்கில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time in Tamil Cinema Only One actor performing in Kargil movieதமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு. அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’.

ஜிஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்.

“கார்கில் என்றாலே கார்கில் போர் தான் நினைவுக்கு வரும்.. காதலும் அப்படி ஒரு போர் மாதிரித்தான் அதனால் தான் கார்கில் என டைட்டில் வைத்துள்ளோம்.

நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை – பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும் தான் மொத்தப்படமும்.

இதில் முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ளார் அவர்தான் நாயகன் ஜிஷ்ணு. புது முயற்சி என்பதற்காக போராடிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாகத்தான் இதை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் சிவானி செந்தில்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் இந்த படக்குழுவினரை வாழ்த்தி பேசும்போது சிறிய பட்ஜெட் படங்கள் இன்று தியேட்டர்களில் என்ன பாடுபடுகிறது என்பதை தனது பட அனுபவத்தில் இருந்து மனக்குமுறலாக கொட்டினார்.

“இயக்குனர் சிவானி செந்திலின் மனைவி தான் தயாரிப்பாளராக இறங்கியுள்ளதால் பயப்படுவதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் இருக்கும்வரை அந்த பயம் தேவையில்லாதது.. அவர்கள் நம் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

என்னுடைய ‘அய்யனார் வீதி’ படத்தை ரிலீஸ் செய்த சமயத்தில் தான் ‘பாகுபலி’ படம் வெளியானது.

இருந்தாலும் எனது தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யும் தைரியத்தை எனக்கு அளித்தார். படம் ரிலீசாகி இரண்டாவது வாரம் போஸ்டர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் தியேட்டர்காரர்கள், காட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தார்கள்.

சில பேர் இடம் இல்லை என கூறிவிட்டார்கள். இன்றைக்கு தமிழ்சினிமாவில் வாராவாரம் ஐந்து படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருக்கின்றன.

இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை.

ஆனால் இதுல எல்லாம் தாக்கு பிடிச்சு நிற்கிறவன் தான் ஜெயிக்க முடியும்.. எனக்கு கிடைச்ச அனுபவம் மூலமா இது மாதிரி புது படக்குழுவினருக்கு என்னோட ஆதரவை தர்றதுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.

இன்னைக்கு தியேட்டர்காரர்கள் தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க.. ரெண்டுநாள் ஓட்டிட்டு மூணாவது நாள் படத்தை தூக்கிடுறாங்க.. அவங்களை யாரு கேட்கிறது யாராலேயும் கேட்க முடியாது.. ஏன்னா அவங்க வலுவா இருக்கிறாங்க.” என கொட்டி தீர்த்துவிட்டார் ஜிப்ஸி ராஜ்குமார்.

இந்தப்படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் வேலைகளும் நிறைவுபெற்ற நிலையில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

தொழிநுட்ப கலைஞர்கள் விபரம்:

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் : சிவானி செந்தில்
ஒளிப்பதிவு : கணேஷ் பரமஹம்ஸா
இசை :விக்னேஷ் பாய்
பாடல்கள்: பாரி இளவழகன் மற்றும் தர்மா
எடிட்டிங் : அபிநாத்
மக்கள் தொடர்பு : செல்வரகு
தயாரிப்பு : சுபா செந்தில்.

First time in Tamil Cinema Only One actor performing in Kargil movie

kargil tamil movie press meet

லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

லோ பட்ஜெட்டில் ஹாலிவுட் லெவல் படமெடுக்க உதவும் ஸ்ரீ ஸ்டுடியோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja Inaugurates SRI STUDIOSதமிழ் திரையுலகின் மைய ஸ்தலங்களில் ஒன்றான சென்னை சாலிகிராமத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம்.

இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது என்றும் கூட சொல்லலாம்..

இந்த விழா இயக்குனர் இமயம் பாரதிராஜா முன்னிலயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் பாக்யராஜா, சேரன், தங்கர் பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், வேல்ராஜ், விஜய் மில்டன் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

மேலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் Red Epic W Helium கேமராவும் சில லென்ஸ் உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து ஹாலிவுட்டில் படம் எடுக்க பயன்படுத்தும் அதிநவீன கேமரா மற்றும் தொழில் நுட்ப கருவிகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக படம் எடுக்கலாம் என்பதற்கான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

2007 முதல் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் பயன்படுத்த லேட்டஸ்ட் டெக்னாலஜியில் ஸ்ரீ ஸ்டுடியோவின் பங்களிப்பு தவறாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

சிறிய பட்ஜெட் படங்களாக உருவான கோலிசோடா, மூடர்கூடம் படங்களாகட்டும் தற்போது தயாராகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O, காலா ஆகிய படங்களாகட்டும் ஸ்ரீ ஸ்டுடியோவின் லேட்டஸ்ட் டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனர் ஸ்ரீதர் சிங்கப்பூரில் பிலிம் டைரக்சன் படித்தவர்.

தற்போது ஹாலிவுட்டிலும் இவரது பணி தொடர்வதோடு அங்குள்ள திரைப்பட கல்லூரியில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி பாடம் எடுக்கும் கௌரவ விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

ஹாலிவுட் தரத்திலான தொழில்நுட்ப கருவிகளை தமிழ்சினிமாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் முதல் ஆளாக இருக்கிறது இவரது நிறுவனம்.

படம் தயாரித்தலின் மூன்று நிலைகளான ப்ரீ புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் என்கிற பணிகளிலும் ஸ்ரீ ஸ்டுடியோ உதவிகரமாக இருக்கிறது.

தற்போது ஒரு திரைப்படம் எடுக்க தயாராகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியும். டிஜிட்டலில் லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும் குறைந்த செலவில் படம் தயாரிக்க விரும்புவர்களுக்கும் ஸ்ரீ ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Director Bharathiraja Inaugurates SRI STUDIOS

sri studios

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் உரிமையை வாங்கினார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddyசந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது.

இயக்குநர் ராஜமெளலி, சமந்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

எனவே இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ரீமேக்கில் தனுஷே நடிக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் காதலில் தோல்வியுற்ற ஒருவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதை இன்றைய சூழலுக்கு ஏற்ப காட்டியிருக்கிறார்களாம்.

அதாவது நவீன தேவதாஸ் படம் என தெரிவிக்கிறார்கள்.

Dhanush bagged the tamil remake rights of Arjun Reddy

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட ஸ்டில் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara still out from Colamaavu Cokila movieநயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை சுருக்கமாக அழைக்க கோகோ என்று பெயரிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பதை நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும நிலையில் இப்படத்தில் உள்ள ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Nayanthara still out from Colamaavu Cokila movie

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Seeman and Ameer condolence to Student Anitha deathநீட் மருத்துவ தேர்வு முறையால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான், இயக்குனர் அமீர் நேரில் சென்றனர்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குனர் அமீர்.

அவர் பேசியதாவது…

“அனிதாவின் குடும்பத்தார் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்த்த போது வராதவர்கள், உயிர் போன பின்புதான் வருவீர்களா? எனக் கேட்கிறார்கள்.

டெல்லிக்கு எத்தனை முறை ஓடியிருப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஓட்டுக்காகவும், பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள் அவர்கள்.” என ஆவேசமாக பேசினார்.

Directors Seeman and Ameer condolence to Student Anitha death

More Articles
Follows