சிம்புவின் AAA பட டீசர் வெளியீட்டில் ஒரு புதுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘அன்பாவனவன் அசராதவன் அடங்காதவன்’.

மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இதில் சிம்பு 3 கெட்டப்களில் நடிக்கிறார் சிம்பு. இதில் உள்ள மதுரை மைக்கேல் கேரக்டரின் புகைப்படம் பர்ஸ்ட் லுக்கில் வெளியானது.

இதனையடுத்து விரைவில் இந்த கெட்டப்பில் உள்ள டீசரை வெளியிடவிருக்கிறார்களாம்.

அதன்பின்னர் மீதமுள்ள இரண்டு கேரக்டர்களும் ஒவ்வொரு டீசராக வெளியிட இருக்கிறார்களாம்.

விஜய்-விக்ரம் பட தயாரிப்பாளருடன் இணைந்த ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த புலி மற்றும் விக்ரம் நடித்த இருமுகன் ஆகிய படங்களை தயாரித்தவர் ஷிபுதமீன்ஸ்.

இவர் தயாரித்துள்ள இருமுகன் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் கேரள உரிமையை பெற்று இருக்கிறாராம்.

ரஜினி, விஜய், உள்ளிட்ட நடிகர்களின் படங்களை போலவே சிவகார்த்திகேயனுக்கும் தற்போது கேரளாவில் மார்கெட் உருவாகி வருகிறது.

எனவே அதிக திரையரங்குகளில் ரெமோ படத்தை ஷிபுதமீன்ஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுத்தம் செய்யும் சூர்யா… பொதுமக்கள் திருந்துவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குப்பை போட்டு வீதியை அசுத்தம் செய்பவனை கௌரவமாகவும் குப்பை பொறுக்கி வீதிகளை சுத்தம் செய்பவனை கேவலமாகவும் பார்க்கிறோம்.

எனவேதான் சாலைகள் நாளுக்குள் நாள் குப்பைக் கூடாரமாக மாறிவருகிறது.

இந்நிலையில் மற்ற நாயகர்களை போல் திரைப்படங்களில் சுத்தம் செய்வதை பற்றி கூறிக்கொண்டிருக்காமல், தானாகவே முன்வந்துள்ளார் ரியல் ஹீரோ சூர்யா.

சென்னையில் உள்ள பள்ளிக்கரணி என்ற இடத்தில் உள்ள குப்பை கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் சூர்யா.

இவரின் இந்த செயல் வெகுவாக மக்களை கவர்ந்துள்ளது.

இனியாவது இவரை பார்க்கும் ரசிகர்களும் பொதுமக்களும் திருந்தினால் நாடு சுத்தமாகும்.

முதன்முறையாக ஆங்கில பாடலில் ‘ரெமோ’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன்-கீர்த்தி இணைந்து நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக் அண்மையில் வெளியானது. தற்போது சிரிக்காதே என்ற பாடல் ஆகஸ்ட் 18ல் வெளியாகவுள்ளது.

நிவின் பாலி நடிக்கவுள்ள 24ஏஎம் ஸ்டூடியோவின் புதிய படத்தை பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார். அவர்தான் இந்த “சிரிக்காதே…” மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை இன்னொ கெங்கா பாடியிருக்கிறார். அப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாம்.

கௌதமி-ஸ்ருதிஹாசன் இடையே பிரச்சினை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக கமல்ஹாஸன், தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இவரே இயக்கி, லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் ஆடை வடிமைப்பாளராக கௌதமி பணிபுரிந்து வருகிறார்.

ஆனால் கவுதமி வடிவமைக்கும் ஆடைகள் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை எனவும், இருவருக்கும் இடையே பிரச்சினை என தகவல்கள் வந்தன.

இந்நிலையில், ஸ்ருதி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

அவர்கள் இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை. கௌதமியை தங்கள் குடும்பத்திற்கு விரும்பியே ஸ்ருதி ஏற்று இருக்கிறார்.

மேலும் கௌதமி வடிவமைக்கும் ஆடைகளை மிகவும் நன்றாக உள்ளது. அவற்றை விரும்பி அணிந்து வருகிறார் ஸ்ருதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் அடிக்க இணையும் சிவகார்த்திகேயன்-பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய இருபடங்களை பொன்ராம் இயக்க, சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

மேலும் இக்கூட்டணியில் சூரி மற்றும் இமான் இணைந்திருந்தனர்.

இந்த இரு படங்களும் இவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் மீண்டும் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, தன் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை சற்றுமுன் ட்விட்டரில்  உறுதி செய்தார் இயக்குனர்.

மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

More Articles
Follows