நட்சத்திர கலை விழாவில் 2.0 பட டீசரை வெளியிடும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழாவை நடத்த இருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

மலேசியாவில் உள்ள பிரபலமான புகித் ஜலீல் அரங்கத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த அரங்கில், சுமார் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நட்சத்திரக் கலைவிழாவுடன், நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 பட டீசரை அங்கு வெளியிட உள்ளனர்.

இத்தகவலை நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

2point0 teaser will be launched in Malaysia at Natchathira Vizha 2018

கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற பின்பு ரஜினிகாந்த் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முதன்முறையாக கருணாநிதியை இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார் என்பதை பார்த்தோம்.

அதன்படி இன்று இரவு 8 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

ரஜினி வருகையை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபாலபுரத்தில் குவிந்திருந்தனர்.

ரஜினி வாழ்க என்று கோஷமிட்டனர். உள்ளே சென்ற ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சுமார் 20 நிமிடம் அங்கு இருந்தார்.

இச்சந்திப்புக்கு பின் நடிகர் ரஜினிகாந்த பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது…

தலைவர் கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன்.

அவரின் உடல்நலம் குறித்து கேட்டேன்.

என் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் தெரிவித்து அவரின் ஆசி பெற்றேன்.” என்றார்.

Superstar Rajinikanth met DMK Leader Karunanidhi and got his blesssings

பாஜக.வின் தாமரை சின்னத்தை அதிரடியாக நீக்கிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்கள் சந்திப்பின்போது தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார் ரஜினிகாந்த்

அப்போது போட்டோ எடுக்கும் போது அதன் பின்னணியில் பாபா முத்திரை தாமரையுடன் இருந்தது.

ஆனால் கட்சி அறிவித்து அதன்பின்னர் ரஜினி மன்றம் அறிவிப்பை வெளியிட்டார். அந்த இணையதளத்தில் பாபா முத்திரை மட்டுமே தற்போது இடம் பெற்றிருக்கிறது.

அதில் உள்ள தாமரை பூ இப்போது இல்லை.

தாமரை சின்னம் பாஜக.வின் கட்சி சின்னம். மேலும் பா.ஜக.வின் பினாமியாக ரஜினி செயல்பட்டு வருகிறார் என சில கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த சர்ச்சைகளை தவிர்க்கவே தாமரையை அகற்றிவிட்டு பாபா முத்திரையை மட்டுமே இடம் பெற செய்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.

கிரிக்கெட் ஆடி இசையை வெளியிடும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள்.

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , ‘7 C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாண்டுள்ளனர்.

வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான ‘Ramnad Rhinos’ அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த ‘Ramnad Rhinos’ அணியின் கேப்டன் விஜய் சேதுபதி ஆவார்.

இந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவில்தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா,மாபெரும் நட்சத்திர பட்டாளம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்த படத்தில் காயத்ரி மற்றும் நிஹாரிகா கோனிடேலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை இந்த மாதம் ஜனவரியில் வெளியிடவுள்ளனர்.

Oru Nalla Naal Paathu Solren audio release updates

மெட்ரோ புகழ் ஆனந்த கிருஷ்ணன்-அசோக்செல்வன் கூட்டணியில் ஆக்ஸிஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கூட்டத்தில் ஒருத்தன்’ படத்திற்கு பிறகு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ப்ரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’. உருவாகியுள்ளது.

இது தவிர கைவசம் நிர்மனின் ‘நெஞ்சமெல்லாம் காதல்’, ஆனந்த கிருஷ்ணன் படம் மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘மெட்ரோ’ புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் – ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘ஆக்ஸிஜன்’ (OXYGEN) என தலைப்பு வைத்திருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஜோகன் இசையமைத்து வரும் இதற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இதன் டீசர் வெளியாக இருக்கிறது.

ஐங்கரன் ஸ்பாட்டில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய சைந்தவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி. பிரகாஷின் மனைவி பாடகி சைந்தவி தன் பிறந்தநாளை அவரது கணவர் நடிக்கும் ஐங்கரன் சூட்டிங்கில் கொண்டாடினார். அதுபற்றிய விவரம் வருமாறு…

ஜி.வி.பிரகாஷ்குமார் மனைவி மற்றும் ( Carnatic music ) சிங்கருமான “சைந்தவி” இவர் அந்நியன் படத்தில் ரண்டக்க, தொட்டிஜெயா படத்தில் Achu vella karumbae, அழகிய தமிழ் மகன் படத்தில் Kelamal Kaiyile, வரலாறு படத்தில் Innisai Alabedaiye, பையா படத்தில் Adada Mazhaida, சுறா படத்தில் Thanjavoor Jillakkari, மதராசபட்டினம் படத்தில் Aaruyire Aaruyire, மாப்பிளை படத்தில் Ready Readya மற்றும் Onnu Rendu, தெய்வத்திருமகள் படத்தில் Vizhigalil Oru Vaanavili, மயக்கம் என்ன படத்தில் Pirai Thedum, சுந்தரபாண்டியன் படத்தில் Nenjukkulle, தலைவா படத்தில் Yaar Indha Saalai Oram, ராஜா ராணி படத்தில் Nee Yaaro Yaaro, தெகிடி படத்தில் Vinmeen Vithayil, த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் Yennachu Yedhachu, சேதுபதி படத்தில் Hawa Hawa, தேறி படத்தில் En Jeevan, இது போன்ற பல வெற்றி பாடல்களை பாடியவர் “சைந்தவி”.

இன்று ( 03.January.2018 ) அவர் பிறந்த நாளை தன் கணவர் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஐங்கரன் படப்பிடிப்பு தளத்தில் மிக ப்ரமாண்டமாக கொண்டாடினார்.

அருகில் இயக்குனர் ரவிஅரசு மற்றும் அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் உள்ளார்.

Singer Saindhavi celebrated her birthday with GVPrakash on shooting spot

More Articles
Follows