ரஜினியின் 2.0 படத்தின் கேரள உரிமை பாகுபலியை தாண்டியது

2point0 movie Kerala rights bagged by August Cinemas at huge priceஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

இதன் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 15 மொழிகளில் என ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மலையாள பதிப்பின் விநியோக உரிமையை கடும் போட்டிக்கு இடையே ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் விடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் வெளியீட்டு தேதி 2018 ஏப்ரல் 27 வெளியீடு’ என தெரிவித்துள்ளனர்.

இதன் கேரள உரிமை மட்டும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

வசூலில் இந்தியளவில் சாதனை படைத்த பாகுபலி படத்தின் கேரள உரிமை ரூ.10.5 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகிய மூவரும் இந்த ஆகஸ்ட் சினிமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அவர்கள் கேரளா முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

2point0 movie Kerala rights bagged by August Cinemas at huge price

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவாகி இந்தியாவின்…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள…
...Read More
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம்…
...Read More

Latest Post