பாகுபலி2 சாதனையை 2.0 முறியடிக்கும்…. திருப்பூர் சுப்ரமணியம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடியில் தயாரித்து வருகிறது.

இப்படத்தை 2டியில் எடுத்து பின்பு 3டியாக மாற்றாமல், நேரிடையாக 3டி படமாகவே இயக்கியுள்ளார் ஷங்கர்.

எனவே தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து 3டி டிஜிட்டல் மீட்டிங்கை இன்று லைக்கா நிறுவத்தினர் சென்னையில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கலந்துக் கொண்ட கோவை மாவட்ட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் பேசியதாவது….

புதிய தொழில்நுட்ப வந்தால், சினிமா இன்னும் வளர்ச்சி பெறும். இந்திய சினிமாவையே பாகுபலி 2 வசூலில் மிரட்டியது.

ஒரு தமிழனாக 2.0 படம் பாகுபலி2 வசூலை மிஞ்சும்” என பேசினார்.

2pointO will beat Baahubali2 collection says Tiruppur Subramaniam

மோகன்லாலுக்கும் அவரது மகன் படத்திற்கும் ஒரே நாளில் பூஜை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலும் ஆதி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்நிலையில் மோகன்லால் நடிக்கும் ஒடியன் மற்றும் அவரது மகன் நடிக்கும் ஆதி ஆகிய 2 படங்களின் பூஜையும் ஒரே நாளில் இன்று பூஜை போடப்பட்டது.
கேரளாவில் வாழ்ந்த ஒடியன் எனும் மலைவாழ் இனத்தின் கடைசி மனிதராக ஒடியன் மாணிக்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறாராம்.

இப்படத்தை புதுமுகம் ஸ்ரீகுமார் மேனன் இயக்க, முக்கிய வேடத்தில் மஞ்சு வாரியர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் எவரும் எதிர்பாராத வகையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் எடுக்கப்பட உள்ளதாம்.

ஆதி என்ற படத்தை த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீலை மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் தொடர்பான போஸ்டர், டீசர் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த ஜீலை மாதத்திலேயே இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருகிறார்களாம்.

மேலும் சூர்யா பிறந்தநாளில் ஓர் இன்ப அதிர்ச்சி உள்ளது என்கிறது படக்குழு.

அது இப்படத்தின் டீசராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

நயன்தாரா இல்லன்னா த்ரிஷா… இது விஜய்சேதுபதி பார்முலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிமான்டி காலனி படத்தை அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லரான ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

இதில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, தேவன் ஆகியோர் நடிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது.

அப்படத்திற்காக கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டுவிட்டதாம்.

மேலும் த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்துவருவதால், அதற்கான கெட்டப்பை மாற்றி விட்டாராம்.

எனவே நயன்தாரா படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi quits from Nayantharas Imaikkaa Nodigal movie

அண்டாவ காணோம்; ஆன்லைனில் தேடிய ஒரு லட்சம் பேர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்டாவ காணோம்… என்னய்யா இது… இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்… “சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.

ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு. அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே இது யார் வீட்டு அண்டா என்று சொல்லிவிடுவார்கள்.

ஒரு குடும்பத்தின் பெருமைகளில் ஒன்று அண்டா. அந்த வீட்ல அண்டா இருக்குன்னா ஒரு கெத்தா இருக்கும். இப்படிப்பட்ட அண்டா ஒரு நாள் காணாமல் போகிறது.

அதைத் தொடர்ந்த நிகழ்வுகள்தான் கதை. அதனால்தான் படத்துக்கு அண்டாவ காணோம்னு வச்சேன்,” என்கிறார் டைரக்டர் வேல்மதி.

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தின் ட்ரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது.

பெரிய நட்சத்திர பலமில்லாமல் கதையை மட்டுமே நம்பி உருவான இந்தப் படத்தை இதுவரை ஆன்லைன் ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டரில் இந்த ட்ரைலர் பரபரப்பாக வலம் வருகிறது.

https://www.youtube.com/watch?v=DIh2h41UPlM

அண்டாவ காணோம் படத்துக்கு இசை அஸ்வமித்ரா. ஸ்ரேயா ரெட்டி நாயகியாக நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது.

அவருடன் புதுமுகங்கள் இளையராஜா, சார்வி லஸ்யன், வினோத் முன்னா, அருண் பிரஜித், ஷரவண சக்தி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காணாமல் போன அண்டாவை பாக்கனுமா? கொஞ்ச நாள் வெயிட் பன்னுங்க

Andaava Konom Trailer crossed 1 lakh views in You Tube

பர்ஸ்ட் சொல்லுவோம்; அப்புறம் அரசை பாத்துப்போம்… ரஜினிக்கு ஆதரவாக கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசின் வரி விதிப்பால் தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே தமிழக அரசு கேளிக்கை வரியை நீக்கி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் காக்க வேண்டும் என ரஜினி இன்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அவர் கூறியுள்ளது தமிழக அரசை மிரட்டும் தோனியில் அமைந்துள்ளதை காணலாம்.

அந்த பதிவு இதோ….

“நன்றி ரஜினி அவர்களே உங்கள் குரலைப் பதிவு செய்ததற்கு. முதலில் ஒரு ஜென்டில்மேனாக, வேண்டுகோள் விடுப்போம். பிறகு தமிழக அரசைப் பார்த்துக் கொள்வோம்” என ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கமல்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 10m10 minutes ago
Thanks Rajni avaragaLay for voicing your concern. Lets request first as gentlemen should. Then we shall see. @superstarrajini & TN .Govt.

Kamal supports Rajini to stand against TN Govt Tax issue on Cinema

More Articles
Follows