ஜூன் 1 முதல் பேருந்து ஓட அனுமதி; தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்கள் எவை..?

bus transportதமிழகத்தில் இன்று ஜீன் 1 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது பேருந்து போக்குவரத்தை நாளை முதல் செயல்படுத்தும் பொருட்டு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

மண்டலம் 1:

* கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்

மண்டலம் 2:

* தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி

மண்டலம் 3:

* விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி

மண்டலம் 4:

* நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

மண்டலம் 5:

* திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

மண்டலம் 6:

* தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி

மண்டலம் 7:

* காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு

மண்டலம் 8:

* சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இவற்றில் மண்டலம் 7 மற்றும் 8 ஆகியவற்றை தவிர்த்து மற்ற மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மண்டலம் 7, 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கலாம். பேருந்துகளின் மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. (ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் செய்ய இ பாஸ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது)

மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து சேவைக்கான தடை தொடர்கிறது. பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்க நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு தனியாக வெளியிட உள்ளது. இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்….

தமிழகத்திற்குள் ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு இ-பாஸ் பெற http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் . ரயில் டிக்கெட் எடுத்த பிறகு இணையதளத்தில் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்யும் போது பிஎன்ஆர் நம்பர் கேட்கப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post