2021ல் 10-11-12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து..? அமைச்சர் கருத்து

2021ல் 10-11-12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து..? அமைச்சர் கருத்து

sengottaiyanகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து எனவும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இதனையடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது.? என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது…

பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த 2021 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

10th 11th 12th public exam to cancel in 2021 ?

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு நீக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு நீக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

pondicherry collectorஉலகையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 35,152 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 608 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை கொரோனா தகவல்களை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் இரவு நேரங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஹோட்டல், தொழிற்சாலைகள், பார்கள், கடைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.

COVID-19 lockdown at night time from 10 pm to 6 am lifted in Puducherry

வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து..; முருக கடவுள் காப்பாற்றியதாக குஷ்பூ தகவல்

வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து..; முருக கடவுள் காப்பாற்றியதாக குஷ்பூ தகவல்

khushboo car accidentஇன்று நவம்பர் 18 கடலூர் அருகே பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக குஷ்பு காரில் பயணித்தார்.

அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் மீது லாரி மோதி கார் விபத்தில் சிக்கியது.

குஷ்பு கார் விபத்து என்ற தகவல் பரவியதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

கார் விபத்து தொடர்பாக குஷ்பு கூறியதாவது…

“மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன்.

கடலூர் வேல் யாத்திரைக்காக செல்கிறேன்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்.

என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.

எங்கள் யாருக்கும் காயம் இல்லை. டிரைவரின் புத்திசாலிதனத்தால் அனைவரும் பிழைத்தோம்.

இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவர் கூறியதாவது… இடது கை தோள்பட்டை பகுதியில் வலி உள்ளது. நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் வலிமையடைய செய்கிறது”.

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவை பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

Actress / Politician Khushboo meets with the accident

டி.ஆர் இப்படி செய்வது சரியல்ல..; விஷால் தலைவரானதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினைகள்… – சிவசக்தி பாண்டியன் ஆவேசம்

டி.ஆர் இப்படி செய்வது சரியல்ல..; விஷால் தலைவரானதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினைகள்… – சிவசக்தி பாண்டியன் ஆவேசம்

siva shakthi pandianதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல்.

1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கேஜே.ராஜேஷ் போன்ற இளையவர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட அனுபவசாலிகளும் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்குப் பெரும்பலம்.எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

2. எதிரணியில் டி.ராஜேந்தர் இருக்கிறாரே?

அவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். இப்போது விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது இங்கு வந்து போட்டியிடுவது எதனால்? இதற்கடுத்து இயக்குநர்கள் சங்கம் சரியில்லை என்று ்அங்கு போவாரா? அதற்கடுத்து நடிகர்கள் சங்கம் சரியில்லை என்று அதில் போட்டியிடுவாரா?

கடவுள் நமக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதை நிறைவாகச் செய்யவேண்டும். அதைவிடுத்து அடுத்தடுத்து என்று போனால் எல்லாம் வீணாகும்.

நாங்கள் ஓட்டுக் கேட்டுப் போகும் எல்லா இடங்களிலும் டிஆர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று கவலையுடன் கேட்கிறார்கள்.

3. இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனியாக இருக்கிறதே?

விஷால் தலைவராக இருந்தபின் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக தயாரிப்பாளர்கள் சங்க செயல்பாடு முடங்கியது. அட்ஹாக் கமிட்டியால் முக்கிய முடிவுகள் எடுக்கவியலாது.

இதனால் படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பல சிக்கல்கள். அதனால் உடனடியாக அப்படி ஒரு சங்கம் உருவானது.

ஆண்டவன் அருளால் நாங்கள் வெற்றி பெற்ற பின்பு அவர்களோடு பேசி பிரிந்த சங்கத்தை ஒன்றாக்குவோம்.

4. இராம.நாராயணனோடு பணிபுரிந்தீர்கள்.இப்போது அவர் மகனோடு இணைந்திருக்கிறீர்கள். பயணம் எப்படி இருக்கிறது?

அண்ணன் இராமநாராயணன் அவர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர். அமைதியாக அதே சமயம் மிக ஆளுமையுடன்
செயலாற்றுவார்.

மேசையைத் தட்டி சத்தமாகப் பேசாமலே எதிராளியைப் பணிய வைக்க முடியும் என்பது உட்பட பல நல்ல விசயங்களை அவரிடம் கற்றேன்.

முரளி மிக நல்ல பண்பாளர். சொந்தப்பணத்தில் நற்பணிகள் செய்யக்கூடிய நல்ல மனசுக்காரர்.

அவருக்கு உறுதுணையாக இருந்து
செயலாற்ற இணைந்திருக்கிறேன்.

5. இராம.நாராயணன் காலத்தில் நீங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தீர்கள் என்று சொல்லப்படுகிறதே?

பட வெளியீட்டு நேரத்தில் பைனான்சியர், விநியோகஸ்தர், டெக்னீசியன் உட்பட பல தரப்பட்ட சிக்கல்கள் வரும்.

அவை சம்பந்தமாகப் பேசும் போது சில நேரம் கெஞ்சுவோம், சில நேரம் மிஞ்சுவோம். தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க சத்தமாகப் பேசியதையே கட்டப்பஞ்சாயத்து என்று சொல்லிவிட்டார்கள்.

தயாரிப்பாளர்களின் நலன்களுக்காகவே நான் பேசினேன் என்பதால் இந்தப் பேச்சுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

6. அப்போதைய முதல்வர் கலைஞரோடு நெருக்கமாக இராமநாராயணன் இருந்ததால் சங்கத்துக்குள் அரசியல் தலையீடு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் தவறான தகவல். தலைவர் கலைஞரோடு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சிறு படங்களுக்கு மானியம், நலத்திட்ட வாரியம், பையனூரில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு வீடு கட்டவும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் மற்றும ஸ்டுடியோ அமைக்க இடம்கொடுத்து அரங்கம் அமைக்க உதவினார் தலைவர் கலைஞர்.

அங்கே தொழிலாளர்களிடம் முதலாளிகள் அனுமதி பெற்று படப்பிடிப்புகள் நடத்துகிறோம். உலகிலேயே எங்கும் இல்லாத இந்த நல்ல அதிசயம் நடத்தியவர் கலைஞர்.

அதுமட்டுமின்றி இன்றைக்கு மாடமாளிகை கூடகோபுரமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம் இயங்கும் திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் கலைஞர் அவர்களின் முயற்சியால் நடந்தது.
அதற்குக் காரணம் அண்ணன் இராமநாராயணன்.

இன்றைய ஆட்சியாளர்களும் திரைப்படத்துறைக்கு நல்ல விசயங்கள் செய்கிறார்கள். ஆகவே எங்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் அனுசரனையுடன் சங்கத்தைக்கு நல்லது செய்வோம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டியதில்லை.

7. நீங்கள் படம் தயாரிப்பது குறைந்துவிட்டதே?

படத்தயாரிப்புச் செலவுகள் பன்மடங்கு அதிகமாகிவிட்டதால் அதை குறைத்துக்கொண்டு விநியோகத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன்.

8. அர்ஜுனன் காதலி படம் என்னவானது?

பல காரணங்களால் தாமதமான அந்தப்படம் இப்போது முழுமையாகத் தயாராகிவிட்டது. 2021 சனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிடவிருக்கிறோம்.

9. தொடர்ந்து வேறு படங்கள் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா?

நல்ல கதைகள் அமைந்தால் படத்தயாரிப்பில் இறங்குவேன். அடுத்த ஆண்டு நிச்சயம் அது நடக்கும்.

Producer Siva Shakthi Pandian blames TR

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி வருமானம்..; தேர்தல் அறிக்கையிலேயே நிழல் பட்ஜெட் போட்ட சிங்காரவேலன்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி வருமானம்..; தேர்தல் அறிக்கையிலேயே நிழல் பட்ஜெட் போட்ட சிங்காரவேலன்

singaravelanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி@முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர்.

இவர்களை தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டு துணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ஏற்கனவே பதவியில் இருந்தவர் கதிரேசன். இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்க வளர்ச்சிக்கு, உறுப்பினர்கள் நலனுக்காக எந்த முன்முயற்சியும் எடுக்காதவர் என்கிற அதிருப்தி தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

இராம நாராயணன் தலைவராக இருமுறை பதவியில் இருந்த போது செயலாளராக பதவியில் இருந்தவர் சிவசக்தி பாண்டியன் அவரது பதவி காலத்தில் உறுப்பினர்கள் சம்பந்தபட்ட பிரச்சினைகளை சமரசம் இன்றி அணுகியவர் எவருக்கும் பாதிப்பு இன்றி சமரச தீர்வுகாண முயற்சித்தவர் என்கிற நற்பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. ((இருந்தபோதிலும் பல நேரங்களில் அதிகார தொனியுடன் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் என்கிற கெட்ட பெயரும் இவருக்கு இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது )).

கடந்த ஐந்தாண்டுகளில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரியாதது இவருக்கு பலவீனமாக உள்ளது.

P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இருவரையும் அனைவருக்கும் தெரிந்தாலும் இவர்களுக்கான ஆதரவு அலை தனிப்பட்ட முறையில் இல்லை அணியின் சார்பில் கிடைக்க கூடிய வாக்குகள் இவர்கள் இருவரையும் கடும் போட்டியாளராக களத்தில் நிறுத்தவில்லை.

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்ட R.K.சுரேஷ் கடும் போட்டியாளராக களத்தில் உள்ளார் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்கிற முனைப்புடன் தனிப்பட்ட முறையில் வாக்காளர்களை சந்தித்து கரன்சி கவனிப்பு மூலம் கவர்ந்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

சுயேச்சையாக போட்டியிடும் மதியழகன் தேர்தல் களத்தில் இருக்கிறாரா? என பூதகண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது.

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவேலன்.

வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வரும் இவர் எனக்கு ஓட்டளிப்பதற்கு உங்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் அனைவரது நலனுக்காக போராடுவேன் முதல்முறையாக போட்டியிடும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது

கடந்த காலங்களில் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பாக கதிரேசன், கலைப்புலி தாணு இருவரும் சங்கத்துக்கு வர வேண்டியவருமானத்தை மடைமாற்றிவிட்டதையும், சங்கத்தின் உரிமைகள், கௌரவம் பறிபோன போது தடுக்காமல் கள்ள மௌனம் சாதித்தை ஆதாரபூர்வமாக வெளியிட்டு வருவது கதிரேசனுக்கு எதிரான அலையை அதிகரித்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன் அறிவித்து உள்ளது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையையும், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது

நிழல் பட்ஜெட் தேர்தல் அறிக்கையில் என்னதான் இருக்கிறது என விசாரித்தபோது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் இருக்கும்

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும்.. அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும்.. சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றிபெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்

தேர்தல்களநிலவம் பற்றி மூத்த தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது…

சிங்காரவேலன் ஆர்வக்கோளாறில் போட்டியிடுவதாகவே நினைத்தோம் எங்களிடம் வாக்கு கேட்க வந்தபோது அவரது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள் அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை கேட்டபோது எங்களுக்கு பிரமிப்பு உண்டானது.

” இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த” என கேட்க வேண்டியதாயிற்று. புதிய இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தருவதில் தவறில்லை என்றனர்.

இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்…

Producer Singara Velan on TFPC election

எஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.?

எஸ்ஏசி தொடங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலத் தலைவரும் ராஜினாமா.; கட்சியில இப்போ எத்தனை பேர்.?

தீபாவளிக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி பதிவு தான்

சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.

அந்த கடிதத்தில்…. தனது சிரமத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் சாதாரண உறுப்பினராக இருக்க தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பொருளாளர் பொறுப்பில் இருந்து விஜய்யின் தாய் ஷோபா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எஸ்ஏசி உள்பட கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

SAC Vijay

Another big shock for Vijay father SA Chandrasekar

More Articles
Follows