3 கெட்டப்பில் சிங்கிள் ஷாட் மூவி.; அசத்தும் ஆதேஷ் பாலா.; 50 சினிமா பிரபலங்கள் ஆதரவு

3 கெட்டப்பில் சிங்கிள் ஷாட் மூவி.; அசத்தும் ஆதேஷ் பாலா.; 50 சினிமா பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆதேஷ் பாலா
மற்றும் அவரின் குழுவினர்கள் சேர்ந்து உருவாக்கிய புதிய முயற்சி.

நடிகர் ஆதேஷ் பாலா அவர்கள் எப்போதும் எதை செய்தாலும் புதிதாக செய்ய வேண்டும் என்று ஆழமாக யோசித்து குழுவினரிடம் பேசி முடிவு எடுப்பார்.

அந்த வரிசையில் #அந்தஇரவில் – #AndhaIravil நிச்சயமாக புதிய மைல் கல்லாக தமிழ் சினிமாவிற்கு இந்த குறும்படம் பல விருதுகள் மற்றும் பல மேடைகள் கூட்டிக்கொண்டு போகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அந்த இரவில் குழுவில் உள்ளவர்கள் பற்றி ஒரு அறிமுகம் முதலில் இசையமைப்பாளர் ” ரமேஷ் வினாயகம் ” இவர் எல்லோருக்கும் பரிச்சயம் ஆனவர் தான் ” நலதமயந்தி , அழகிய தீயே ” போன்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர்.
எடிட்டிங் மற்றும் டிசைன் தம்பி அன்பு திறமையானவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் வலம் வருவார்.

தம்பி சுந்தர் பாலா வளர்ந்து வரும் பி ஆர் வோ மற்றும் நடிகர். சத்தம் ஒலி அமைப்பு சரவணன் ராமச்சந்திரன் வாழ்த்துக்கள் உங்கள் உழைப்பு அபாரமானது.

ஒளிப்பதிவாளர் சுபாஷ் அலெக்சாண்டர், முருகவேல் மாணிக்கம், ஆல்பர்ட், கண்ணன் இவர்களின் உழைப்பு வார்த்தைகளால் சொல்லி விட முடியாது சப்டைட்டில் அப்துர் ரஹ்மான் ராயன் அருமையான உழைப்பு
எங்கள் அனைவரையும் அன்போடு அரவணைத்து எங்களோடு நீங்கள் இறங்கி வேலை பார்த்த நடிகர் மிகச்சிறந்த மனிதர் மற்றும் இயக்குனர் கலைமூவிஷ் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதிக்க வரும் அண்ணன் ஆதேஷ் பாலா அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

அந்த இரவில் – முதல் பார்வை வெளியிட்ட அனைத்து திரைப்பட நட்சத்திரங்கள் உங்களுக்கு மனாதார நன்றி.

நண்பனாக, அண்ணனாக , தம்பியாக, உங்களில் ஒருவனாக எப்போதும் நன்றி பத்திரிகை செய்தி ஊடகம் நண்பர்கள் இல்லையென்றால் நான் இல்லை என்றும் அன்புடன் உங்கள் ஆதேஷ் பாலா

விரைவில் அடுத்த அறிவிப்பு அந்த இரவில் படத்தை பற்றி உங்களுக்கு வரும்…

இது சாதாரண குறும்படம் தானே என்று நினைத்து விடாதீர்கள் 10 நிமிடங்கள் சிங்கிள் சாட் மூன்று கேரக்டர்களில் ஒரே நடிகர் ஏற்று நடிப்பது மிகச் சவாலாக இருந்தது.

Director Subramanyam siva
Actor Chaams
Actor Sampathram
Actor Elayas
Actor Thangadurai
Director Hariganesh
Director hariuthra
Actor Doubt Senthil
Actress RekaNair
Actress Sabbitaroi
Actress Sindhuja
Actor George vijay
Actor sriram karthik
Music Director Sterlin nithya Martin
Music director ganesh chandrasekaran
Director Karuppaiha murugan
Actress saranya ravichandran
Tamil veethi CEO satheesh Muthu
Actor Ebenezer Devaraj
Actor Massravi
Actor Rajkamal
Lyricist Ganakaravel s
Director RDM
Payilvan Ranganathan Journalist
Karna producer
Actor chinrasu
Actor kingkong
Actor kadhal saravanan
Miss Tamilnadu 2021 Sana
Actress jessy
Actor Albert
Actor Singam jayavel
Actor Adhithya kathir
Director Cable shankar
Lyricist VJP
Producer Vajara Ram
Pattimandra Naduvar Subbiah
Actor Gajaraj
Cinematographer & Director JeevanJeevan
Isr selvakumar Director
Sriram padmanaban director
Actor Kavariman Raja
Director Gayathri senthilkumar
Actor Arul varma
Journalist Filmstreet rajesh
Actor kumaravadivel
Actor Roshan Rajeshkrishna
Director PR vijay
Writer Piraimathi kuppusamy
Director karthi k
Director vengat
Director Vijaymani
Director Muthuraj
Actor vinoth sagar
Director bagavathi bala
Director durai ramachandran
Journalist muthukumar
Erode Dr sanjay mimicry
Suresh rajagoplan
Actor Kadhal Sugumar

“அந்த இரவில்” குறும்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு பெருமைபடுத்திய அனைவருக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள்

#Andhairavil Team

50 cinema celebrities supports Aadesh Bala’s Andha Iravil short film

Lights On Media-வின் முதல் படைப்பாக ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

Lights On Media-வின் முதல் படைப்பாக ‘பருந்தாகுது ஊர்க்குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lights On Media வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகும் “பருந்தாகுது ஊர்க்குருவி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “பருந்தாகுது ஊர்க்குருவி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம்.

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூடலூர் மண்வயல் கிராமம் அருகே மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படக்குழு கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது.

இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும்.

இயக்குநர் ராம் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா.P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன், இசை – ரெஞ்சித் உண்ணி (ஜிமிக்கி கம்மல் புகழ்), சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Lights On Media’s first work ‘Parunthakudu Urkuruvi’

‘பாகுபலி 2’ பட சாதனையை வீழ்த்தியது ‘விக்ரம்’

‘பாகுபலி 2’ பட சாதனையை வீழ்த்தியது ‘விக்ரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம்’.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படம் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கமல் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாள் இந்தியளவில் மட்டும் ரூ.32 கோடியையும் உலகளவில் ரூ.49 கோடியை வசூலித்தது.

இப்படம் உலக அளவில் ரூ.350 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 16 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படம் 150 கோடியை விக்ரம் படம் வசூலித்துள்ளதாம்.

இதன் மூலம் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலை தமிழகளவில் ‘விக்ரம்’ முறியடித்துள்ளது.

‘Vikram’ breaks ‘Baahubali 2’ record

உண்மையிலேயே திறமைசாலிகள்.; ‘சுழல்’ படத்திற்கு தனுஷ் அனிருத் சமந்தா பாராட்டு

உண்மையிலேயே திறமைசாலிகள்.; ‘சுழல்’ படத்திற்கு தனுஷ் அனிருத் சமந்தா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் நீண்ட வடிவிலான அசல் தமிழ் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது.

இந்த வலைதளத் தொடர் உலகளாவிய அளவில் பார்வையாளர்களின் இதயங்களையும், அவர்களது ஆன்மாக்களையும் வென்றிருக்கிறது.

படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி இந்த தொடர் மூலம் தங்களின் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இந்த தொடரை பார்த்து ரசித்தவர்கள், இணையவாசிகள், திரைப்படத்துறையினர் என அனைவரும் கை வலிக்க கைகுலுக்கி படக்குழுவினரையும், இந்த தொடரையும் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட்டை சேர்ந்த இயக்குநர்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகை பூமிகா பட்நாகர், நடிகர் விக்ராந்த் மாஸே, எழுத்தாளர் சேத்தன் பகத், தயாரிப்பாளர் குனீத். மோங்கா, நடிகர் தனுஷ், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,…

” சுழல் = தி வோர்டெக்ஸ் அற்புதமான கிரைம் திரில்லர் தொடர். முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் தொடர். இதில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் உள்ளிட்ட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் தொடரை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி உண்மையிலேயே குறிப்பிடத்தக்க திறமைசாலிகள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பிரபலமான இந்தி திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்,….

” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்தத் தொடரை முழுமையாக காண்பதற்கான விருப்பமும் இருக்கிறது. நுட்பமாக எழுதப்பட்ட திரைக்கதை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த தொடர் முழுநீள கவர்ச்சியான துடிப்பான திரில்லர் என குறிப்பிடலாம்.” என பதிவிட்டிருக்கிறார்.

முன்னணி பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்,….

‘ நம்பிக்கை தரும் படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி அவர்கள் மீண்டும் ஒரு நம்பக்கூடிய வகையிலான படைப்பை வழங்கி, தங்களின் திறமையை இரண்டு புதிய இயக்குநர்களுடன் இணைந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் தனித்துவமான எழுத்து, காட்சி கோணங்கள்.. என புத்திசாலித்தனமான அசல் தொடராகவும், ஒப்பற்ற தலை சிறந்த படைப்பாக வெளியாகியிருக்கிறது. குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகை வித்யாபாலன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்….

” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடருக்காகவும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்படுவார். ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் பெயருக்கேற்றபடி உண்மையாக இந்த கிரைம் திரில்லர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னை ஆழமாக இழுத்துச் செல்கிறது. ரெஜினாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி அவர்களை இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் காண இருக்கிறீர்கள். இதற்காகவே இந்தத் தொடரை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என‌ பதிவிட்டிருக்கிறார்.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்….

, ” நான் எப்போதும் புஷ்கர் & காயத்திரி அவர்களின் படைப்புகளுக்கு ரசிகை. இந்த வார இறுதியில் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இதன் முன்னோட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முழு தொடரும் பரபரப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரின் குழுவினருக்கு வாழ்த்துக்களுடன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்….,

” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரில் என்னுடைய சகோதரர் சாம் சி. எஸ். அவர்களின் டைட்டில் பாடல் வியக்க வைத்தது. பின்னணி இசையும் பரபரப்பாக கதையோட்டத்துடன் இணைந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

From Dhanush to Vidya Balan and Samantha Prabhu, these celebrities are all praise for Amazon Prime Video’s Suzhal- The Vortex

கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

கமல் லைகா ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன் 2’.; மீண்டும் உறுதிப்படுத்திய உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியாகி இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் இந்தியன்.

ஏ எம் ரத்னம் தயாரித்த இந்தப் படத்தை ஷங்கர் இயக்க கமலஹாசன் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

அதிலும் அவர் ஏற்ற இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஊடுருவியிருக்கும் லஞ்சத்தை வேரறுக்கும் தாத்தாவாக கெத்து காட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தை ஆரம்பிக்க உள்ளதாக கமல்ஹாசன் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.

அனிருத் இசையமைக்க இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோன பிரச்சனை, இந்தியன் பட சூட்டிங்கில் விபத்து, கமலின் அரசியல் பிரவேசம், கமலுக்கு ஆபரேஷன் என பல்வேறு பிரச்சினைகளால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதனால் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில வதந்திகள் கிளம்பின. ஆனால் படக்குழு மறுத்தது.

மேலும் வேறு வழியின்றி தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார் ஷங்கர்.

ராம்சரண் ஐ வைத்து புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

இதனால் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கு மோதல் உருவாகி பிரச்சனை கோர்ட் வரை சென்றது.

‘இந்தியன் 2’ பட தாமத்திற்கு அடுக்கடுக்கான காரணங்களை கோர்ட்டில் தெரிவித்த ஷங்கர்

ஆனால் ராம் சரண் படத்தை முடித்துவிட்டுதான் இந்தியன் 2 படத்தை இயக்குவதில் உறுதியாக இருந்தார் ஷங்கர்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை பற்றி அப்டேட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறார் கமல்.

ரசிகர்களை போலவே நானும், ஷங்கரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார் கமல்.

ஆக, இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தி விட்டார் உலகநயகன் கமல்.

Kamal Hassan confirms that Indian 2 ‘will happen’

நமக்கு ஏன் இந்த வேலை.. உதயநிதியை கண்டித்த ஸ்டாலின்.; போட்டுக் கொடுத்த கமல்

நமக்கு ஏன் இந்த வேலை.. உதயநிதியை கண்டித்த ஸ்டாலின்.; போட்டுக் கொடுத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி உலக அளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கமலஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருவது தங்களுக்கு அறிந்த ஒன்றுதான்

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை சந்தித்து கமல் நன்றி கூறினார்.

அதற்கான விழா சென்னையில் நேற்று மாலை பலமான விருந்துடன் நடைபெற்றது.

அதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் வினியோகஸ்தர் உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்…

“கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல், தான் வெளியிட்ட படம் விக்ரம் தான்.

அதற்கு ராஜ்கமல் நிறுவனத்தில் உள்ள மகேந்திரன் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஆகியோர்தான் காரணம்.

டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முடிவு செய்தபோது, பலர் எதற்கு இந்த முடிவு என கேட்டனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே நான் பட புரமோஷன் வேலைகளை தொடங்கிட்டேன். அது தற்போது விக்ரமாக அமைந்து இருக்கிறது.

என் திறமைக்கு அதிகமாக  தமிழக மக்கள் தன்னை தூக்கிப் பிடித்துள்ளனர்.

என்னை விட அதிக திறமை கொண்ட கலைஞர்கள் காணாமல் போனதை என் கண்முன் கண்டிருக்கிறேன்.

உதயநிதியை பற்றி பேசும் பொழுது..

இவரின் தந்தை நமக்கு எதற்கு இந்த வேலை? நம் வேலையை பார்ப்போம் என கூறியதாக கேள்விபட்டேன். ஆனால் உதயநிதி இந்த தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற நேர்மையாளர்கள் இருக்கும் பொழுது, பலர் பிழைப்பார்கள்.

இறுதியாக திரையரங்க உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் மற்றும் மக்களுக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  உதயநிதி ஸ்டாலின் பேசிய போது…

“டான் பட விழாவில் சில உண்மைகளை பேசியது போல் இங்கும் சில உண்மைகளை சொல்ல வேண்டும். விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது.இப்போதே 75 கோடி ஷேர் கொடுத்துள்ளது.

விக்ரம் படத்தை முதலில் பார்த்தவன் நான். இன்டர்வல் முடுஞ்சதும். இந்த மாதிரி ஒரு இண்டர்வல் எந்த தமிழ் படத்திலும் இருந்ததில்லை என கூறினேன்.

இந்தப் படம் ஹிட் ஆகும் என நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நினைக்கவில்லை” என்றார்.

Why this work for us .. Stalin who condemned Udayanidhi;

More Articles
Follows