ரஜினி விஜய் அஜித் உள்ளிட்ட 22 டூப்ளிகேட் நடிகர்களின் ‘டம்மி ஜோக்கர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கதையின் நாயகனாக நடித்து “டம்மி ஜோக்கர்” என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார்.

மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.

வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த “பராசக்தி” படத்தை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சு,
வெள்ளி விழா கொண்டாடிய “அன்னக்கிளி” படத்தை இயக்கிய தேவராஜ் – மோகன் நூறு நாட்கள் ஓடிய ” பன்னீர் புஷ்பங்கள் ” படத்தை இயக்கிய பாரதி – வாசு, “உல்லாசம் “படத்தை இயக்கிய கேடி – ஜெர்ரி , ” விக்ரம் வேதா ” படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி வரிசையில் இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன் _ என். கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.

படத்தை பற்றி இயக்குனர்கள் இருவரும் பேசியதாவது…

” 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள்.

மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப்பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.

அவனுக்கு அப்பா… நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக் கொள்கிறது.

எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.

அவன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம்.

அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்” என்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாக்யராஜ், கலைப்புலி தானு, அபிராமி ராமநாதன் மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

22 duplicate actors starring in Dummy Joker

டிசம்பர் 20ல் தம்பி & ஹீரோ படங்களுடன் மோதும் ‘கைலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தானா நாயுடு என்பவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கைலா.

பிரபல நாயகி கௌசல்யா மற்றும் அன்பாலயா பிரபாகரன் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பேய் மற்றும் பழிவாங்கல் கதை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாஸ்கர் சீனிவாசன் இயக்கி தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் லைகா என்ற கேரக்டரில் ஒரு சிறுமி நடித்துள்ளார்.

இந்த படத்தில் பல வருடங்கள் பூட்டப்பட்ட பங்களாவில், தங்கி ஆராய்ச்சி செய்பவராக நடித்துள்ளார் தானா.

அதாவது அங்கு நடக்கும் சில ஆமானுஷ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதையாம்.

இந்த படத்தில் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா,, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விஞ்ஞான பூர்வமான உருவாகப்பட்டுள்ள இந்த படம் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவிருந்தது.

சில தள்ளிப்போன இந்த படம் இந்த வாரம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இதேநாளில் தான் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்த தம்பி, மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த தபங் 3 என்ற ஹிந்தி பட தமிழ் பதிப்பும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கைலா படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது

தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்.

அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்கினோம்.

ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம் என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன். இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.

Kayla movie clash with Hero and Thambi movies

ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்*

‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.

இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.
புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’.

அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார்.

அவரது முதல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த கிரீக் பார்ட்டி, ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ், கதையொந்து ஷுருவாகிதே, ஜீர்ஜிம்பே ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப்படங்கள்.

குறிப்பாக கிரீக் பார்ட்டி கன்னட திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) எனும் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது.

ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருவாக்கி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்துவதில் சாதனைப் படைத்து வருகிறது.

இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார்.

இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்.

ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா சிறப்பாக நடித்துள்ளனர்.

கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும், பிரம்ம்மண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.

‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம் ஆர் ராஜாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார்.

இயக்குனர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றி இருக்கிறார்.

புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் மற்றும் சான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் உலகெங்கும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Fantasy Adventure Comedy movie Avane Srimannarayana

நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள்:

ரக்ஷித் ஷெட்டி
ஷான்வி ஸ்ரீவஸ்தவா
பாலாஜி மனோகர்
பிரமோத் ஷெட்டி
மதுசூதன் ராவ்
அச்யுத் குமார்
கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே
மற்றும் பலர்
தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா
கதை: தி செவன் ஆட்ஸ் (The Seven Odds)
ஒளிப்பதிவு: கரம் சாவ்லா
இசை: அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ்
கலை: உல்லாஸ் ஹைதூர்
நடனம்: இம்ரான் சர்தாரியா
சண்டைபயிற்சி: விக்ரம் மூர்
ஆடை வடிவமைப்பு: அருந்ததி அஞ்சனப்பா
வி எப் எக்ஸ், படத்தொகுப்பு மற்றும் இயக்கம்: சச்சின்

மீரா மிதுனுக்கு பதிலாக டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனரானார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன்.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருப்பேன்” என பேசிவந்தார்.

இந்த நிலையில் மீரா மிதுனிடம் இருந்து அந்த பதவியை பறித்து அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்.. அவருக்கு பதிலாக திருச்சியைச் சேர்ந்த பிரபலமான டாக்டர் ஏ.முகமது ஹக்கீம் என்பவர் தற்போது அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் தன் தன்னை பற்றிய போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை சமர்ப்பிக்காததால்தான் இந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது..

அதுமட்டுமல்ல மீரா மிதுன் வகித்துவந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு என எந்த அதிகாரமும் கிடையாது.. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது தற்போது அந்தப் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதிகாரப்பூர்வமாக வெளியானது ஆர்கே. நகர் படம்; அப்போ பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்கே. நகர் இடைத்தேர்தல் நடத்திய பரபரப்பை யாராலும் மறக்கமுடியாது. ஓட்டுக்கு பணம் முதல் விஷால் தேர்தல் மனு என அதிரடியாக பட்டைய கிளப்பியது.

அந்த சமயத்தில் தான் தயாரிக்கும் படத்திற்கு ஆர்கே. நகர் என பெயர் வைத்தார் வெங்கட் பிரபு.

இந்த படத்தை சரவணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் வைபவ், சனா, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரானாலும் பல பிரச்சினைகளால் படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் படத்தை தியேட்டரில் வெளியிடாமல், நேரடியாகவே நெட்பிளிக்ஸில் வெளியிட்டுள்ளனர்.

அதுபோல் வெங்கட்பிரபு இயக்கியுள்ள பார்ட்டி என்ற படமும் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் உள்ளது. அதான் நிலைமை என்னவோ?

முக்தா பிலிம்ஸ் வைர விழா… கமல் கௌதமி மீண்டும் சந்திப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முக்தா பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது.

அண்மைக்காலமாக படங்களை இவர்கள் தயாரிக்கவில்லை.

இந்த நிலையில் இதன் வைர விழா, 22ம் தேதி, சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிறுவனம் தயாரித்த 41 படங்களில், பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

எனவே அவர்கள் இந்த வைரவிழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சிம்லா ஸ்பெஷல், நாயகன் படங்களில் கமல் நடித்துள்ளார்.

அதுபோல் வாய்க்கொழுப்பு, பிரம்மச்சாரி படங்களில் கவுதமி நடித்துள்ளார்.

எனவே இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் சந்திக்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.

பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்த கமல் கவுதமி இருவரும் சில வருடங்களுக்கு முன் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows