‘வாட்ச்மேன்’ படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறித்து ஜிவி. பிரகாஷ்

‘வாட்ச்மேன்’ படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1M Views For Toto Promo Video Song From Gv Prakashs Watchman ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிவி. பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது.

கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது.

இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது…

“இந்த வெற்றி எங்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.

இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன்.

அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது.

உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

1M Views For Toto Promo Video Song From Gv Prakashs Watchman

வாட்ஸ்அப் வாழ்த்துக்களை நீங்களே எழுதுங்கள்; தமிழ் வளர்க்க தங்கர் பச்சான் யோசனை

வாட்ஸ்அப் வாழ்த்துக்களை நீங்களே எழுதுங்கள்; தமிழ் வளர்க்க தங்கர் பச்சான் யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar Bachan request Tamil peoples to wish in our languageஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே படுக்கையில் கிடக்கும் கைப்பேசியைத் தான் முதலில் தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning போன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம்.

அப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது? யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள், வெளிநாட்டு மனிதர்களின் படங்கள் என்று வரிசைகட்டி நிற்கின்றன.

3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை உடைய நம் மொழியில்
படித்தவர்கள் ஆகிய நாம் நம் வாழ்நாள் முழுவதுமே அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்கின்றோம். படிக்காத மக்களிடம் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பத்தாயிரம் ஆண்டுகளாக போற்றி, காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த தமிழ்மொழி கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பயன்பாட்டில் அழிந்து தேய்ந்து குறைந்துவிட்டது.

நம்முடைய தலைமுறையே 1000 சொற்களுக்குள் அடங்கி விட்ட நிலையில் நமது அடுத்த தலைமுறை 500 சொற்கள் அதற்கு அடுத்த தலைமுறை 200, 100 சொற்கள் என்று பயன்பாட்டில் குறைந்துகொண்டே வந்து விடும்.

அண்மையில் வெளியான கூகுல் பிபிசி ஆய்வின்படி உலகளவில் அதிக வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்வது இந்தியர்கள்தான் என்றும், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

இந்த வாழ்த்துச் செய்திகளில் உள்ள எதை எதையோ பகிர்வதை விட்டு விட்டு நாமே சிந்தித்து நம் கைகளால் ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்பத் தொடங்கும் பொழுது நம்முடைய தமிழ் மொழியானது என்றும் நிலைத்து நிற்கும்.

நம்முடைய எழுதும் பழக்கத்தினால் மூளையில் சிந்திக்கும் சொற்களை கைகளால் அந்த வெள்ளை காகிதத்தில் எழுதும் பொழுது சிந்தனை ஆற்றலானது தூண்டப்படுகிறது.

இதன் மூலம் நம்மிலிருந்து மறைந்த, புதைந்து கிடக்கும் அழிந்து போன நம்முடைய சொற்கள் மீண்டும் நம்முடைய பயன்பாட்டுக்கு வரும்.

இதனை ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

செய்வீர்களா தமிழர்களே!

இப்படிக்கு
தங்கர் பச்சான்.

Thangar Bachan request Tamil peoples to wish in our language

வழுக்கை தலை மனிதனின் வலியை சொல்லும் ‘ஒரு மயிரும் இல்ல..’

வழுக்கை தலை மனிதனின் வலியை சொல்லும் ‘ஒரு மயிரும் இல்ல..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Raja praises Oru Mayirum Illai Short film‘தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டைப் பெற்றுள்ள குறும்படமான ‘ஒரு மயிரும் இல்ல’ அனைவரின் கவனத்தைக் கவர யூடியூப் சேனலில் வெளிவருகிறது.

இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள் நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.

நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை அழகாக, கலகலப்பாக, சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் ஷா.

அந்தக் கதை நாயகன் தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகைகள், ஷாம் பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி “மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் “என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான்.

யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல்கிறான். அங்கே தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டு 10 நிமிடத்துக்குள் குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷா .இப்படத்தைப் பார்த்த’ தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டியதுடன் “எப்போ சினிமாவுக்கு வரப் போறே? சீக்கிரம் வா” என்று வாழ்த்தியிருக்கிறார்.

மற்றும் இக்குறும்படத்தை பார்த்த இயக்குனர் ரத்தின சிவா பாராட்டியுள்ளார்.

விரைவில் இயக்கவுள்ள தன் திரைப்படத்துக்கான கதையமைப்பு ,முன் தயாரிப்பு என மும்முரமாக இருக்கும் தன்னை யாரும் சம்பிரதாயமாக வாழ்த்த வேண்டாம்.

இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு மதிப்பெண் போட்டு விட்டு வாழ்த்தட்டும் என்கிறார் நம்பிக்கையுடன் .

விக்னேஷ் ஷா சினிமாவுக்கான படை திரட்டி வருகிறார். விரைவில் போர் தொடுப்பார் என நம்பலாம்.

Director Mohan Raja praises Oru Mayirum Illai Short film

https://youtu.be/WsSlJdf3xzM

அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga nowதன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் ‘கேரளா சாங்’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கதை, திரைக்கதை மற்றும் வசனம் – ஸ்ரீகாந்த் & தேவேஷ் ஜெயச்சந்திரன், பாடல்கள் – ‘ஹிப்ஹாப்’ ஆதி & அறிவு, கலை – குருராஜ், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பு – என்.மணிவண்ணன், நடனம் – சந்தோஷ் & சிவரோக் சங்கர், காட்சி அமைப்பு – சனத், உடைகள் – ப்ரீத்தி நாராயணன், டிசைன்ஸ் – அமுதன் ப்ரியன் மற்றும் மற்ற தொழில்நுட்ப குழு.

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga now

ரஜினி-கமலின் பாராட்டை பெற்ற மாரீஸ் விஜய்க்கு சர்வதேச பெருமை

ரஜினி-கமலின் பாராட்டை பெற்ற மாரீஸ் விஜய்க்கு சர்வதேச பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Marees Vijay got world level recognition‘விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய்.

குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார்.

இவர் இசையில் வில்லவன் எனும் மலேசிய தமிழ் படம் உருவானது.

இப்படத்தின் டிரெய்லர் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட் போட்டியின்போது பிரம்மாண்ட அரங்கில் வெளியிடப்பட்டது.

இதைப்பார்த்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் படக்குழுவினரை பாராட்டினார்கள்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவரது இசைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019 – ல் சிறந்த சர்வதேச இசை அமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றிருக்கிறார்.

இந்த விருது விழா ஜனவரி 31ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Maris Vijay got Best International Music Director award

Music composer Maris Vijay got Best International Music Director award

எனக்கு உள்ளூரு; நேத்ராவுக்கு வெளிநாடா? வெங்கடேஷிடம் சரத்குமார் கேள்வி

எனக்கு உள்ளூரு; நேத்ராவுக்கு வெளிநாடா? வெங்கடேஷிடம் சரத்குமார் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarathkumar speech about Venkatesh on Nethra audio launchஇயக்குனராக ஜொலித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தற்போது சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தயாரித்து, இயக்கியுள்ள படம் நேத்ரா.

இதில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார்.

படம் தயாராகி நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை நடிகர் தியாகராஜன் தனது ஸ்டார் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார்.

வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கே.பாக்யராஜ், சரத்குமார், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, வசந்தபாலன் உட்பட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துக் கொண்ட சரத்குமார் பேசியதாவது..

“சொன்ன தேதிக்குள் ஷூட்டிங்கை முடிக்கும் சில இயக்குநர்களில் வெங்கடேஷும் ஒருவர். இந்தப் படம் முழுக்க முழுக்க கனடாவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.

என்னை வைத்துப் படம் எடுக்கும்போது மட்டும் உள்ளூரிலேயே படம் எடுத்தார்’’ என பேசினார்.

இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:

எனக்கு ஒரு திகில் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காகவே இந்த கதையை தயார் செய்தேன்.

கதை வெளிநாட்டில் நடப்பதால் கனடா நாட்டில் 95 சதவிகித படப்பிடிப்பு நடந்தது. திகில் படமாக இருந்தாலும், காமெடி செண்டிமென்ட் கலந்து உருவாகி உள்ளது.

தற்போது படத்தை தியாகராஜன் வெளியிடுகிறார். பிரசாந்த் இல்லாத ஒரு படத்தை இவர் வெளியிடுவது இதுவே முதல் முறை. அதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் வருகிற பிப்ரவரி 8ந் தேதி படம் வெளிவருகிறது. என்றார்.

Actor Thiagarajan bagged theatrical rights of Nethra movie

Sarathkumar speech about Venkatesh on Nethra audio launch

nethra movie audio launch

 

More Articles
Follows