*சிவ சிவா* படத்தில் 16 புது முகங்களை அறிமுகப்படுத்தும் ரமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம் ‘சிவ சிவா’ . இப்படத்தை ரமா இயக்குகிறார்.

சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல் நல்லவை செய்யும் கருவியாக எண்ணிக் களத்துக்கு வரும் இவர், கதையோடு சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் இணைந்த படைப்பாக ‘சிவ சிவா’வை உருவாக்கவுள்ளார்.

சினிமாவுக்குத் தேவையான காதல், நட்பு, நகைச்சுவை ஆகிய மசாலா மணத்துடன் சிந்தனைக் தூவல்களைக் கலந்து உருவாகவுள்ளது சிவ சிவா.

படத்துக்கு ஒளிப்பதிவு ஹரிகாந்த், வசனம் ‘வீடியோ ஜாக்கி ‘மொக்க மகி.

இப்படத்தை எஸ்.ஆர். ஜி ரிதம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று ஐயப்பன் தாங்கலில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ‘ராட்டினம்’ கே.எஸ். தங்கசாமி, நடிகர் சந்தோஷ் பிரதாப் , நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

16 New artist will be introduced in Shiva Shivaa

குடும்பத்தோட படம் பார்க்க அழைக்கிறார் *முரட்டு குத்து* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்…

‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள்.

அவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.

நடிகை உமா பத்மநாபன் பேசுகையில்..

‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார்.

இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்.. ‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.

என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும்.

அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள்.

ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன்.

கடைக்குட்டி சிங்கம் போல் கிராமிய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.’ என்றார்.

Ghajinikanth movie will be pakka family entertainer says Santhosh P Jeyakumar

எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2வை அவாய்ட் பன்னுங்க ஆர்யா… – கபிலன் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில்…

‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம்.

அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன்.

ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம்.

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார்.

Kabilan vairamuthu request to Arya to avoid Enga Veetu Mapillai season 2

ஹிந்தி ரசிகன் எதிர்பார்ப்பையும் *கழுகு-2* பூர்த்தி செய்யும்… – சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசி முடிக்கின்றனர்.

மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள் மூலம் தான் வாங்கி வருகின்றனர்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் முழுதாக சேருவதில்லை.

தற்போது தமிழக விநியோகஸ்தர்களில் முக்கியமான ஒருவரான சிங்காரவேலன் ‘கழுகு-2’ படத்தின் மூலம் இந்தி விற்பனையில் ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளார்.

லிங்கா படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர் போராட்டத்தின் மூலம் பெற்றுத்தர காரணமாக இருந்தவர்தான் இந்த சிங்காரவேலன்.

நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்துவரும் கழுகு-2 படத்தின் இந்தி உரிமையை இங்குள்ளவர்கள் ரூ.15 லட்சத்திற்கு கேட்டனர்.

அதிலும் இதற்கு முன் கிருஷ்ணா நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் இதுவே அதிகம்தான் என மீடியேட்டர்கள் கூறினார்களாம்.

ஆனால் ‘கழுகு-2’ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரம் செய்து தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தையும் தமிழ் திரைப்பட துறை வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் சிங்காரவேலன்.

கூடவே இது கிருஷ்ணாவிற்கான பட வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ‘கழுகு-2’ படத்தின் பட்ஜெட்டில், 25% தொகை இந்தி உரிமை மூலமாகவே கிடைத்துவிடும்.

என்கிற சிங்காரவேலன், “தமிழ் படங்களுக்கான இந்தி உரிமை வியாபாரம் நடிகர்களை மட்டும் வைத்து விலை பேசப்படுவது இல்லை சண்டைக் காட்சிகள், விலங்குகள் இடம்பெறும் காட்சிகள் படத்தில் குறைந்தபட்சம் 20% இருந்தால் அப்படத்தின் விலை அதிகரிக்கிறது, அதனை இங்குள்ள மீடியேட்டர்கள் கூறுவதும் இல்லை, அதன் பலனை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சிப்பதும் இல்லை” என்கிறார்.

தென்னிந்தியாவில் தயாராகும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களின் இந்தி உரிமைகளை அதிகளவில் வாங்கி வரும் மும்பையை சேர்ந்த கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவை நேரடியாக தொடர்பு கொண்டபோதுதான் இந்த விபரங்கள் தனக்கு தெரிய வந்தது என்கிறார் சிங்காரவேலன்.

கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, ‘கழுகு-2’ படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் மேற்கு தொடர்ச்சி மலையை வசிப்பிடமாக கொண்டுள்ள புலி, யானை மிருகங்களும் படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் இடம் பெறுவதுதான் ‘கழுகு – 2′ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரமாக்கியுள்ளது,

“இப்படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதற்கு காரணம் எங்களது திட்டமிட்ட தொலைநோக்கு பார்வைதான். இந்தி பட ரசிகன் தமிழ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை கழுகு – 2 படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தொடங்கும் முன் இதனை தயாரிப்பாளர்கள் இயக்குனருடன் இணைந்து திட்டமிட்டால் பட்ஜெட் படங்களுக்கான பிரதான வியாபாரத் தளமாக இந்தி உரிமை இருக்கும்” என்கிறார் சிங்காரவேலன்.

தான் மட்டுமே பலனடைந்தால் போதாது என நினைக்கும் சிங்காரவேலன், இதே கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவுடன் சிறு பட தயாரிப்பாளர்களை சந்திக்க வைக்கும் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

“பெரிய பட்ஜட் படங்களை கோடிகளை கொட்டி எடுத்து சிரமப்படுவதற்கு பதிலாக கிருஷ்ணா போன்றவர்களை வைத்து குறுகிய கால பட்ஜெட் படங்களை தயாரித்தால் குறைந்த பட்ச லாபம் நிச்சயமாக கிடைக்கும்” என்கிறார்’ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரிதிநிதி ‘முரளி’.

Kazhugu 2 movie hindi rights bagged by Manis sha at huge price

விவேக் படத்தில் *எழடா.. எழடா…* பாடலை பாடிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது.

இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

இதனால்தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார்.

அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி.

மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.

கணேஷ் சந்திரசேகரன் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

Actor Dhanush sings for actor Viveks movie Ezhumin

*8 தோட்டாக்கள்* பட நாயகன் வெற்றி நடிக்கும் *ஜீவி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது.

ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

“ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்” என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது…

“எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே.

அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது.

ஆனால் கோபிநாத் இத்தகைய திறன்களை நிரூபித்தது நினைத்து நான் மகிழ்கிறேன்” என்றார்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “தயாரிப்பாளரின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.

எனக்கு படைப்பு சுதந்திரத்தை வழங்குவதில் அவர் உண்மையாக செயல்பட்டது என் வேலையை மிகவும் எளிதாக்கியது.

மேலும், அத்தகைய குணங்களை கொண்ட ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது எந்தவொரு இயக்குனருக்கும் ஒரு வரம்.

ஆனால் அதுவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடிக்கவும் மற்றும் அவருக்கு உறுதியளித்தபடி முழு படத்தை சிறப்பாக வழங்கும் கூடுதல் பொறுப்பையும் என் தோள்களில் ஏற்றி உள்ளது” என்றார்.

தீவிரமான சஸ்பென்ஸ் விஷயங்களை கொண்ட இந்த ஜீவி, விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளை பற்றி பேசியிருக்கிறது.

8 தோட்டாக்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்த வெற்றி, வழக்கத்திற்கு மாறான நாயகன் கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு முறை நடித்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் அஸ்வின் நாயகியாக நடித்திருக்கும் மோனிகாவுக்கும் நன்றி கூறுகிறார். “படத்தின் சில காட்சிகளில் இந்த கலைஞர்களிடம் இருந்து திறமையான நடிப்பு தேவைப்பட்டது.

குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தாலும், அவர்கள் சிறந்த நடிப்பை கொடுத்தனர். மற்ற படங்களில் நடித்து வந்தாலும் நாங்கள் கேட்ட தேதிகளை ஒதுக்கி முழு ஆதரவு தந்தார் நடிகர் கருணாகரன் “என்கிறார் ஜீவி படத்தின் இயக்குனர் கோபிநாத்.

இறுதியாக, ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லி பேசும்போது, “படப்பிடிப்பு முழுவதும் அவர் பிரதான ஆதரவு தூணாக இருந்தார்.

குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய அழுத்தத்தில் நாங்கள் இருந்தபோது, அவரது பங்களிப்பு தான் எங்களுக்கு சிறப்பாக படத்தை முடிக்க உதவியது” என்றார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டராக பணிபுரிவதும், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பதும்,படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் லைன் ப்ரொடுயூசராக முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவது படத்துக்கு பலம்.

பாபு தமிழ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனம் படத்தின் தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

A Racy Thriller By Genre Jiivi movie wrapsup Shoot

More Articles
Follows