‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிய 4 ஜோடி லவ்வர்ஸ்..; விஜய்சேதுபதி ஆதரவு

‘லவ் டுடே’ பாணியில் செல்போனை மாற்றிய 4 ஜோடி லவ்வர்ஸ்..; விஜய்சேதுபதி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’

நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பொய்யின்றி அமையாது உலகு’. இதில் நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், அர்ஜுனன், பிரவீண் நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைத்திருக்கிறார்.

காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்…

‘நான்கு ஜோடிகள் கெட் டூ கெதர் சந்திப்பு ஒன்றில் சந்திக்கிறார்கள். இவர்கள் தங்களது செல்போனை வைத்துக்கொண்டு ஜாலியான விதிகளுடன் விளையாட தொடங்குகிறார்கள்.

அதாவது இந்த எட்டு பேரின் செல்போன்களுக்கு வரும் குறுஞ்செய்தியையும், அழைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும்படி வைத்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையுடன் நடைபெறும் அந்த விளையாட்டு, நகைச்சுவையாக தொடங்கி பல எதிர்பாராத சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கிறது.

இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தைத் தொடர்ந்து செல்போனை மையப்படுத்திய திரைக்கதை என்பதால், இதற்கு இளம் தலைமுறையினரிடத்தில் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

நகைச்சுவையுடன் கலந்த ஃபீல் குட் படைப்பாக ‘பொய்யின்றி அமையாது உலகு’ தயாராகி இருக்கிறது” என்றார்.

First Look Poster of
#PoiIndriAmaiyathuuIagu released!

Sakshi Agarwal’s
‘#PoiIndriAmaiyathuuIagu’ First Look Poster is out!

வெற்றிமாறனின் அடுத்த இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட்!

வெற்றிமாறனின் அடுத்த இரண்டு படங்களின் சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரி சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழுவினர் துப்பாக்கிகளை பிடித்துக்கொண்டு படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். வெற்றி மாறன் அவர்கள் மத்தியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். படத்திற்கு இசை இளையராஜா. பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் போன்ற நட்சத்திர நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மறுபுறம், வெற்றி மாறன், சூர்யாவை வைத்து வாடி வாசல் படத்தின் வேலைகளைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது. படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைச் சுற்றி வருகிறது மற்றும் ஜெய் பீம் நடிகருடன் வெற்றி மாறனின் முதல் முயற்சியைக் குறிக்கிறது.

JUST IN சிம்பு – கௌதம் இணைந்த ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியீடு

JUST IN சிம்பு – கௌதம் இணைந்த ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘பத்து தல’..

ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

கன்னியாகுமரி பகுதியில் நடந்து வந்த ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படம் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று தள்ளிப்போனது.

நேற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்து போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

அதன்படி தற்போது 2023 மார்ச் 30ஆம் தேதி தியேட்டர்களில் ‘பத்து தல’ வெளியாகும் என் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

JUST IN Simbu – Gautham starrer ‘Pathu Thala’ release date poster released

விஜய்யின் ‘வாரிசு’ சர்ச்சை..; சன் டிவி கலாநிதிமாறனுக்கு ரஜினி ரசிகர்கள் கோரிக்கை

விஜய்யின் ‘வாரிசு’ சர்ச்சை..; சன் டிவி கலாநிதிமாறனுக்கு ரஜினி ரசிகர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்தப் படத்தின் இசை விழாவை 2023 புத்தாண்டு விருந்தாக ஜனவரி 1ல் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் சன் டிவிக்கும் கலாநிதி மாறனுக்கும் ஒரு வேண்டுகோள் விடுவித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது..

“சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேட்ட படத்தின் இசை விழாவிலும் ரஜினிகாந்த் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.. நம்பர் ஒன். அவரிடத்தில் யாரும் கிடையாது” என்று பேசி இருந்தார் கலாநிதி மாறன்.

தற்போது ‘வாரிசு’ படத்தின் இசை விழாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியிருந்தார்.

கலாநிதி மாறன் சொன்னது உண்மை என்றால் சரத்குமார் பேசியதை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்.. அதனை சன் டிவி ஒளிபரப்ப கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

rajini fans request to sun tv kalanithi maran

சிம்புவின் ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி எப்போது.? ஸ்டூடியோ கிரீன் அப்டேட்

சிம்புவின் ‘பத்து தல’ பட ரிலீஸ் தேதி எப்போது.? ஸ்டூடியோ கிரீன் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘பத்து தல’..

ப்ரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய ஒபேலி கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

கன்னியாகுமரி பகுதியில் நடந்து வந்த ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படம் வெளியாக இருந்த நிலையில் திடீரென்று தள்ளிப்போனது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை டிசம்பர் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

When is the release date of Simbu’s ‘Pathu Thala’? Studio Green Update

OFFICIAL புத்தாண்டை நெருங்கும் நேரத்தில் ‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு

OFFICIAL புத்தாண்டை நெருங்கும் நேரத்தில் ‘துணிவு’ பட டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இந்த படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர்களை ஒவ்வொன்றாக அறிவித்து வந்தனர்.

அதன்படி நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற கேரக்டரில் நடிக்க கண்மணியாக மஞ்சுவாரியர் நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

இறுதியாக படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை மற்றும் குறிப்பிட்ட நேரத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி ட்ரெய்லர் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

2023 புத்தாண்டு பிறக்க நெருங்க 5 மணி நேரங்களே உள்ள நிலையில் ட்ரெய்லர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Thunivu trailer release time announced

More Articles
Follows