சமுத்திரக்கனியின் ஆண் தேவதை பட டிரெய்லரை வெளியிடும் 11 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாமிரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

இவருக்கு ஜோடியாக ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

பஃக்ருதீன் முஸ்தபா குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனித்து வருகிறார்.

மறைந்த பாலசந்தரின் மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக ‘சிகரம் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி இப்படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார் தாமிரா. மேலும், இப்படத்தை தன் குருநாதர் பாலசந்தருக்கு சமர்ப்பணம் செய்யவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று மார்ச் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இந்த டிரைலரை ஒரே நேரத்தில் 10 சினிமா பிரபலங்கள் வெளியிடுகின்றனர்.

இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், பா. ரஞ்சித், வெற்றிமாறன், சீனுராமசாமி, ஏஆர். முருகதாஸ் ஆகிய இயக்குனர்களும், நடிகர்கள் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, உதயநிதி ஆகிய நடிகர்களும் இதனை வெளியிட உள்ளனர்.

ஒரு படத்தின் டிரைலரை இவ்வளவு பிரபலங்கள் வெளியிடுவது இதுவே முதன்முறையாகும் என கூறப்படுகிறது.

11 Celebrities releasing Aan Devathai Trailer 15th March 2018

 

உளிரி-யில் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் சுரேஷ்-சயனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “உளிரி“.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “உளிரி“ எனும் மீன் இனமே இன்று அழிக்கப்பட்டு விட்டது.

அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவுற்று, இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.

நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.

படப்பிடிப்பு கும்பகோணம், ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் R.ஜெயகாந்தன்.

இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – வெங்கட்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கலை – சாமி கலைக்குமார்
ஸ்டன்ட் – மெட்ரோ மகேஷ்
நடனம் – மது மாலிக்
தயாரிப்பு மேற்பார்வை : A நாகராஜ்
தயாரிப்பு – எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்
எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை – R.ஜெயகாந்தன்

Uliri movie is about Village life style

 

தனுஷை தொடர்ந்து பாலிவுட்டுக்கு செல்லும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்திக்கு சென்று அங்கு ஜொலித்த நடிகைகள் பலர் உண்டு.

ஆனால் நடிகர்களில் ஒரு சிலரே உள்ளனர்.

ரஜினி, கமல் படங்களுக்கு இந்தியில் தனி மார்கெட் உள்ளது. இவர்கள் நேரிடையான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இன்றைய இளைய நடிகர்களில் தனுஷ் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

ரஞ்சனா மற்றும் ஷமிதாப் என்ற 2 படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கும் ஹிந்தி பட வாய்ப்பு வந்துள்ளது.

நாச்சியார் படத்தில் ஜிவியின் நடிப்பை பார்த்த டைரக்டர் அனுராக் காஷ்யப் அவரை அழைத்துள்ளாராம்.

தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் ஹிந்திக்கு வருகிறேன் என சொல்லியிருக்கிறாராம் ஜிவி. பிரகாஷ்.

Actor GV Prakash plan to enter in Bollywood cinema

ஹீரோஸ் சம்பளத்த குறைச்சாலே போதும்; சிவசக்தி தியேட்டர் திறப்பு விழாவில் கே.ராஜன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம்.

சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.

“அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்த திரையரங்கை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த காலத்திற்கேற்ப நிறைய படங்களை வெளியிடும் வகையில் இரண்டு திரையரங்குகளாக மாற்றி அமைத்திருக்கிறோம்.

ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப படங்களை தேர்ந்தெடுத்து பார்த்து மகிழலாம். இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அனைத்து மொழி படங்களும் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.

சினிமாவில் அதிநவீன தொழில்நுட்பங்களான டால்பி அட்மாஸ் சவுண்டும், 4கே திரையையும் நிறுவியிருக்கிறோம். Pro VA Barco இந்த வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறது.

பெண் ரசிகைகளுக்கு ஏற்ற வகையில் மிகவும் பாதுகாப்பான திரையரங்காகவும் எங்கள் திரையரங்கம் இருக்கும்.

இரண்டு திரையரங்குகளிலும் முறையே 487, 265 பேர் அமர்ந்து படத்தை பார்க்கலாம். விசாலமான கார் பார்க்கிங், கேண்டீனில் மிக குறைந்த விலையில் உணவு பொருட்களும் கிடைக்க வழி வகை செய்திருக்கிறோம்” என்றார் திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம்.

விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் கூறும்போது, “சென்னை சிட்டியை தாண்டி பாடியில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரையரங்கை அமைத்திருப்பது அவர்கள் சினிமாத்துறையின் மீது வைத்துள்ள அபிமானத்தை காட்டுகிறது.

திரையுலகம் மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், மக்களை மகிழ்விக்கும் நல்ல நோக்கத்தோடு இவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. படித்த மக்கள் விரும்பும் வகையில், அவர்களின் ரசனைக்கேற்றவாறு ஒளி, ஒலி அமைப்புகளை அமைத்திருக்கிறார்கள்.

சினிமாத்துறை நடத்தும் வேலை நிறுத்தத்தால் ஃபெப்ஸி தொழிலாளர்கள் உட்பட சினிமாவை நம்பி இருக்கும் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

இவர்களை தவிர்த்து திரையரங்கை மூடுவதால் ஒவ்வொரு திரையரங்கிலும் 50 பேர் வீதம் அதில் பணி புரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு முழுக்க 1100 திரையரங்குகள் உள்ளன.

மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு கட்டண குறைப்பு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ரத்து செய்தாலே அனைத்து தரப்புக்கும் அது சாதகமாக அமையும்.

நடிகர்கள் சம்பளத்தை குறைத்தாலே பாதி பிரச்சினை முடியும். இன்னும் பத்து நாட்களில் இந்த நிலை சீராக வேண்டும். சினிமா தொழில் வழக்கம் போல நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Pro VA நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சித்தார்த் கூறும்போது, “சிவசக்தி திரையரங்கிற்கு பார்ட்னராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் பல திரையரங்குகளில் எங்கள் நிறுவனம் தான் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு முழுக்க 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் Pro VA டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது.

இன்னும் பல திரையரங்குகள் எங்கள் சேவையை பெற எங்களோடு பேசி வருகிறார்கள். யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாத படி படங்களை மிகவும் பாதுகாப்பாக திரையரங்குகளுக்கு வழங்குகிறோம்.

பல திரையரங்குகள் இன்னமும் ஈ சினிமா, டி சினிமா தொழில்நுட்பத்தில் இருக்கும்போது, நாங்கள் 4கே அதிநவீன, டால்பி அட்மாஸ் என அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறோம்.

தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் என அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் நியாயமான விலையில் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த திரையரங்கில் படத்தை பார்த்த பலரும் ஒளி, ஒலி சிறப்பாக இருப்பதாக கூறி விட்டு சென்றது எங்களுக்கு கிடைத்த நற்சான்றாக எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். சிவசக்தி திரையரங்கம் தொடர்ந்து செயல்படுமா அல்லது வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவீர்களா? என கேட்டதற்கு, மக்களுக்காக நிறைய செலவு செய்து திரையரங்கை தயார் செய்திருக்கிறோம்.

அதனால் தொடர்ந்து படங்களை திரையிடுவோம் என்றார் திரையரங்க உரிமையாளர் படூர் ரமேஷ்.

இந்த திறப்பு விழாவில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே சுதீஷ், கு.க செல்வம், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் சுரேஷ், பூச்சி முருகன், ரெட் ஜெயண்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, சந்திரசேகர் ஐபிஎஸ், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, ட்ரீம் ஃபேக்டரி சக்திவேலன், ஜிகே சினிமாஸ் ரூபன் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். படூர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

New Sivasakthi theatre opened at Chennai Padi

 

விக்ரம் வேதா-வை இந்திக்கு கொண்டு செல்லும் புஷ்கர் காயத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’.

இப்படத்தை புஷ்கர் காயத்ரி என இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து புஷ்கர் காயத்ரி அடுத்து இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘விக்ரம் வேதா’ படத்தை ஹிந்தியில் இயக்க இருக்கிறார்கள்.

தமிழில் விக்ரம் வேதாவை தயாரித்த ஷஷிகாந்தின் ‘ஒய்நாட்’ ஸ்டுடியோஸ், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம், நீரஜ் பாண்டேயின் ‘சி.ஸ்டுடியோஸ்’ ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதில் யார் யார் நடிக்கிறார்கள்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

மகனை தொடர்ந்து மருமகனையும் சினிமாவுக்கு அழைத்து வரும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் மிக முக்கியமானவர் விக்ரம். சினிமாவுக்குக்காக தன்னை அர்ப்பணிக்க கூடியவர் இவர்.

தற்போது இவரது மகன் துருவ் அவர்கள் பாலா இயக்கும் வர்மா படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய ஹீரோ களமிறங்கவுள்ளார்.

விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

நடிப்பு கலையை முறையாக பயின்ற பின்னே இவர் சினிமாவில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானே மாமா தேசிய விருது பெற்றவர் ஆச்சே.. இருக்காதா பின்னே

Vikrams sister son Arjuman turns a hero

More Articles
Follows