தல-தளபதி ரசிகர்களுக்கு விடிய விடிய புத்தாண்டு விருந்து

தல-தளபதி ரசிகர்களுக்கு விடிய விடிய புத்தாண்டு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithடாப் நடிகர்களின் சில படங்களுக்கு எப்பவும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவே, ரசிகர்களுக்காக அந்தந்த நடிகர்களின் படங்களை சிறப்பு காட்சியாக சில திரையரங்குகள் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் அஜித், விஜய் படங்களை புத்தாண்டு தினத்தில் திரையிட இருக்கிறார்களாம்.

விஜய்யின் துப்பாக்கி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் வீரம் படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிட உள்ளனர்.

இந்த காட்சிகளுக்கு முன்பதிவை டிசம்பர் 1ஆம் தேதியே திறக்கின்றனர்.

ஹ்ம்… அப்போ விடிய விடிய தல-தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்..

சமைக்க கற்றுக் கொடுத்தவரை இழந்த வருத்தத்தில் அஜித்

சமைக்க கற்றுக் கொடுத்தவரை இழந்த வருத்தத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sadநடிப்புத் துறையை தாண்டி, பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி என பல துறைகளில் சாதித்து வருபவர் அஜித்.

மேலும் இவர் சமைக்கும் பிரியாணிக்கு திரையுலகில் பலரும் ஆசைப்படுவதுண்டு.

பெரும்பாலும் தன் படக்குழுவினருக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் உண்டு.

இந்த சுவையான பிரியாணியை சமைக்கும் கலையை இவர் கற்றது இயக்குனர் சுபாஷ் அவர்களிடம் தானாம்.

பவித்ரா படத்தில் நடித்தபோது, சுபாஷிடம் இருந்து இதை கற்றுக் கொண்டராம்.

இந்நிலையில் சுபாஷ் நேற்று மரணமடைந்தார். இதனால் அஜித் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

திருக்குறளின் இன்பத்து பாலுக்கு இசையமைத்த தாஜ்நூர்

திருக்குறளின் இன்பத்து பாலுக்கு இசையமைத்த தாஜ்நூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director tajnoorபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள்.

அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.

அதுவும் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு மாதிரியான இசையை தருவது பெரிய சவால்தான்.

அந்த வகையில், இன்பத்துபாலில் இருந்து ஏழு பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நாட்டுப் புறப் பாடல் மெட்டில் இசை சேர்த்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் எழுதியிருக்கும் திருக்குறள் விளக்கவுரைக்கு தாஜ்நூர் அமைத்திருக்கும் இசை, தமிழிலக்கிய உலகத்தின் பெருமைமிகு படைப்பு என்பதை பாடல்களை கேட்ட மாத்திரத்தில் ஒப்புக் கொள்ள முடியும்.

இந்த ஏழு குறள்களுக்கும், தாஜ்நூர் இசையமைக்க இன்னொரு புறம் தன் தூரிகையால் வண்ணம் சேர்த்திருக்கிறார் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது.

‘நாட்டுக்குறள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திருக்குறள் பாடல்களை நேரடியாக மேடையிலேயே இசைத்து (லைவ்), ஒலிநாடாவாக வெளியிடும் விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது.

நவம்பர் 27 ந் தேதி மாலை 6 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சி.

இசை அரங்கேற்றம், பாடல் ஓவிய நூல் மற்றும் ஒலிப்பேழை வெளியீடு என்கிற அழுத்தமான உள்ளடங்கங்களோடு நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகரும் ஓவியருமான சிவகுமார், நீதியரசர் மகாதேவன், செல்வி பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் சு.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

tajnoor-thirukural

சினிமா பின்னணி இசைக்கலைஞர்களும் பங்குபெறுகிறார்கள்.

விழாவில் பாடகர்கள் வேல்முருகன், அந்தோணிதாஸ், நின்சி வின்சென்ட், செல்வி கவிதா கோபி. சின்னப்பொண்ணு, மீனாட்சி இளையராஜா, பிரபு ஜினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பு திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரு சங்கர சரவணன். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்குறளின் முதல் அச்சுப் பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்படுகிறது.

விஜய்யை ஏன் இப்படி பண்றாங்க? ராம் சினிமாஸ்க்கு ஜிவி. பிரகாஷ் சப்போர்ட்

விஜய்யை ஏன் இப்படி பண்றாங்க? ராம் சினிமாஸ்க்கு ஜிவி. பிரகாஷ் சப்போர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay gv prakash stillsதிருநெல்வேலியில் பிரபலமான தியேட்டர் ராம் சினிமாஸ்.

இதன் தியேட்டர் நிர்வாகம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தாங்கள் வெளியிடும் படங்களை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது….

“விஜய் படங்களை புரோமோட் செய்யும்போது ஏன் ஹேட் பண்றாங்க.? அஜித்தின் வேதாளம் படத்தையும் இதே போல புரோமோட் செய்தோம்.

சில ரசிகர்கள் எரிச்சல் செய்கிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளனர்.

அவர்களின் இந்த ட்வீட்டை ஜி.வி. பிரகாஷ் ரீட்வீட் செய்துள்ளார்.

G.V.Prakash Kumar Retweeted
Ram Muthuram Cinemas ‏@RamCinemas
Why so much of hatred when we promote Vijay movies? We did the same kind of promotion for Vedalam last year Some fans are just irritating

‘சிங்கம்3’ பாடல் தகவல்களை வெளியிட்ட சூர்யா டீம்

‘சிங்கம்3’ பாடல் தகவல்களை வெளியிட்ட சூர்யா டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suirya anushka shruthiஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ்3 படத்தின் பாடல்கள் வருகிற நவம்பர் 27ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் விவரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடலின் காட்சியை டிசைன் செய்துள்ளனர்.

எனவே, தற்போது S3 படத்தின் பாடல் விவரங்கள் முழுமையாக வெளியாகிவிட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள எஸ்3 (சிங்கம் 3) ட்ராக் லிஸ்ட்…

1) ஓ சோன் சோன்……

பாடல் ஆசிரியர் :பா. விஜய் (ராப் வரிகள் விக்கி)
பாடியவர் : ஜாவேத் அலி, ப்ரியா சுப்ரமணியன், விக்கி

2) முதல்முறை……
பாடல் ஆசிரியர் : தாமரை (ஆங்கில வரிகள் ரம்யா)
பாடியவர் : ஹரிஷ் ராகவேந்தர், ஸ்வேதா மேனன், ரம்யா, கார்த்தி

3) யுனிவர்சல்……

பாடல் ஆசிரியர் : விவேகா, தினேஷ்
பாடியவர் : கிரிஷ்டோபர், தினேஷ், கிரிஷ்

4) ஹீ இஸ் மை ஹீரோ……
பாடல் ஆசிரியர் : இயக்குனர் ஹரி, மாளவிகா மனோஜ்
பாடியவர் : மாளவிகா மனோஜ்

5) ஒய் ஒய் ஒய் ஒய் ஒய்ஃபை……
பாடல் ஆசிரியர் : இயக்குனர் ஹரி, ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக், கிரிஸ்டோபர், நிகிதா

6) மிஷன் டூ சிட்னி……
பாடல் ஆசிரியர் : இயக்குனர் ஹரி, லேடி காஷ்
பாடியவர் : லேடி காஷ்

7) தீம் சாங்

பாடல் ஆசிரியர் : இயக்குனர் ஹரி
பாடியவர் : விக்கி

விஜய்-அட்லி இணையும் படம் ரஜினி பட ரீமேக்.?

விஜய்-அட்லி இணையும் படம் ரஜினி பட ரீமேக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeபரதன் இயக்கியுள்ள பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதை சில தினங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் மற்ற கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் சூட்டிங்கை தொடங்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் ரஜினியின் சூப்பர் ஹிட்டான அண்ணாமலை படத்தின் ரீமேக் ஆக இருக்கும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

More Articles
Follows